Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Kaveri nagarinil kadarkarai oraththil
Madhavi aada vanthaal
Oru mannavan kooda vanthaan
Avar pooviri manjaththil porunthiya pinnae
Kannagi vaazhavanthaal adhaiyum
Madhavi kaana vanthaal
Female : Kaveri nagarinil kadarkarai oraththil
Madhavi aada vanthaal
Oru mannavan kooda vanthaan
Female : Thiruvum manamum saernthathuthaanae
Thirumanam endruraippaar
Angu thiru veraagavum manam veraagavum
Iruvarum thanithirunthaar
Female : Maalai aninthavar sooriyan polae
Kaaigindra gunamum ndu
Aanaal mayakkaththil vanthaval venmathi polae
Manathinil kulirvathundu
Manathinil kulirvathundu
Female : Kaveri nagarinil kadarkarai oraththil
Madhavi aada vanthaal
Oru mannavan kooda vanthaan
Female : Naadakaththil varum manamakkal ellaam
Nallisai payilvathundu
Antha naadagam mudinthu thiraiyum vizhunthaal
Iruvarum pirivathundu
Female : Aayirangkaalaththu thendralai polae
Vaazhiya kulamagalae unnai
Aruginil irunthu paarththu kondriruppaal
Azhagiya kalaimagalae…..azhagiya kalaimagalae
Female : Kaveri nagarinil kadarkarai oraththil
Madhavi aada vanthaal
Oru mannavan kooda vanthaan
Avar pooviri manjaththil porunthiya pinnae
Kannagi vaazhavanthaal adhaiyum
Madhavi kaana vanthaal
Madhavi kaana vanthaal
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
மாதவி ஆட வந்தாள்
ஒரு மன்னவன் கூட வந்தான்
அவர் பூவிரி மஞ்சத்தில் பொருந்திய பின்னே
கண்ணகி வாழவந்தாள் அதையும்
மாதவி காண வந்தாள்…….
பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
மாதவி ஆட வந்தாள்
ஒரு மன்னவன் கூட வந்தான்
பெண் : திருவும் மணமும் சேர்ந்ததுதானே
திருமணம் என்றுரைப்பார்
அங்கு திரு வேறாகவும் மனம் வேறாகவும்
இருவரும் தனித்திருந்தார்
பெண் : மாலை அணிந்தவர் சூரியன் போலே
காய்கின்ற குணமும் உண்டு
ஆனால் மயக்கத்தில் வந்தவள் வெண்மதி போலே
மனதினில் குளிர்வதுண்டு
மனதினில் குளிர்வதுண்டு…..
பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
மாதவி ஆட வந்தாள்
ஒரு மன்னவன் கூட வந்தான்
பெண் : நாடகத்தில் வரும் மணமக்கள் எல்லாம்
நல்லிசை பயில்வதுண்டு
அந்த நாடகம் முடிந்து திரையும் விழுந்தால்
இருவரும் பிரிவதுண்டு
பெண் : ஆயிரங்காலத்து தென்றலை போலே
வாழிய குலமகளே உன்னை
அருகினில் இருந்து பார்த்துக் கொன்றிருப்பாள்
அழகிய கலைமகளே……அழகிய கலைமகளே……
பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
மாதவி ஆட வந்தாள்
ஒரு மன்னவன் கூட வந்தான்
அவர் பூவிரி மஞ்சத்தில் பொருந்திய பின்னே
கண்ணகி வாழவந்தாள் அதையும்
மாதவி காண வந்தாள்…….
மாதவி காண வந்தாள்…….