Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Kaveri nagarinil kadarkarai oraththil
Kannagi vaazhnthirunthaal
Oru mannavan maalaiyittaan
Kaveri nagarinil kadarkarai oraththil
Kannagi vaazhnthirunthaal
Oru mannavan maalaiyittaan

Female : Avan pooviri manjaththil porunthidum munbe
Madhavi vaazhavanthaal adhaiyum
Kannagi kaana vanthaal….
Kannagi kaana vanthaal….

Female : Kaveri nagarinil kadarkarai oraththil
Kannagi vaazhnthirunthaal
Oru mannavan maalaiyittaan

Female : Ippadi vaazhvathu inbamendrenni
Illaram kaanugindrom
Adhu eppadiyaavathu vaazhvathendraal
Ellaiyai thaandugirom

Female : Karpena solvathu pengalai mattum
Kaavalil vaiththu vidum
Adhai virpanai porulaai kanavan ninaiththaal
Veedhikku vanthu vidum
Mm….veedhikku vanthu vidum

Female : Kaveri nagarinil kadarkarai oraththil
Kannagi vaazhnthirunthaal
Oru mannavan maalaiyittaan

Female : Vilaimagal oruththu kalaimagalaanaal
Kulamagal ennaavaal ennaavaal
Aval vedhanai migunthu naayagan thanakkae
Sodhanai pennaavaal

Female : Varuvathu varattum naanum penthaan
Vaazhnthae kaattukiraen
Vaazhnthae kaattukiraen
Vaazhnthae kaattukiraen
En vazhkkaiyai iraivan
Kaakkavillai endraal
Koyilai poottugiraen
Koyilai poottugiraen

Female : Kaveri nagarinil kadarkarai oraththil
Kannagi vaazhnthirunthaal
Oru mannavan maalaiyittaan
Mannavan maalaiyittaan
Mannavan maalaiyittaan

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
கண்ணகி வாழ்ந்திருந்தாள்
ஒரு மன்னவன் மாலையிட்டான்
காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
கண்ணகி வாழ்ந்திருந்தாள்
ஒரு மன்னவன் மாலையிட்டான்

பெண் : அவன் பூவிரி மஞ்சத்தில் பொருந்திடும் முன்பே
மாதவி வாழவந்தாள் அதையும்
கண்ணகி காண வந்தாள்……..
கண்ணகி காண வந்தாள்……..

பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
கண்ணகி வாழ்ந்திருந்தாள்
ஒரு மன்னவன் மாலையிட்டான்

பெண் : இப்படி வாழ்வது இன்பமென்றெண்ணி
இல்லறம் காணுகின்றோம்
அது எப்படியாவது வாழ்வதென்றால்
எல்லையைத் தாண்டுகிறோம்

பெண் : கற்பெனச் சொல்வது பெண்களை மட்டும்
காவலில் வைத்து விடும்
அதை விற்பனைப் பொருளாய் கணவன் நினைத்தால்
வீதிக்கு வந்து விடும்
ம்ம்…..வீதிக்கு வந்து விடும்

பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
கண்ணகி வாழ்ந்திருந்தாள்
ஒரு மன்னவன் மாலையிட்டான்

பெண் : விலைமகள் ஒருத்தி கலைமகளானால்
குலமகள் என்னாவாள் என்னாவாள் .
அவள் வேதனை மிகுந்து நாயகன் தனக்கே
சோதனைப் பெண்ணாவாள்

பெண் : வருவது வரட்டும் நானும் பெண்தான்
வாழ்ந்தே காட்டுகிறேன்
வாழ்ந்தே காட்டுகிறேன்
வாழ்ந்தே காட்டுகிறேன்
என் வாழ்க்கையை இறைவன்
காக்கவில்லை என்றால்
கோயிலை பூட்டுகிறேன்……..
கோயிலை பூட்டுகிறேன்……..

பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
கண்ணகி வாழ்ந்திருந்தாள்
ஒரு மன்னவன் மாலையிட்டான்
மன்னவன் மாலையிட்டான்
மன்னவன் மாலையிட்டான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here