Singer : Mathangi

Music by : Sabesh-Murali

Female : Kadalae kadalae
Oru azhagiya manal veedu
Adhilae adhilae
Vilayaadudhu iru manadhu
Viral manalil per ezhudha
Idhazh idhazhil thaen ezhudha
Indha kadhayai yaar ezhudha
Uyirae uyirae indha
Muthamum sathamum thithikkudhae

Female : Kadalae kadalae
Oru azhagiya manal veedu
Adhilae adhilae
Vilayaadudhu iru manadhu

Female : Malarin madiyil
Medhuvaai erumbu oorudhae
Kaniyin maarbil
Anilin nagangal keerudhae

Female : Kurundhogayin kurumbugalil
Silirkkiradhae iru kiligal
Nandoorum narioorum
Oru aatam nadakkiradhae
Kan moodi rasiththaalum
Pala kaatchigal kidaikkiradhae

Female : Mudhaledhu mudivedhu
Marandhadhu marandhadhu
Nadhigal kadalil kalakkum pozhudhu

Female : Kadalae kadalae
Oru azhagiya manal veedu
Adhilae adhilae
Vilayaadudhu iru manadhu

Female : Ilaiyin nuniyil
Nilavin kadhirgal vazhiyudhae
Ilamai vizhiyil
Jarigai kanavu valarudhae

Female : Kulirgiradhe mazhai iravu
Virigiradhe mayiliragu

Female : Penminnal sarindhodum
Indha raaththiri niramenna
Thalladum thalai kodhum
Indha nesaththin sugam enna

Female : Mudhaledhu mudivedhu
Marandhadhu marandhadhu
Nadhigal kadalil kalakkum pozhudhu

Female : Kadalae kadalae
Oru azhagiya manal veedu
Adhilae adhilae
Vilayaadudhu iru manadhu
Viral manalil per ezhudha
Idhazh idhazhil thaen ezhudha
Indha kadhayai yaar ezhudha
Uyirae uyirae indha
Muthamum sathamum thithikkudhae

Female : Kadalae kadalae
Oru azhagiya manal veedu
Adhilae adhilae
Vilayaadudhu iru manadhu

பாடகி : மாதங்கி

இசையமைப்பாளர் : சபேஷ் – முரளி

பெண் : கடலே கடலே
ஒரு அழகிய மணல் வீடு
அதிலே அதிலே
விளையாடுது இரு மனது
விரல் மணலில் பேர் எழுத
இதழ் இதழில் தேன் எழுத
இந்த கதையை யார் எழுத
உயிரே உயிரே இந்த
முத்தமும் சத்தமும் தித்திக்குதே

பெண் : கடலே கடலே
ஒரு அழகிய மணல் வீடு
அதிலே அதிலே
விளையாடுது இரு மனது

பெண் : மலரின் மடியில்
மெதுவாய் எறும்பு ஊறுதே
கன்னியின் மார்பில்
அணிலின் நகங்கள் கீறுதே

பெண் : குறுந்தொகையின் குறும்புகளில்
சிலிர்க்கிறதே இரு கிளிகள்
நண்டூறும் நரி ஊறும்
ஒரு ஆட்டம் நடக்கிறதே
கண் மூடி ரசித்தாலும்
பல காட்சிகள் கிடைகிறதே

பெண் : முதலெது முடிவெது
மறந்தது மறந்தது
நதிகள் கடலில் கலக்கும் பொழுது

பெண் : கடலே கடலே
ஒரு அழகிய மணல் வீடு
அதிலே அதிலே
விளையாடுது இரு மனது

பெண் : இலையின் நுனியில்
நிலவின் கதிர்கள் வழியுதே
இளமை விழியில்
ஜரிகை கனவு வளருதே

பெண் : குளிர்கிறதே மழை இரவு
விரிகிறதே மயிலிறகு

பெண் : பென்மின்னல் சரிந்தோடும்
இந்த ராத்திரி நிறமென்ன
தள்ளாடும் தலை கோதும்
இந்த நேசத்தின் சுகம் என்ன

பெண் : முதலெது முடிவெது
மறந்தது மறந்தது
நதிகள் கடலில் கலக்கும் பொழுது

பெண் : கடலே கடலே
ஒரு அழகிய மணல் வீடு
அதிலே அதிலே
விளையாடுது இரு மனது
விரல் மணலில் பேர் எழுத
இதழ் இதழில் தேன் எழுத
இந்த கதையை யார் எழுத
உயிரே உயிரே இந்த
முத்தமும் சத்தமும் தித்திக்குதே

பெண் : கடலே கடலே
ஒரு அழகிய மணல் வீடு
அதிலே அதிலே
விளையாடுது இரு மனது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here