Singer : Nagore E. M. Hanifa

Music by : Ilayaraja

Male : Kadalilae thanimaiyil ponaalum…
Kanmaniyin ninaivil kalaippaaruven
Alaigalil thathalithaalum
Aval ninaivil mukkulippenae
Adiyae amuthae ithuvae pothum…

Male : Natta nadu kadal meethu
Naan paadum paattu
Chittu aval kaadhoram
Serkkaatho kaathu

Male : Niththam unai kaanaathu
Niththiraiyum thonaathu
Chithiramae muthu radhamae
Etti etti ponaalum
Kettu manam pogaathu
Arputhamae annakkiliyae

Male : Pirinthathu uyiralla udalthaan…
Vittu vilagaathu uyir kaadhalae
Karaiyilae kanni thudithaalae
Kattu maram meethu kaalai thavithaanae
Ithu thaan kaadhalil idai velai..

Male : Vandhavargal povaargal
Pogaathu kaadhal
Vangakkadal meethaanai
Theiaathu kaadhal

Male : Suththi varum puyalenna
Kottugindra idi enna
Anbu vilakkendrum eriyum
Deivathirkku thirai enna
Kaadhalukku maraivenna
Ungalukku endru puriyum

Male : Aattrilae ikkaraiyil nindru…uu..
Akkaraikku thoothu vida koodalaam
Ennaththai solla nadu aazhiyil
Anna paravaiyai naan engu theduven
Adiyae amuthae varunthaathae…

Male : Vittu ini pogathu
Vidivelli thooram
Kattu maram kadal aadi
Karai yerum neram

Male : Uppedukkum neram ondru
Muththedukkum neram indru
Sithiramae seppu kudamae
Kattum undu kaavalum undu
Nammai enna seiyum indru
Niththilamae muthu radhamae

Male : Natta nadu kadal meethu
Naan paadum paattu
Chittu aval kaadhoram
Serkkaatho kaathu

Male : Niththam unai kaanaathu
Niththiraiyum thonaathu
Chithiramae muthu radhamae
Etti etti ponaalum
Kettu manam pogaathu
Arputhamae annakkiliyae

பாடகர்: நாகூர் ஹனிபா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கடலிலே தனிமையில்
போனாலும்
கண்மணி உன் நினைவில்
களைப்பாருவேன்
அலைகளில் தத்தளித்தாலும்
அவள் நினைவில் முக்குளிப்பேனே
அடியே அமுதே இதுவே போதும்

ஆண் : நட்ட நடு கடல் மீது
நான் பாடும் பாட்டு
சிட்டு அவள் காதோரம்
சேர்க்காதோ காத்து

ஆண் : நித்தம் உனை காணாது
நித்திரையும் தோணாது
சித்திரமே முத்துரதமே
எட்டி எட்டிப் போனாலும்
கெட்டு மனம் போகாது
அற்புதமே அன்னக்கிளியே

ஆண் : பிரிந்தது உயிரல்ல உடல்தான்
விட்டு விலகாது உயிர் காதலே
கரையிலே கன்னி துடித்தாளே
கட்டு மரம் மீதில் காளை தவித்தானே
இதுதான் காதலில் இடைவேளை

ஆண் : வந்தவர்கள் போவார்கள்
போகாது காதல்
வங்கக்கடல் மீதாணை
தேயாது காதல்

ஆண் : சுத்தி வரும் புயலென்ன
கொட்டுகின்ற இடியென்ன
அன்பு விளக்கென்றும் எரியும்
தெய்வத்திற்கு திரையென்ன
காதலுக்கு மறைவென்ன
உங்களுக்கு என்று புரியும்

ஆண் : ஆற்றிலே இக்கரையில் நின்று
அக்கரைக்கு தூது விடக் கூடலாம்
எண்ணத்தைச் சொல்ல நடு ஆழியில்
அன்னப் பறவையை நான் எங்கு தேடுவேன்
அடியே அமுதே வருந்தாதே

ஆண் : விட்டு இனி போகாது
விடிவெள்ளி தூரம்
கட்டு மரம் கடலாடி
கரையேறும் நேரம்

ஆண் : உப்பெடுக்கும் நேரம் ஒன்று
முத்தெடுக்கும் நேரம் இன்று
சித்திரமே செப்புக் குடமே
கட்டும் உண்டு காவலும் உண்டு
நம்மை என்ன செய்யும் இன்று
நித்திலமே முத்துரதமே

ஆண் : நட்ட நடு கடல் மீது
நான் பாடும் பாட்டு
சிட்டு அவள் காதோரம்
சேர்க்காதோ காத்து

ஆண் : நித்தம் உனை காணாது
நித்திரையும் தோணாது
சித்திரமே முத்துரதமே
எட்டி எட்டிப் போனாலும்
கெட்டு மனம் போகாது
அற்புதமே அன்னக்கிளியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here