இசை அமைப்பாளர் : ரமேஷ் விநாயகம்
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
ஆண் : கொளத்தங் கரையோரம்
குறும்பாடு மேச்சுவரும்
அய்யா பேரு என்ன
அய்யனாரு சேர்வைங்களா?
ஆண் : காத்து கடுங்காத்து
கண்மறைக்கும் செங்காத்து
அம்மி பறந்துவர
ஆலமரம் விழும் காத்து
ஆண் : இந்தக் காத்தோட
எலந்தமுள்ளுக் காட்டோட
அந்திம காலத்துல
ஆடோட்டி அலைவதென்ன?
ஆண் : ஒட்டுக் கோவணமே
ஓரிடத்தில் நிக்கலையே
அத்துவானக் காட்டுக்குள்ள
ஆடோட்டி அலைவதென்ன?
ஆடோட்டி அலைவதென்ன?
ஆடோட்டி அலைவதென்ன?
ஆண் : உக்காரு தம்பி
ஊருபட்ட கதையிருக்கு
நின்னபடி நான் சொன்னா
நெஞ்சுவலி வந்துவிடும்
ஆண் : படமெடுக்கும் பாம்பிடம்நான்
பட்டகதை சொன்னாக்கா
படத்தச் சுருட்டிவிடும்
படபடன்னு அழுதுவிடும்
ஆண் : படமெடுக்கும் பாம்பிடம்நான்
பட்டகதை சொன்னாக்கா
படத்தச் சுருட்டிவிடும்
படபடன்னு அழுதுவிடும்
ஆண் : என்னக்கிப் பொண்டாட்டி
என்னவிட்டுப் போனாளோ
அன்னைக்கே எம்படுக்கை
திண்ணைக்கு வந்திருச்சு
ஆண் : நாய்தின்னும் சோத்துல
நாலஞ்சு கவளத்த
எனக்கும் போட்டுவச்சான்
எரக்கமுள்ள எம்புள்ள
ஆண் : நாய்தின்னும் சோத்துல
நாலஞ்சு கவளத்த
எனக்கும் போட்டுவச்சான்
எரக்கமுள்ள எம்புள்ள
ஆண் : கோணிச் சாக்கோட
குடும்பம்நான் நடத்தையில
லோகநாதன் மவராசன்
லோன்வாங்கித் தாரேன்னான்
ஆண் : ஏஞ்சாதி என்னான்னு
ஏழுபேரு கேட்டாக
ஏதேதோ கதபேசி
இங்கிலீசில் சிரிச்சாக
ஆண் : நடையா நடக்கவிட்டு
நரம்பெல்லாம் தேயவிட்டு
கமிசன் எடுத்துக்கிட்டுக்
கடன்காசு குடுத்தாக
ஆண் : அவனுக்கு ஐந்நூறாம்
இவனுக்கு முந்நூறாம்
அங்கேங்க வெட்டலேன்னா
ஆடுகுட்டி போடாதாம்
ஆண் : கோட்டகட்ட லோனுவாங்கிக்
குடிசைகட்டி நிக்கிறனே
கோட்டகட்ட லோனுவாங்கிக்
குடிசைகட்டி நிக்கிறனே
ஆனைவாங்க லோன்வாங்கி
ஆடுவாங்கி மேய்க்கிறனே
ஆண் : ஆட்டுக்குப் பட்ட கடன்
அடைபடவே ஆடிருக்கு
லஞ்சத்தில் பட்ட கடன்
நான்கட்டத் தோதிருக்கா?
லஞ்சத்தில் பட்ட கடன்
நான்கட்டத் தோதிருக்கா?
ஆண் : அகிலத்தை எல்லாம்
ஆதிசேசன் சுமக்கிறதாம்
ஆதிசேசனும் சேத்து
அய்யனாரு நாஞ்சுமக்கேன்