Singers : S. Janaki and K. J. Yesudas

Music by : Soundaryan

Lyrics by : Vairamuthu

Female : Hey thaananaanaa thaananaanaa thananaanaa
Hey thananaanaa thananaanaa thananaanaa
Hey thananaanaa thananaanaa thananaanaa

Male : Kadavulum neeyum oru thaaipillai
Iruvarum thanimaram thaanae
Avanukkum unakuum annai illai
Athanaal oorinam thaanae
Nadhi endraal nurai undu
Vaazhvendral kurai undu

Female : Aipasi vandhaal adaimazhai kaalam
Silar aayul muzhuthum aipasi maatham

Male : Kadavulum neeyum oru thaaipillai
Iruvarum thanimaram thaanae
Avanukkum unakuum annaiillai
Athanaal verinam thaanae

Male : Androru naal chinna pillayilae
Un thaai erindhaal sondha kolliyilae
Vendhuvittaai chinna pinjinilae
Patta vadu innum nenjinilae

Male : Thaaimai illaamal yaarum ingillai
Garbam illaamal kadavul ingillai
Thaaipaalai pola theertham vaerillai
Aval vaai sollai pola vedham vaerillai

Male : Kadavulum neeyum oru thaaipillai
Iruvarum thanimaram thaanae
Avanukkum unakuum annai illai
Athanaal verinam thaanae
Nadhiendraal nurai undu
Vaazhvendraal kurai undu

Humming : ……………..

Male : Thee irundhal angae pugaiirukkum
Uravirunthal konjam pagaiyirukkum
Kadalinrunthaal engo karairukkum
Kathaiirunthaal edho mudivirukkum

Male : Vaazhvum varaamal saavum naerammal
Rendum illamaal mannil vaazhgindraai
Penmai kandalae thaaimai kaangindraai
Palar poojai kondaadum poovaai vaazhgindraai

Female : Anbulla maganae azhuthathu podhum
Punnagai sindhu idhu ini pookalin maatham

Male : Kadavulum neeyum oru thaaipillai
Iruvarum thanimaram thaanae
Avanukkum unakuum annai illai
Athanal verinam thaanae
Nadhiendraal nurai undu
Vaazhvendraal kurai undu

பாடகர்கள்  : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : சௌந்தர்யன்

பாடல் ஆசிரியர்  : வைரமுத்து

குழு : ஹே..தனனானா தனனானா
ஹே..தனனானா தனனானா தனனானா
ஹே..தனனானா தனனானா
ஹே..தனனானா தனனானா தனனானா

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை
இருவரும் தனிமரம் தானே
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை
அதனால் ஓரினம் தானே
நதியென்றால் நுரை உண்டு
வாழ்வென்றால் குறை உண்டு

பெண் : ஐப்பசி வந்தால் அடைமழை காலம்
சிலர் ஆயுள் முழுதும் ஐப்பசி மாதம்

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை
இருவரும் தனிமரம் தானே
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை
அதனால் ஓரினம் தானே

ஆண் : அன்றொரு நாள் சின்னப்பிள்ளையிலே
உன் தாய் எரிந்தாள் சொந்தக் கொள்ளியிலே
வெந்துவிட்டாய் சின்னப் பிஞ்சினிலே
பட்ட வடு இன்னும் நெஞ்சினிலே

ஆண் : தாய்மை இல்லாமல் யாரும் இங்கில்லை
கர்ப்பம் இல்லாமல் கடவுள் இங்கில்லை
தாய்ப்பாலை போல தீர்த்தம் வேறில்லை
அவள் வாய் சொல்லை போல வேதம் வேறில்லை

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை
இருவரும் தனிமரம் தானே
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை
அதனால் ஓரினம் தானே
நதியென்றால் நுரை உண்டு
வாழ்வென்றால் குறை உண்டு

பெண் : ஓஓஓஒ….ஓஓஓஒ….

ஆண் : தீயிருந்தால் அங்கே புகையிருக்கும்
உறவிருந்தால் கொஞ்சம் பகையிருக்கும்
கடலிருந்தால் எங்கோ கரையிருக்கும்
கதையிருந்தால் ஏதோ முடிவிருக்கும்

ஆண் : வாழ்வும் வாராமல் சாவும் நேராமல்
ரெண்டும் இல்லாமல் மண்ணில் வாழ்கின்றாய்
பெண்மை கண்டாலே தாய்மை காண்கின்றாய்
பலர் பூஜை கொண்டாடும் பூவாய் வாழ்கின்றாய்

பெண் : அன்புள்ள மகனே அழுதது போதும்
புன்னகை சிந்து இனி பூக்களின் மாதம்

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை
இருவரும் தனிமரம் தானே
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை
அதனால் ஓரினம் தானே
நதியென்றால் நுரை உண்டு
வாழ்வென்றால் குறை உண்டு….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here