Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Haaan….
Katha kelu katha kelu
Nijamaana katha kelu
Suvaiyoda sugamaaga
Uruvaana katha kelu

Male : Michael madana kama rajan
Kathaiya nalla kelu
Achuadichu vechadhu pol
Naalu pera paaru

Male : Ah..michael madana kama rajan
Kathaiya nalla kelu
Achuadichu vechadhu pol
Naalu pera paaru

Male : Katha kelu katha kelu
Nijamaana katha kelu
Suvaiyoda sugamaaga
Uruvaana katha kelu

Male : Seemaanin kathalukku
Aalanna pen oruthi
Kalyanam aagumunnae
Thannaiyae thandhal

Male : Seemaanin sothukellam
Vaarisu illaiendru
Pangukku kaathirundha
Thambikku adhirchi

Male : Annanin uravai
Azhithida thunindhaan
Saguniyai pol oru sadhi seithaan
Unmaiyai arindha kanniyum udanae
Karuvinai kaathida thunindhaalae

Male : Vanjagar kangalil mannaiyum thoovi
Viraindhaval aval thaan abhaiyam theedi
Aadharavindri alaindhae thrindhae
Kodipol thuvandal thaniyae kidanthaal

Male : Orunalla magarasi
Vandhaalae samayathil
Udhavikku thaai pol thunaiyai nindral

Male : Katha kelu katha kelu
Nijamaana katha kelu
Suvaiyoda sugamaaga
Uruvaana katha kelu

Male : Pillaiyae illaiendru enguvor ingirukka
Pillai o pillai endru pirandhadhu naangu
Ondruku naal endru sothukku pangu kolla
Vaarisu kanda thambi baliyida thunindhaan

Male : Sollida nenjamum padharudhu ingae
Balagar nilai ini ennaagum
Panathukku vizhundha baathagan seyalaal
Annaiyin kadhaiyum ennagum

Male : Maranathin kodumaiyai
Ariya kuzhandhaiyin
Malar pol siripil avan manam maara

Male : Iraivanin arulaal nalladhu nadakka
Pirindhana kuzhandhaigal dhisaikenna ondrai
Thandhaikku theriyaadhu thanpillai than kaiyil
Vidhi podum kolangal yaarukkum puriyaadhu

Male : Katha kelu katha kelu
Nijamaana katha kelu
Suvaiyoda sugamaaga
Uruvaana katha kelu

Male : {Michael madana kama rajan
Kathaiya nalla kelu
Achuadichu vechadhu pol
Naalu pera paaru} (2)

Male : Katha kelu katha kelu
Nijamaana katha kelu
Suvaiyoda sugamaaga
Uruvaana katha kelu

 

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹான் கத கேளு
கத கேளு நிஜமான கத
கேளு சுவையோட சுகமாக
உருவான கத கேளு

ஆண் : மைக்கேல் மதன
காமராஜன் கதைய நல்லா
கேளு அச்சடிச்சு வச்சது
போல் நாலு பேர பாரு

ஆண் : ஆ மைக்கேல் மதன
காமராஜன் கதைய நல்லா
கேளு அச்சடிச்சு வச்சது
போல் நாலு பேர பாரு

ஆண் : ஹான் கத கேளு
கத கேளு நிஜமான கத
கேளு சுவையோட சுகமாக
உருவான கத கேளு

ஆண் : சீமானின் காதலுக்கு
ஆளான பெண்ணொருத்தி
கல்யாணம் ஆகும் முன்னே
தன்னையே தந்தால்

ஆண் : சீமானின் சொத்துக்கெல்லாம்
வாரிசு இல்லையென்று பங்குக்கு
காத்திருந்த தம்பிக்கு அதிர்ச்சி

ஆண் : அண்ணனின் உறவை
அழித்திட துணிந்தான் சகுனியை
போல் ஒரு சதி செய்தான்
உண்மையை அறிந்த கன்னியும்
உடனே கருவினை காத்திட
துணிந்தாளே

ஆண் : வஞ்சகர் கண்களில்
மண்ணையும் தூவி விரைந்தவள்
அவள் தான் அபயம் தேடி
ஆதரவின்றி அலைந்தே திரிந்தே
கொடிபோல் துவண்டால்
தனியே கிடந்தால்

ஆண் : ஒரு நல்ல மகராசி
வந்தாலே சமயத்தில்
உதவிக்கு தாய் போல்
துணையாய் நின்றால்

ஆண் : கத கேளு
கத கேளு நிஜமான கத
கேளு சுவையோட சுகமாக
உருவான கத கேளு

ஆண் : பிள்ளையே இல்லையென்று
ஏங்குவோர் இங்கிருக்க பிள்ளையோ
பிள்ளை என்று பிறந்தது நான்கு
ஒன்றுக்கு நாலென்று சொத்துக்கு
பங்கு கொள்ள வாரிசு கண்ட தம்பி
பலியிட துணிந்தான்

ஆண் : சொல்லிட நெஞ்சமும்
பதறுது இங்கே பாலகர் நிலை
இனி என்னாகும் பணத்துக்கு
விழுந்த பாதகன் செயலால்
அன்னையின் கதையும்
என்னாகும்

ஆண் : மரணத்தின் கொடுமையை
அறியா குழந்தையின் மலர் போல்
சிரிப்பில் அவன் மனம் மாற

ஆண் : இறைவனின் அருளால்
நல்லது நடக்க பிரிந்தன
குழந்தைகள் திசைக்கென
ஒன்றாய் தந்தைக்கு தெரியாது
தன்பிள்ளை தன் கையில்
விதி போடும் கோலங்கள்
யாருக்கும் புரியாது

ஆண் : கத கேளு
கத கேளு நிஜமான கத
கேளு சுவையோட சுகமாக
உருவான கத கேளு

ஆண் : { மைக்கேல் மதன
காமராஜன் கதைய நல்லா
கேளு அச்சடிச்சு வச்சது
போல் நாலு பேர பாரு } (2)

ஆண் : கத கேளு
கத கேளு நிஜமான கத
கேளு சுவையோட சுகமாக
உருவான கத கேளு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here