Singers : S. P. Balasubrahmanyam and P. Suseela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Kadhal vilaiyaada kattilidu kannae
Thooya maganada thottilidu kannae
Kadhal vilaiyaada kattilidu kannae
Thooya maganada thottilidu kannae

Female : Ennangalin inba nadanam
Kannangal meethu anbu nilai ezhuthum
Kadhal vilaiyaada kattilidu kannaa
Thooyamaganada thottilidu kannaa

Male : ……………..
Female : ……………

Male : Senthoora singaaram
Kondaadum pennukku
En ullam sorkkam tharum
Sevvaayin meedhu oorum
Thaenaattril nanaada
Pollaatha vetkam varum

Female : Kannodu kannokki
Panpaana penn konda
Kaalaikku mogam varum
Anbaana mappillai
Ondraagum neraththil
Aasaikkul achcham varum

Male : Mannil valar thangamalargal
Penn konda kadhal
Peumai ena ezhuthum

Male : Kadhal vilaiyaada kattilidu kannae
Thooya maganada thottilidu kannae

Female : Sevvaana kolangal
Seeraattum megangal
Ponnoonjal podattumae
Jillendru poongaattru
Pallaandu naam vaazha
Themmaangu paadattumae

Male : Neeraattu theeramal
Thaerottum pushbangal
Paaraatti pesattumae
Neraaga killigal aaraaththi thattodu
Thaalaattu paadattumae

Female : Endrum idhu nindru nilavum
En vaazhkkai vaanam
Inimaiyudan thigazhum

Female : Kadhal vilaiyaada
Male : Kattilidu kannae
Female : Thooyya maganaada
Male : Thottilidu kannae….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : காதல் விளையாட கட்டிலிடு கண்ணே
தூயமகனாட தொட்டிலிடு கண்ணே
காதல் விளையாட கட்டிலிடு கண்ணே
தூயமகனாட தொட்டிலிடு கண்ணே…

பெண் : எண்ணங்களின் இன்ப நடனம்
கன்னங்கள் மீது அன்பு நிலை எழுதும்
காதல் விளையாட கட்டிலிடு கண்ணா
தூய மகனாட தொட்டிலிடு கண்ணா………

ஆண் : …………………
பெண் : …………………

ஆண் : செந்தூர சிங்காரம்
கொண்டாடும் பெண்ணுக்கு
என் உள்ளம் சொர்க்கம் தரும்
செவ்வாயின் மீது ஊறும்
தேனாற்றில் நானாட
பொல்லாத வெட்கம் வரும்

பெண் : கண்ணோடு கண்ணோக்கி
பண்பான பெண் கொண்ட
காளைக்கு மோகம் வரும்
அன்பான மாப்பிள்ளை
ஒன்றாகும் நேரத்தில்
ஆசைக்குள் அச்சம் வரும்

ஆண் : மண்ணில் வளர் தங்கமலர்கள்
பெண் கொண்ட காதல்
பெருமை என எழுதும்…….

ஆண் : காதல் விளையாட கட்டிலிடு கண்ணே
தூய மகனாட தொட்டிலிடு கண்ணே

பெண் : செவ்வானக் கோலங்கள்
சீராட்டும் மேகங்கள்
பொன்னூஞ்சல் போடட்டுமே
ஜில்லென்று பூங்காற்று
பல்லாண்டு நாம் வாழ
தெம்மாங்கு பாடட்டுமே

ஆண் : நீராட்டு தீராமல்
தேரோட்டும் புஷ்பங்கள்
பாராட்டி பேசட்டுமே
நேராக கிள்ளைகள் ஆராத்தி தட்டோடு
தாலாட்டு பாடட்டுமே

பெண் : என்றும் இது நின்று நிலவும்
என் வாழ்க்கை வானம்
இனிமையுடன் திகழும்

பெண் : காதல் விளையாட
ஆண் : கட்டிலிடு கண்ணே
பெண் : தூய மகனாட
ஆண் : தொட்டிலிடு கண்ணே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here