Singer : G. V. Prakash Kumar

Music by : Mithun Eshwar

Lyrics by : Madhurakavi

Male : Huuuu …..

Male : Kaadhali kaadhali unnai
Neeyingu yarendru theriyum
Kadhali kadhali ulagai
Un nokkame yadhendru puriyum

Male : Boologam ellorkkum
Podhuvanadhu
Siru erumbumdhan manmeethu
Poradudhu

Male : Neeyum naanum
Ingu bommaidhane
Nam noolo nam kaiyile

Male : Aththu meeri
Achchamindri odu
Boomiyengum kaal pathi
Vaazhkai kaana ellai koottai thedu
Paadham sedhukkinal
Paadhai neelume..

Male : Mannil mulaikkum vidhaipol
Undhan manadhil mulaikkum valigal
Ettu vaikkum kaalgalukku
Thembu moottume..

Male : Tholvi thodarum manadhil
Dhinam velvi neruppu erindhal
Muyarchigal vendru kaattume..

Male : Kan thirandhu
Kanavodu uravaadu nee
Kadal meedhum payir
Seivaai nee

Male : Netri vervai sinthinaale mannil
Vetrip pookkal pookkume
Neram kandu mundhinaale vaazhvin
Vaasal thirakkume
Thedal jeyikkume..

Male : Humming……………….

பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

இசை அமைப்பாளர் : மிதுன் ஈஸ்வர்

பாடல் ஆசிரியர் : மதுர கவி

ஆண் : ஹு ……

ஆண் : காதலி காதலி உன்னை
நீயிங்கு யாரென்று தெரியும்
காதலி காதலி உலகை
உன் நோக்கமே யாதென்று புரியும்

ஆண் : பூலோகம் எல்லோருக்கும்
பொதுவனது
சிறு எறும்பும்தான் மண்மீது
போராடுது

ஆண் : நீயும் நானும் இங்கு
பொம்மை தானே
நம் நூலோ நம் கையிலே

ஆண் : அத்து மீறி
அச்சமின்றி ஓடு
பூமியெங்கும் கால் பதி
வாழ்கைக் காண எல்லைக்
கூட்டைத் தேடு
பாதம் செதுக்கினாள்
பாதை நீளுமே..

ஆண் : மண்ணில் முளைக்கும்
விதையைபோல்
உந்தன் மனதில் முளைக்கும் வலிகள்
எட்டு வைக்கும் கால்களுக்கு
தெம்பு மூட்டுமே

ஆண் : தோல்வி தொடங்கும்
மனதில்
தினம் வேள்வி நெருப்பு எரிந்தால்
முயற்சிகள் வென்று காட்டுமே..

ஆண் : கண் திறந்து
கனவோடு உறவாடு நீ
கடல் மீதும் பயிர்
செய்வாய் நீ

ஆண் : நெற்றி வேர்வை சிந்தினாலே
மண்ணில்
வெற்றிப் பூக்கள் பூக்குமே
நேரம் கண்டு முந்தினாலே
வாழ்வின் வாசல் திறக்குமே
தேடல் ஜெயிக்குமே..

ஆண் : முனங்கல் ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here