Singers : Malasiya Vasudevan and K. S. Chithra

Music by : Gangai Amaran

Male : Kaigalilae vazhuvirukku
Kammakarai nilam irukku
Kaigalilae vazhuvirukku
Kammakarai nilam irukku
Mannai nambhi vedhavedhappom kannamma
Adhu kodukkappora palan namakku pon amma

Female : Kaigalilae vazhuvirukku
Kammakarai nilam irukku
Mannai nambhi vedhavedhappom kannaiyaa
Adhu kodukkappora palan namakku pon aiyaa

Female : Nallavangha manasu pola
Nadhigal ingae payum
Nanjaiyilae kadhir velanji
Naanathoda saayum

Male : Nallavangha manasu pola
Nadhigal ingae payum
Nanjaiyilae kadhir velanji
Naanathoda saayum

Female : Panjamillaiyae pasi illaiyae
Vanjanai seiyum thuyar illaiyae
Male : Andha kaalam varum neram
Nenjil venaam ini sogam
Adi maanae nee vaa vaa

Female : Kaigalilae vazhuvirukku
Kammakarai nilam irukku
Male : Mannai nambhi vedhavedhappom kannamma
Adhu kodukkappora palan namakku pon amma

Male : Vettithana pechukalaal
Veenaa pochu naadu
Vetkangetta manusanukkum
Velanju tharudhu kaadu

Female : Vettithana pechukalaal
Veenaa pochu naadu
Vetkangetta manusanukkum
Velanju tharudhu kaadu

Male : Mannu manasil baedhamillaiyae
Vambhu vazhakku vaadham illaiyae
Female : Idhu paasam konda boomi
Nammai kaakkum idhu saami
Edhirkaalam kai melae

Male : Kaigalilae vazhuvirukku
Kammakarai nilam irukku
Mannai nambhi vedhavedhappom kannamma
Adhu kodukkappora palan namakku pon amma

Female : Kaigalilae vazhuvirukku
Kammakarai nilam irukku
Mannai nambhi vedhavedhappom kannaiyaa
Adhu kodukkappora palan namakku pon aiyaa

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : கைகளிலே வலுவிருக்கு
கம்மாக்கரை நெலமிருக்கு
கைகளிலே வலுவிருக்கு
கம்மாக்கரை நெலமிருக்கு
மண்ணை நம்பி வெதவெதப்போம் கண்ணம்மா
அது கொடுக்கப்போற பலன் நமக்கு பொன்னம்மா

பெண் : கைகளிலே வலுவிருக்கு
கம்மாக்கரை நெலமிருக்கு
மண்ணை நம்பி வெதவெதப்போம் கண்ணய்யா
அது கொடுக்கப்போற பலன் நமக்கு பொன்னய்யா

பெண் : நல்லவங்க மனசு போல
நதிகள் இங்கே பாயும்
நஞ்சையிலே கதிர் வெளஞ்சு
நாணத்தோட சாயும்

ஆண் : நல்லவங்க மனசு போல
நதிகள் இங்கே பாயும்
நஞ்சையிலே கதிர் வெளஞ்சு
நாணத்தோட சாயும்

பெண் : பஞ்சமில்லையே பசியில்லையே
வஞ்சனை செய்யும் துயர் இல்லையே
ஆண் : அந்தக் காலம் வரும் நேரம்
நெஞ்சில் வேணாம் இனி சோகம்
அடி மானே நீ வா வா

பெண் : கைகளிலே வலுவிருக்கு
கம்மாக்கரை நெலமிருக்கு
ஆண் : மண்ணை நம்பி வெதவெதப்போம் கண்ணம்மா
அது கொடுக்கப்போற பலன் நமக்கு பொன்னம்மா

ஆண் : வெட்டித்தன பேச்சுகளால்
வீணாப் போச்சு நாடு
வெட்கங்கெட்ட மனுஷனுக்கும்
வெளஞ்சு தருது காடு

பெண் : வெட்டித்தன பேச்சுகளால்
வீணாப் போச்சு நாடு
வெட்கங்கெட்ட மனுஷனுக்கும்
வெளஞ்சு தருது காடு

ஆண் : மண்ணு மனசில் பேதமில்லையே
வம்பு வழக்கு வாதமில்லையே
பெண் : இது பாசம் கொண்ட பூமி
நம்மை காக்கும் இது சாமி
எதிர்காலம் கை மேலே

ஆண் : கைகளிலே வலுவிருக்கு
கம்மாக்கரை நெலமிருக்கு
மண்ணை நம்பி வெதவெதப்போம் கண்ணம்மா
அது கொடுக்கப்போற பலன் நமக்கு பொன்னம்மா

பெண் : கைகளிலே வலுவிருக்கு
கம்மாக்கரை நெலமிருக்கு
மண்ணை நம்பி வெதவெதப்போம் கண்ணய்யா
அது கொடுக்கப்போற பலன் நமக்கு பொன்னய்யா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here