Singer : K. J. Yesudas

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Kakangal parandhaalum
Megangal midhandhaalum
Aagayam azhuku aagamal irukku
Maaradhu ennaalum ooooho

Male : Unmaikku yaarum
Poosattum saayam
Ondrukku nooraai
Pesattum oorum

Male : Kakangal parandhaalum
Megangal midhandhaalum
Aagayam azhuku aagamal irukku
Maaradhu ennaalum ..

Chorus : Humming….

Male : Vindhai idhu thaan
Thandhaikku edhirae
Vazhakkaada magal thunindhaal
Vairakal indru thappugal seidhu
Uppukal aanadhu endraal

Male : Yaar meedhu
Kuttrangal solla
Idhu vidhiyandri
Ver ondrum alla

Male : Dharmangal ingae
Marmangal aanaal
Deivathai koodi
Thandikka naerum

Male : Kakangal parandhaalum
Megangal midhandhaalum
Aagayam azhuku aagamal irukku
Maaradhu ennaalum..

Male : Seedhai nenjil sreeraman meedhu
Sandhegam kidiyadhu
Saayadhu imayam
Puyal veesum samayam
Endrenni vaazhndhidum maadhu

Male : Aanaalum kanneeril aadum
Ullam alai paaindhu
Nilaiyindri oodum oo

Male : Natpukku kooda
Karppingu undu
Niram maari pochu
Adhu dhanae indru

Male : Sattam saatchi
Sandharppam parthu
Mandrangal theerpeluthum
Vaai varthai ellaam
Kaikorthu nindraal
Unmaigal oomaigal aagum

Male : Nesangal paasangal saerum
Naalu nenjathil thunbathin baaram

Male : Nool kondu aadum
Bommaigal polae
Nool mattum
Devan kaigalin melae

Male : Kakangal parandhaalum
Megangal midhandhaalum
Aagayam azhuku aagamal irukku
Adhu pola vilangattumae
Ingae nyaayangal jeyikattumae
Ingae nyaayangal jeyikattumae
Ingae nyaayangal jeyikattumae

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : காகங்கள் பறந்தாலும்
மேகங்கள் மிதந்தாலும்
ஆகாயம் அழுக்கு ஆகாமல் இருக்கு
மாறாது எந்நாளும் ஓஓஓஹ்

ஆண் : உண்மைக்கு யாரும் பூசட்டும் சாயம்
ஒன்றுக்கு நூறாய் பேசட்டும் ஊரும்

ஆண் : காகங்கள் பறந்தாலும்
மேகங்கள் மிதந்தாலும்
ஆகாயம் அழுக்கு ஆகாமல் இருக்கு
மாறாது எந்நாளும் ஓஓஓஹ்…

ஆண் : விந்தை இதுதான் தந்தைக்கு எதிரே
வழக்காட மகள் துணிந்தாள்
வைரக்கல் இன்று தப்புக்கள் செய்து
உப்புக்கல் ஆனது என்றாள்

ஆண் : யார் மீது குற்றங்கள் சொல்ல
இது விதியன்றி வேறொன்றும் அல்ல
தர்மங்கள் இங்கே மர்மங்களானால்
தெய்வத்தை கூட தண்டிக்க நேரும்

ஆண் : காகங்கள் பறந்தாலும்
மேகங்கள் மிதந்தாலும்
ஆகாயம் அழுக்கு ஆகாமல் இருக்கு
மாறாது எந்நாளும் ஓஓஓஹ்

ஆண் : சீதை நெஞ்சில் ஸ்ரீராமன் மீது
சந்தேகம் கிடையாது
சாயாது இமயம் புயல் வீசும் சமயம்
என்றெண்ணி வாழ்ந்திடும் மாது

ஆண் : ஆனாலும் கண்ணீரில் ஆடும் உள்ளம்
அலை பாய்ந்து நிலையின்றி ஓடும் ஓஓ
நட்புக்கு கூட கற்பிங்கு உண்டு
நிறம் மாறி போச்சு அதுதானே இன்று

ஆண் : சட்டம் சாட்சி சந்தர்ப்பம் பார்த்து
மன்றங்கள் தீர்ப்பெழுதும்
வாய் வார்த்தை எல்லாம்
கைக்கோர்த்து நின்றால்
உண்மைகள் ஊமைகள் ஆகும்

ஆண் : நேசங்கள் பாசங்கள் சேரும்
நாலு நெஞ்சத்தில் துன்பத்தின் பாரம்
நூல் கொண்டு ஆடும் பொம்மைகள் போலே
நூல் மட்டும் தேவன் கைகளின் மேலே

ஆண் : காகங்கள் பறந்தாலும் மேகங்கள் மிதந்தாலும்
ஆகாயம் அழுக்கு ஆகாமல் இருக்கு
அதுபோல விளங்கட்டுமே இங்கே
நியாயங்கள் ஜெயிக்கட்டுமே

ஆண் : இங்கே நியாயங்கள் ஜெயிக்கட்டுமே
இங்கே நியாயங்கள் ஜெயிக்கட்டுமே
இங்கே நியாயங்கள் ஜெயிக்கட்டுமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here