Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Kaalam undu paruvam undu
Manampol aadal paadal adhigam undu
Kaalam undu paruvam undu
Manampol aadal paadal adhigam undu

Female : Vaan konda megam naan konda koondhal
Thaen konda sevvaai meen kanda kangal
Evar kanda pothum kavi vanthu mothum
Evar kanda pothum kavi vanthu mothum
Kanni thaen ooril ondru ulavum indru

Female : Kaalam undu
Chorus : Lalaa lallaa
Female : Paruvam undu
Chorus : Lalaa lallaa
Female : Manam pol aadal paadal athigam undu

Female : Rom naattu raani paal pondra maeni
Kalai konjum vaani karai kanda nyaani
Rom naattu raani paal pondra maeni
Kalai konjum vaani karai kanda nyaani
Kadhai intha kannil sugam intha pennil
Pullimaan ooril ondru ulavum indru

Female : Kaalam undu
Chorus : Lalaa lallaa
Female : Paruvam undu
Chorus : Lalaa lallaa
Female : Manam pol aadal paadal athigam undu

Female : Aandaandu kaalam naadaanda mannan
Thaan saaintha manjam pen konda nenjam
Aandaandu kaalam naadaanda mannan
Thaan saaintha manjam pen konda nenjam
Malar engal thegam manangkonda nenjam
Naan penmai endru perumai undu

Female : Kaalam undu
Chorus : Lalaa lallaa
Female : Paruvam undu
Chorus : Lalaa lallaa
Female : Manam pol aadal paadal athigam undu

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : காலம் உண்டு பருவம் உண்டு
மனம் போல் ஆடல் பாடல் அதிகம் உண்டு
காலம் உண்டு பருவம் உண்டு
மனம் போல் ஆடல் பாடல் அதிகம் உண்டு

பெண் : வான் கொண்ட மேகம் நான் கொண்ட கூந்தல்
தேன் கொண்ட செவ்வாய் மீன் கண்ட கண்கள்
எவர் கண்ட போதும் கவி வந்து மோதும்
எவர் கண்ட போதும் கவி வந்து மோதும்
கன்னித் தேன் ஊரில் ஒன்று உலவும் இன்று

பெண் : காலம் உண்டு
குழு : லலா லல்லா
பெண் : பருவம் உண்டு
குழு : லலா லல்லா
பெண் : மனம் போல் ஆடல் பாடல் அதிகம் உண்டு

பெண் : ரோம் நாட்டு ராணி பால் போன்ற மேனி
கலை கொஞ்சும் வாணி கரை கண்ட ஞானி
ரோம் நாட்டு ராணி பால் போன்ற மேனி
கலை கொஞ்சும் வாணி கரை கண்ட ஞானி
கதை இந்தக் கண்ணில் சுகம் இந்தப் பெண்ணில்
புள்ளி மான் ஊரில் ஒன்று உலவும் இன்று

பெண் : காலம் உண்டு
குழு : லலா லல்லா
பெண் : பருவம் உண்டு
குழு : லலா லல்லா
பெண் : மனம் போல் ஆடல் பாடல் அதிகம் உண்டு

பெண் : ஆண்டாண்டு காலம் நாடாண்ட மன்னன்
தான் சாய்ந்த மஞ்சம் பெண் கொண்ட நெஞ்சம்
ஆண்டாண்டு காலம் நாடாண்ட மன்னன்
தான் சாய்ந்த மஞ்சம் பெண் கொண்ட நெஞ்சம்
மலர் எங்கள் தேகம் மனங்கொண்ட யோகம்
நான் பெண்மை என்று பெருமை உண்டு

பெண் : காலம் உண்டு
குழு : லலா லல்லா
பெண் : பருவம் உண்டு
குழு : லலா லல்லா
பெண் : மனம் போல் ஆடல் பாடல் அதிகம் உண்டு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here