Singers : Nithyashree Mahadevan and M. S. Rajeswari

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Pulamaipithan

Male : ………………

Male : Kalidasanin kavithai naaagam
Kalainthu ponathenna
Kadhal devathai kanavu maaligai
Idinthu ponathenna

Male : Sagunthalai sariththiram edhuvarai thodarnthidum
Kadhal vaanilae vantha pournami
Seitha paavamenna
Vizhiyil mazhaiyaa manathil puyalaa

Chorus : Kaalam muzhukkavum aadi pozhaippathu
Vithiyaa sol mama
Aasai kanave poithaanaa
Adi aasai engu theerum dhenam
Aadi pizhaikka vendum oho
Aasai engu theerum dhenam
Aadi pizhaikka vendum
Ho hoi….ho hoi….ho hoi…..
Hoiiiiiiiyaa….

Male : Iru pakkam thoondil vidhi vanthu podum
Thudikkindra meenaai oru nenjam vaadum
Kaamaiyai paarththaal kadhalum illai
Kadhalai paarththaal kadamaiyum illai

Male : Poraadum ullam yaarodu sellum
Ennenna theerppo kaalangal sollum
Kadhal vaanilae vantha pournami
Seitha paavamenna
Edhuthaan vazhiyo idhuthaan vidhiyo…

Chorus : Ooru nadungidum neram nerungaiyil
Paanaiyum rendaachchu ottai paanai odainjaachu
Nadu saama neramachchu adhanaal thaalam maaripochu
Oho nadu saama neramachchu adhanaal thaalam maaripochu
Ho hoi….ho hoi….ho hoi…..
Hoiiiiiiiyaa….

Female : Puyal kondu poga poocharam vaiththaen
Aayiram kaalam naaningu paarththaen
Vidukadhai polae aanathu vaazhkkai
Porulariyaamal ezhuthiya vaarththai

Female : Vedhanai ennum siraiyinil vaazhnthaen
Vidhiyidam indru viduthalai kettaen
Kadhal vaanilae vantha pournami
Seitha paavamenna
Iravil pozhiyum paniyum eriyum

Chorus : Adikkira kaaththila arumbugal saainthida
Aandavan padaiththaanaa intha avasaram sarithaanaa
Adhu kaalam pora vegam idhil yaarai nonthu laabam
Oho kaalam pora vegam idhil yaarai nonthu laabam
Ho hoi….ho hoi….ho hoi…..
Hoiiiiiiiyaa….

Male : Vaanilulla meenukendru thoondilittaan
Thoondil thannil thaanae maattikondaan
Aththippookkal pookkumendru kaaththirunthaan
Aasai kondu naalum kaaththirunthaan

Male : Poovum illai vaasam illai
Aasai theerum naalum illai
Kadhal ennum padhai engu pogiratho
Kaalgal rendum engu sendru saernthidumo
Kadhal vaanilae vantha pournami
Seitha paavamenna
Edhuvum nijamo kanavum sugamo

Chorus : Nenaichchathu nadakkala vedhachchathu molaikkala
Mayakka nenjukkullae idhukku marunthu enna pulla
Idhukku marunthu yaedhumilla unnoda mananthaan sariyilla
Adiyae marunthu yaedhumilla unnoda mananthaan sariyilla
Ho hoi….ho hoi….ho hoi…..
Hoiiiiiiiyaa….

Male : Nangu nenjilum
Kangal yaavilum vantha sogamenna
Endru yaengidum anbu nenjamae
Konda paasam enna
Dheepam yaettravim paadhai kaattavum
Thudikkum ullamenna…ae….ae….

Male : Naalai enbathae nanmaiyaagavae
Aaga vendum ingae
Vidiyum pozhuthe mudivum unathae

Chorus : Naaloru medaiyil aadidum vaazhkkaiyil
Mudivu enna mama konjam puriya sollalaamaa
Adi naalaikendha ooro intha vaazhvukkenna pero

Chorus : Naalaikendha ooro intha vaazhvukkenna pero
Naalaikendha ooro intha vaazhvukkenna pero
Naalaikendha ooro intha vaazhvukkenna pero
Naalaikendha ooro intha vaazhvukkenna pero….

பாடகர்கள் : நித்யஸ்ரீ மகாதேவன் மற்றும் எம். எஸ். ராஜேஸ்வரி

இசையமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடலாசிரியர்  : புலமைபித்தன்

ஆண் : ஓஹ்ஹ்ஹ ஹோ ஹோ ஓஒ….
ஓஹ்ஹ்ஹ ஹோ ஹோ ஓஒ….
ஓஹ்ஹ்ஹ ஹோ ஹோ ஓஒ….

ஆண் : காளிதாசனின் கவிதை நாடகம்
கலைந்து போனதென்ன
காதல் தேவதை கனவு மாளிகை
இடிந்து போனதென்ன

ஆண் : சகுந்தலை சரித்திரம் எதுவரை தொடர்ந்திடும்
காதல் வானிலே வந்த பௌர்ணமி
செய்த பாவமென்ன
விழியில் மழையா மனதில் புயலா

குழு : காலம் முழுக்கவும் ஆடிப் பொழைப்பது
விதியா சொல் மாமா
ஆசை கனவே பொய்தானா
அடி ஆசை எங்கு தீரும் தெனம்
ஆடிப் பிழைக்க வேண்டும் ஓஹோ
ஆசை எங்கு தீரும் தெனம்
ஆடிப் பிழைக்க வேண்டும்….
ஹோ ஹோய்….ஹோ ஹோய்….ஹோ ஹோய்….
ஹோய்ய்ய்ய்யா…..

ஆண் : இரு பக்கம் தூண்டில் விதி வந்து போடும்
துடிக்கின்ற மீனாய் ஒரு நெஞ்சம் வாடும்
கடமையை பார்த்தால் காதலும் இல்லை
காதலைப் பார்த்தால் கடமையும் இல்லை

ஆண் : போராடும் உள்ளம் யாரோடு செல்லும்
என்னென்ன தீர்ப்போ காலங்கள் சொல்லும்
காதல் வானிலே வந்த பௌர்ணமி
செய்த பாவமென்ன
எதுதான் வழியோ இதுதான் விதியோ….

குழு : ஊரு நடுங்கிடும் நேரம் நெருங்கையில்
பானையும் ரெண்டாச்சு ஓட்டை பானை ஒடைஞ்சாச்சு
நடு சாம நேரமாச்சு அதனால் தாளம் மாறிப்போச்சு
ஓஹோ சாம நேரமாச்சு அதனால் தாளம் மாறிப்போச்சு
ஹோ ஹோய்….ஹோ ஹோய்….ஹோ ஹோய்….
ஹோய்ய்ய்ய்யா…..

பெண் : புயல் கொண்டு போக பூச்சரம் வைத்தேன்
ஆயிரம் காலம் நானிங்கு பார்த்தேன்
விடுகதை போலே ஆனது வாழ்க்கை
பொருளறியாமல் எழுதிய வார்த்தை

பெண் : வேதனை என்னும் சிறையினில் வாழ்ந்தேன்
விதியிடம் இன்று விடுதலை கேட்டேன்
காதல் வானிலே வந்த பௌர்ணமி
செய்த பாவமென்ன
இரவில் பொழியும் பனியும் எரியும்

குழு : அடிக்கிற காத்தில அரும்புகள் சாய்ந்திட
ஆண்டவன் படைத்தானா இந்த அவசரம் சரிதானா
அது காலம் போற வேகம் இதில் யாரை நொந்து லாபம்
ஓஹோ காலம் போற வேகம் இதில் யாரை நொந்து லாபம்
ஹோ ஹோய்….ஹோ ஹோய்….ஹோ ஹோய்….
ஹோய்ய்ய்ய்யா…..

ஆண் : வானிலுள்ள மீனுக்கென்று தூண்டிலிட்டான்
தூண்டில் தன்னில் தானே மாட்டிக்கொண்டான்
அத்திப்பூக்கள் பூக்குமென்று காத்திருந்தான்
ஆசைக் கொண்டு நாளும் காத்திருந்தான்

ஆண் : பூவும் இல்லை வாசம் இல்லை
ஆசை தீரும் நாளும் இல்லை
காதல் என்னும் பாதை எங்கு போகிறதோ
கால்கள் ரெண்டும் எங்கு சென்று சேர்ந்திடுமோ
காதல் வானிலே வந்த பௌர்ணமி
செய்த பாவமென்ன
எதுவும் நிஜமோ கனவும் சுகமோ

குழு : நெனச்சது நடக்கல வெதச்சது மொளைக்கல
மயக்க நெஞ்சுக்குள்ளே இதுக்கு மருந்து என்ன புள்ள
இதுக்கு மருந்து ஏதுமில்ல உன்னோட மனந்தான் சரியில்ல
அடியே மருந்து ஏதுமில்ல உன்னோட மனந்தான் சரியில்ல
ஹோ ஹோய்….ஹோ ஹோய்….ஹோ ஹோய்….
ஹோய்ய்ய்ய்யா…..

ஆண் : நான்கு நெஞ்சிலும்
கண்கள் யாவிலும் வந்த சோகமென்ன
என்று ஏங்கிடும் அன்பு நெஞ்சமே
கொண்ட பாசம் என்ன
தீபம் ஏற்றவும் பாதை காட்டவும்
துடிக்கும் உள்ளமென்ன……ஏ….ஏ…..

ஆண் : நாளை என்பதே நன்மையாகவே
ஆக வேண்டும் இங்கே
விடியும் பொழுதே முடிவும் உனதே

குழு : நாளொரு மேடையில் ஆடிடும் வாழ்க்கையில்
முடிவு என்ன மாமா கொஞ்சம் புரிய சொல்லலாமா
அடி நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ

குழு : நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ
நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ
நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ
நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here