Singers : T. M. Soundararajan and L.R. Eswari
Music by : Viswanathan- Ramamoorthy
Female : ……………
Male : { Kal ellam
Maanika kalaaguma
Kalai ellam kangal
Sollum kalaiyaguma } (2)
Male : { Solellam
Thooya thamizh
Solaaguma suvaiellam
Idhazh sindhum suvaiyaguma } (2)
Female : ……………………..
Male : Kal ellam
Maanika kalaaguma
Kalai ellam kangal
Sollum kalaiyaguma
Male : { Kanni thamizh
Thandhadhoru thiruvasagam
Kallai kani aakum undhan
Oru vaasagam } (2)
Male : { Undendru
Solvadhundhan kanallava
Vanna kanallava } (2)
Male : Illai endru
Solvadhundhan idai
Allava minnal idai allava
Female : ……………………
Male : Kal ellam
Maanika kalaaguma
Kalai ellam kangal
Sollum kalaiyaguma
Female : ……………………..
Male : { Kamban kanda
Seethai undhan thaai allava
Kaalidasan sakunthalai un sei allava } (2)
Male : { Ambikavathi
Anaitha amaravathi
Mangai amaravathi } (2)
Sendra pinbu paavalarku
Neeyae kathi endrum
Neeyae kathi
Female : ………………
Male : Kal ellam
Maanika kalaaguma
Kalai ellam kangal
Sollum kalaiyaguma
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண் : ……………………..
ஆண் : { கல்லெல்லாம்
மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள்
சொல்லும் கலையாகுமா } (2)
ஆண் : { சொல்லெல்லாம்
தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ்
சிந்தும் சுவை ஆகுமா } (2)
பெண் : ……………………..
ஆண் : கல்லெல்லாம்
மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள்
சொல்லும் கலையாகுமா
ஆண் : { கன்னித்தமிழ்
தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும்
உந்தன் ஒரு வாசகம் } (2)
ஆண் : { உண்டென்று
சொல்வதுந்தன் கண்ணல்லவா
வண்ணக்கண் அல்லவா } (2)
ஆண் : இல்லையென்று
சொல்வதுந்தன் இடையல்லவா
மின்னல் இடையல்லவா
பெண் : ……………………..
ஆண் : கல்லெல்லாம்
மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள்
சொல்லும் கலையாகுமா
பெண் : ……………………..
ஆண் : { கம்பன் கண்ட
சீதை உந்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை
உன் சேயல்லவா } (2)
ஆண் : { அம்பிகாபதி
அணைத்த அமராவதி
மங்கை அமராவதி } (2)
சென்ற பின்பு பாவலர்க்கு
நீயே கதி என்றும் நீயே கதி
பெண் : ……………………..
ஆண் : கல்லெல்லாம்
மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள்
சொல்லும் கலையாகுமா