Singers : P. Leela, Kamala and Thangappan

Music by : S. M. Subbaih Naidu

Male : Kallirukkum malar koondhal jaanagiyai
Ilangaiyar kon kalavu soozhntha
Kallamara sriraman kalang kondu
Kai Valaiththu thoduththa vaali

Male : Ullirukkum uyir kondu
Ilangaiyar kon udalai
Verunkoodu seithu
Vellamena kurithi vara
Tharmaththin vetri vara
Vilainthathamma….aa….aa….
Vetri vilainthathamma…
Vetri vilainthathamma…

Chorus : Azhagukku azhgu seivom
Karpin amuthinai alangarippom
Amuthinai alangarippom
Azhagukku azhgu seivom
Karpin amuthinai alangarippom
Amuthinai alangarippom

Chorus : Sempanju poosiya paadhaththil
Siru viral mothiram valaiththu vaippom
Sempanju poosiya paadhaththil
Siru viral mothiram valaiththu vaippom
Ambinum kooriya kangalilae
Anjana maiyittu azhagu seivom

Chorus : Amuthinai alangarippom
Azhagukku azhgu seivom
Karpin amuthinai alangarippom
Amuthinai alangarippom

Male : Vaiyam nilaiyariya
Mannaargal unaiyariya
Vaiyam…..mmm…..nilaiyariya
Mannaargal unaiyariya
Aiyam marainthupada
Anaiththulagam paninthu vara
Poi thavirntha naermai
Ponmalaraam jaanagiyai
Nei valarththa theeyil
Neenthi vara aanaiyittaen…
Aanaiyittaen…

Female : Neruppinai nerupae neeyum
Nerunguthal iyalumaayin
Neriya enathu maeni
Nerunguga neruppae indru

Female : Marupena thiranda tholin
Mannavan kan munnaalae
Mai kuzhal malaraiyenum
Erippaiyo nerupae vaa….
Erippaiyo nerupae vaa….
Erippaiyo nerupae vaa….

Chorus : Kaana vendum latcham kangal
Kaana vendum latcham kangal
Seethaa deviyin kaalukku nigaro pengal
Kaana vendum latcham kangal
Seethaa deviyin kaalukku nigaro pengal
Kaana vendum latcham kangal

Chorus : Navaraththina thangaththodu
Nadaiyilae annappaedu
Navaraththina thangaththodu
Nadaiyilae annappaedu
Avanukku illai eedu
Avanukku avalae eedu

Chorus : Kaana vendum latcham kangal

பாடகர்கள் : பி. லீலா, கமலா மற்றும் தங்கப்பன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகியை……
இலங்கையற் கோன் களவு சூழ்ந்த
கள்ளமற ஸ்ரீராமன் களங் கொண்டு
கை வளைத்துத் தொடுத்த வாளி

ஆண் : உள்ளிருக்கும் உயிர் கொண்டு
இலங்கையற் கோன் உடலை
வெறுங்கூடு செய்து
வெள்ளமெனக் குருதி வரத்
தர்மத்தின் வெற்றி வர
விளைத்ததம்மா……ஆ…..ஆ…..
வெற்றி விளைந்ததம்மா….
வெற்றி விளைந்ததம்மா….

குழு : அழகுக்கு அழகு செய்வோம்
கற்பின் அமுதினை அலங்கரிப்போம்
அமுதினை அலங்கரிப்போம்
அழகுக்கு அழகு செய்வோம்
கற்பின் அமுதினை அலங்கரிப்போம்
அமுதினை அலங்கரிப்போம்

குழு : செம்பஞ்சு பூசிய பாதத்திலே
சிறுவிரல் மோதிரம் வளைத்து வைப்போம்
செம்பஞ்சு பூசிய பாதத்திலே
சிறுவிரல் மோதிரம் வளைத்து வைப்போம்
அம்பினும் கூறிய கண்களிலே
அஞ்சன மையிட்டு அழகு செய்வோம்

குழு : அமுதினை அலங்கரிப்போம்
அழகுக்கு அழகு செய்வோம்
கற்பின் அமுதினை அலங்கரிப்போம்
அமுதினை அலங்கரிப்போம்

ஆண் : வையம் நிலையறிய
மன்னவர்கள் உனையறிய
வையம்……ம்ம்ம்ம்…… நிலையறிய
மன்னவர்கள் உனையறிய
ஐயம் மறைந்துபட
அனைத்துலகம் பணிந்து வர
பொய் தவிர்ந்த நேர்மை
பொன்மலராம் ஜானகியை
நெய் வளர்த்த தீயில்
நீந்திவர ஆணையிட்டேன்….
ஆணையிட்டேன்……..

பெண் : நெருப்பினை நெருப்பே நீயும்
நெருங்குதல் இயலுமாயின்
நேரிய எனது மேனி
நெருங்குக நெருப்பே இன்று

பெண் : மருப்பெனத் திரண்ட தோளின்
மன்னவன் கண் முன்னாலே
மை குழல் மலரையேனும்
எரிப்பையோ நெருப்பே வா……
எரிப்பையோ நெருப்பே வா……
எரிப்பையோ நெருப்பே வா……

குழு : காண வேண்டும் லட்சம் கண்கள்…….
காண வேண்டும் லட்சம் கண்கள்….
சீதா தேவியின் காலுக்கு நிகரோ பெண்கள்
காண வேண்டும் லட்சம் கண்கள்…..
சீதா தேவியின் காலுக்கு நிகரோ பெண்கள்
காண வேண்டும் லட்சம் கண்கள்…..

குழு : நவரத்தின தங்கத்தோடு
நடையிலே அன்னப்பேடு
நவரத்தின தங்கத்தோடு
நடையிலே அன்னப்பேடு
அவனுக்கு இல்லை ஈடு
அவனுக்கு அவளே ஈடு

குழு : காண வேண்டும் லட்சம் கண்கள்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here