Singer : Mickey J. Meyer

Music by : Mickey J. Meyer

Male : Kalloori thaaiyaae
Kalloori thaaiyaae
Paththu maadham irundhom
Petra thaaiyin garbaththil
Naangu aandu irundhom
Katra thaayin garbaththil

Male : Kalaiththu vidaadhae- engalai
Kalaiththu vidaadhae
Vellai thaalaai vandhom
Vidha vidhamaai nee kirukkinaai
Ohohohohho……

Male : Ezhudhiya vaasagam
Ariyum munaeyae naan
Engalai kizhikkiraai….

Male : Kalloori thaaiyaae
Kalloori thaaiyaae
Paththu maadham irundhom
Petra thaaiyin garbaththil
Naangu aandu irundhom
Katra thaayin garbaththil

Male : Kalaiththu vidaadhae- engalai
Kalaiththu vidaadhae

Male : Indrodu mudigiradhaa
Puriyavillai
Ini meendum kaanbomaa
Vidaiyumillai
Kaadhal dhaan vandhudhuvaa…
Theriyavillai
Kanneerai moodugirom
Mudiyavillai

Male : Kalloori neengum kadaisi naalil
Kannil pongudhu iru kanneer
Vaazhvu koduththa kalloorikku
Vanakkam sollum oru kanneer
Marandhu seidha kaayangalukku
Mannippu ketkum oru kanneer

Male : Ulagaththukkul eththanai idhayam
Enbadhai ingae paarththomae
Idhayaththukkum eththanai ulagam
Enbadhai ingae paarththomae
Ulagam periyadhaa idhayam periyadhaa
Vidai theiryaamal vidaiperuvomae

Male : Kalloori thaaiyaae
Kalloori thaaiyaae
Paththu maadham irundhom
Petra thaaiyin garbaththil
Naangu aandu irundhom
Katra thaayin garbaththil

Male : Kalaiththu vidaadhae- engalai
Kalaiththu vidaadhae

Chorus : Vidaiperuvomae
Vidaiperuvomae…..

பாடகர் : மிக்கி ஜே. மேயர்

இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர்

ஆண் : கல்லூரி தாயே
கல்லூரி தாயே பத்து
மாதம் இருந்தோம் பெற்ற
தாயின் கர்ப்பத்தில் நான்கு
ஆண்டு இருந்தோம் கற்ற
தாயின் கர்ப்பத்தில்

ஆண் : களைத்து விடாதே
எங்களை களைத்து விடாதே
வெள்ளை தாளாய் வந்தோம்
வித விதமாய் நீ கிறுக்கினாய்
ஓஹோஹோஹோஓஹோ

ஆண் : எழுதிய வாசகம்
அறியும் முன்னயே நான்
எங்களை கிழிக்கிறாய்

ஆண் : கல்லூரி தாயே
கல்லூரி தாயே பத்து
மாதம் இருந்தோம் பெற்ற
தாயின் கர்ப்பத்தில் நான்கு
ஆண்டு இருந்தோம் கற்ற
தாயின் கர்ப்பத்தில்

ஆண் : களைத்து விடாதே
எங்களை களைத்து விடாதே

ஆண் : இன்றோடு
முடிகிறதா புரியவில்லை
இனி மீண்டும் காண்போமா
விடையுமில்லை காதல் தான்
வந்ததுவா தெரியவில்லை
கண்ணீரை மூடுகிறோம்
முடியவில்லை

ஆண் : கல்லூரி நீங்கும்
கடைசி நாளில் கண்ணில்
பொங்குது இரு கண்ணீர்
வாழ்வு கொடுத்த கல்லூரிக்கு
வணக்கம் சொல்லும் ஒரு
கண்ணீர் மறந்து செய்த
காயங்களுக்கு மன்னிப்பு
கேட்கும் ஒரு கண்ணீர்

ஆண் : உலகத்துக்குள்
எத்தனை இதயம் என்பதை
இங்கே பார்த்தோமே
இதயத்துக்கும் எத்தனை
உலகம் என்பதை இங்கே
பார்த்தோமே உலகம் பெரியதா
இதயம் பெரியதா விடை
தெரியாமல் விடை பெறுவோமே

ஆண் : கல்லூரி தாயே
கல்லூரி தாயே பத்து
மாதம் இருந்தோம் பெற்ற
தாயின் கர்ப்பத்தில் நான்கு
ஆண்டு இருந்தோம் கற்ற
தாயின் கர்ப்பத்தில்

ஆண் : களைத்து விடாதே
எங்களை களைத்து விடாதே

குழு : விடை பெறுவோமே
விடை பெறுவோமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here