Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Kalyaana maalai kondaadum pennae
En paattai kelu unmaigal sonnen
Kalyaana maalai kondaadum pennae
En paattai kelu unmaigal sonnen

Male : Suruthiyodu layam polavae
Inaiyaagum thunaiyaagum
Samsaara sangeedhamae

Male : Kalyaana maalai kondaadum pennae
En paattai kelu unmaigal sonnen

Male : Vaalibangal odum
Vayadhaaga koodum
Aanaalum anbu maaraadhathu
Maalaiyidum sondham
Mudipotta bandham
Pirivennum sollae ariyaadhathu

Male : Azhagaana manaivi
Anbaana thunaivi
Amaindhaalae perinbamae
Madimeedhu thuyila
Sarasangal payila
Mogangal aarambamae

Male : Nalla manaiyaalin
Nesam oru kodi
Nenjamenum veenai
Paadumae thodi
Sandhoosha saamraajyamae…

Male : Kalyaana maalai kondaadum pennae
En paattai kelu unmaigal sonnen
Suruthiyodu layam polavae
Inaiyaagum thunaiyaagum
Samsaara sangeedhamae

Male : Kalyaana maalai kondaadum pennae
En paattai kelu unmaigal sonnen

Chorus : Hmmm…mm…mmm….
Hmm..mm…mmm….mmm…
Hmmm..mmm…mmm…mmm…
Hmmm..mmm…mmm…mmm…mmm….

Male : Koovugindra kuyilai
Koottukkul vaithu
Paadendru sonnaal paadaadhamaa
Solaimayil thannai
Siraivaithu pootti
Aadendru sonnaal aadaadhamaa

Male : Naaldhorum rasigan
Paarattum kalainjan
Kaavalgal enakillaiyae
Sogangal enakkum
Nenjodu irukkum
Sirikaadha naalillaiyae

Male : Thukkam sila neram
Pongi varumbodhum
Makkal manam polae
Paaduven kannae
En sogam ennodudhaan…

Male : Kalyaana maalai kondaadum pennae
En paattai kelu unmaigal sonnen
Suruthiyodu layam polavae
Inaiyaagum thunaiyaagum
Samsaara sangeedhamae

Male : Kalyaana maalai kondaadum pennae
En paattai kelu unmaigal sonnen
Hmmm..mmmm..mmm mm…
Hmmm..mmmm..mmm mm…

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு
உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு
உண்மைகள் சொன்னேன்

ஆண் : சுருதியோடு லயம்
போலவே இணையாகும்
துணையாகும் சம்சார
சங்கீதமே

ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு
உண்மைகள் சொன்னேன்

ஆண் : வாலிபங்கள்
ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம்
முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே
அறியாதது

ஆண் : அழகான மனைவி
அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள்
பயில மோகங்கள் ஆரம்பமே

ஆண் : நல்ல மனையாளின்
நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும்
வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே

ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு
உண்மைகள் சொன்னேன்

ஆண் : சுருதியோடு லயம்
போலவே இணையாகும்
துணையாகும் சம்சார
சங்கீதமே

ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு
உண்மைகள் சொன்னேன்

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

ஆண் : கூவுகின்ற குயிலை
கூட்டுக்குள் வைத்து பாடென்று
சொன்னால் பாடாதம்மா சோலை
மயில் தன்னை சிறைவைத்து
பூட்டி ஆடென்று சொன்னால்
ஆடாதம்மா

ஆண் : நாள்தோறும் ரசிகன்
பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும்
நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே

ஆண் : துக்கம் சில நேரம்
பொங்கிவரும் போதும்
மக்கள் மனம்போலே
பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடு
தான்

ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு
உண்மைகள் சொன்னேன்

ஆண் : சுருதியோடு லயம்
போலவே இணையாகும்
துணையாகும் சம்சார
சங்கீதமே

ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு
உண்மைகள் சொன்னேன்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here