Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Kalyana kovilin deiveega kalasam
Kangalil therindhadhu thelivaaga
Vaanampattu megam vaana thattil eari
Aadudhu odudhu aanandham paadudhu kanna
Kalyana kovilin deiveega kalasam

Female : Vaazhaiyum kamugum thorana pandhal
Manavarai manasangu mani dheepangal
Thozhiyar gaeli thogaiyar vaazhthu
Sorgathil undaagum suga raagangal

Female : Andru nanavaandahu indru kanavanadhu
Andru nanavaandahu indru kanavanadhu
Adhu deivathin sodhanai
Sondhathin vaedhanai kanna
Kalyaana kovilin dheiveega kalasam

Female : Mangalam neendhum kunguma chaandhu
Malligai malarmaalai kanneerilae
Kaigalil kaapu kaalgalil velli
Kanivuru thalaipaagai venneerile

Female : Inba mananaal andru
Thunba thirunaal indru
Inba mananaal andru
Thunba thirunaal indru
Athu deivathin sodhanai
Sondhathin vaedhanai kanna……

Female : Kalyana kovilin deiveega kalasam
Haaaa…aaaa…aaaa….

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்
கண்களில் தெரிந்தது தெளிவாக
வானப்பட்டு மேகம் வானத்தட்டில் ஏறி
ஆடுது ஓடுது ஆனந்தம் பாடுது கண்ணா
கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்

பெண் : வாழையும் கமுகும் தோரண பந்தல்
மணவறை மணிச்சங்கு மணி தீபங்கள்
தோழியர் கேலி தோகையர் வாழ்த்து
சொர்க்கத்தில் உண்டாகும் சுக ராகங்கள்

பெண் : அன்று நனவானது இன்று கனவானது
அன்று நனவானது இன்று கனவானது
அது தெய்வத்தின் சோதனை
சொந்தத்தின் வேதனை கண்ணா
கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்

பெண் : மங்கலம் நீந்தும் குங்கும சாந்து
மல்லிகை மலர்மாலை கண்ணீரிலே
கைகளில் காப்பு கால்களில் வெள்ளி
கனிவுறு தலைப்பாகை வெந்நீரிலே

பெண் : இன்ப மணநாள் அன்று
துன்ப திருநாள் இன்று
இன்ப மணநாள் அன்று
துன்ப திருநாள் இன்று
அது தெய்வத்தின் சோதனை
சொந்தத்தின் வேதனை கண்ணா…..

பெண் : கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்
ஆஆ……ஆஆஆஆஆ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here