Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Vairamuthu

Chorus : ……………….

Male : Kalyaanam katti kollum naal vanthathu
Poovukku aadai katta yaar vanthathu
Kalyaanam katti kollum naal vanthathu
Poovukku aadai katta yaar vanthathu
Sooriyan paarththathu thaamarai pooththathu
Thendral vanthu ennai thaali katta sonnathu

Female : Oo…oo…oo…kalyaanam katti kollum naal vanthathu
Poovukku aadai katta yaar vanththu
Kalyaanam katti kollum naal vanthathu
Poovukku aadai katta yaar vanththu
Sooriyan paarththathu thaamarai pooththathu
Thendral vanthu ennai thaali katta sonnathu

Male : Kondaada vaa
Chorus : Istam polae katti kolla
Nastam illai otti kollu
Female : Maalai idu….
Chorus : Mogam vanthu killi vaikkum
Vetkkam vanthu thalli vaikkum

Male : Naanam vidu….
Chorus : Maalai vanthaal medai thedu
Kaalai vanthaal aadai thedu
Female : Sernthu vidu….
Chorus : Meththai melae sattam illai
Alli kondaal nattam illai
Female : Hhhha….aalai vidu

Chorus : Kalyaanam katti kollum naal vanthathu
Poovukku aadai katta yaar vanthathu
Chorus : Sanigamaapaa saganirisaa
Garisaa nithapa garisaa nithapa….

Female : Paada vaa devanae
Male : Kadhalae jeevanae
Female : Kadhale maarumaa
Male : Vaanamthaan veezhumaa
Female : Anbaalae malar thoovi vanthaanae mannan thedi
Kangal kalanthu pesi kanda sugangal kodi

Chorus : Aambala naangalellaam jallikattu kaala
Aanaana aalaiyellaam aatti vaikkum sela
Oo….oo….oo….kooraiyil yaerivittaal koovumaadi kozhi
Sevalin vegamellaam kann simittum naazhi

Both : Senthoora kolamidum paarvaiyae
Thondrumae aanantham koodume koodume

Male : Ooohoi
Kalyaanam katti kollum naal vanthathu
Female : Poovukku aadai katta yaar vanthathu
Male : Sooriyan paarththathu
Female : Thaamarai pooththathu
Male : Thendral vanthu ennai thaali katta sonnathu

Female : Aasaigal vaanilae oorvalam poguthae
Male : Aayiram thaamarai thovuthae thaenmazhai
Female : Kangal urangumpothum unthan uruvam thondrum
Jenmangal pala maarum ovvondrum unnai thedum

Chorus : Mangaaththaa selaiyilae malligaipoo vaasam
Aanaakka aamabalainga mookku rompa mosam
Thanjavur veththalaiya kaambu killa poraen
Dindugal paakku vachchu palludaikka poraen

Both : Santhosa poo indru malaranthathu
Nilavilae nanainthathu kulirnthathu kulirnthathu

Female : Ooohoi….
Kalyaanam katti kollum naal vanthathu
Male : Poovukku aadai katta yaar vanthathu
Female : Sooriyan paarththathu
Male : Thaamarai pooththathu
Female : Thendral vanthu ennai thaali katta sonnathu

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடலாசிரியர்  : வைரமுத்து

குழு : ……………………

ஆண் : கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது
பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது
பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
சூரியன் பார்த்தது தாமரை பூத்தது
தென்றல் வந்து என்னை தாலிக் கட்ட சொன்னது

பெண் : ஓ…..ஓ…ஓ…கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது
பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது
பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
சூரியன் பார்த்தது தாமரை பூத்தது
தென்றல் வந்து உன்னை தாலிக் கட்ட சொன்னது

ஆண் : கொண்டாட வா….
குழு : இஷ்டம் போலே கட்டிக் கொள்ள
நஷ்டம் இல்லை ஒட்டிக் கொள்ளு
பெண் : மாலை இடு……
குழு : மோகம் வந்து கிள்ளி வைக்கும்
வெட்கம் வந்து தள்ளி வைக்கும்

ஆண் : நாணம் விடு……
குழு : மாலை வந்தால் மேடை தேடு
காலை வந்தால் ஆடை தேடு
பெண் : சேர்ந்து விடு…….
குழு : மெத்தை மேலே சட்டம் இல்லை
அள்ளிக் கொண்டால் நட்டம் இல்லை
பெண் : ஹ்ஹ்ஹ….ஆளை விடு

குழு : கல்யாணம் கட்டிக்கொள்ளும் நாள் வந்தது
பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
ஸநிகமாபா ஸகநிரிஸா
கரிஸா நிதப கரிஸா நிதப…..

பெண் : பாட வா தேவனே…
ஆண் : காதலே ஜீவனே
பெண் : காதலே மாறுமா
ஆண் : வானம்தான் வீழுமா
பெண் : அன்பாலே மலர் தூவி வந்தானே மன்னன் தேடி
கண்கள் கலந்து பேசி கண்ட சுகங்கள் கோடி

குழு : ஆம்பள நாங்களெல்லாம் ஜல்லிக்கட்டு காள
ஆனான ஆளையெல்லாம் ஆட்டி வைக்கும் சேல
ஓ….ஓ…..ஒ….கூரையில் ஏறிவிட்டால் கூவுமாடி கோழி
சேவலின் வேகமெல்லாம் கண் சிமிட்டும் நாழி

இருவர் : செந்தூரக் கோலமிடும் பார்வையே
தோன்றுமே ஆனந்தம் கூடுமே கூடுமே

ஆண் : ஓஓஒஹோய்….
கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது
பெண் : பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
ஆண் : சூரியன் பார்த்தது
பெண் : தாமரை பூத்தது
ஆண் : தென்றல் வந்து என்னை தாலிக் கட்ட சொன்னது

பெண் : ஆசைகள் வானிலே ஊர்வலம் போகுதே
ஆண் : ஆயிரம் தாமரை தூவுதே தேன்மழை
பெண் : கண்கள் உறங்கும்போதும் உந்தன் உருவம் தோன்றும்
ஜென்மங்கள் பல மாறும் ஒவ்வொன்றும் உன்னை தேடும்

குழு : மங்காத்தா சேலையிலே மல்லிகைப்பூ வாசம்
ஆனாக்க ஆம்பளைங்க மூக்கு ரொம்ப மோசம்
தஞ்சாவூர் வெத்தலைய காம்பு கிள்ள போறேன்
திண்டுக்கல் பாக்கு வச்சு பல்லுடைக்க போறேன்

இருவர் : சந்தோஷப் பூ இன்று மலர்ந்தது
நிலவிலே நனைந்தது குளிர்ந்தது குளிர்ந்தது

பெண் : ஓஓஒஹோய்….
கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது
ஆண் : பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
பெண் : சூரியன் பார்த்தது
ஆண் : தாமரை பூத்தது
பெண் : தென்றல் வந்து உன்னை தாலிக் கட்ட சொன்னது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here