Singer : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Female : Marriage
Male : Happy marriage
Female : Happy marriage
Both : Happy marriage

Female : Kalyaanam…mm…
Male : Sorkkaththil nichchayippathaa
Female : Aahaa illai illai
Sorkkaththai nichchayippathu

Male : Kalyaanam…mm…
Female : Sorkkaththil nichchayippathaa
Male : Aahaa illai illai
Sorkkaththai nichchayippathu

Female : Megangal melathaalangal
Minnalgal vara dheepangal
Both : Megangal melathaalangal
Minnalgal vara dheepangal
Male : Ilamaiyin kanavugal
Oorvalam poguthu happy happy

Female : Kalyaanam…mm…
Sorkkaththil nichchayippathaa
Male : Aahaa illai illai
Sorkkaththai nichchayippathu

Male : Pani neerae kodhikkuthu inneram
Enai neeyae anaiththu kol nenjoram
Female : Pani neerae kodhikkuthu inneram
Enai neeyae anaiththu kol nenjoram

Male : Ini naan yaedhu nee yaedhu thedi paarththukol
Udal engengum konjaatho thaen oottrugal
Female : Enai neerodu neer pola unnil saerththukkol
Enai neengaamal thoongaamal nee paarththukkol

Male : Idaiyinil iththanai idaiveli yaenadi kannae
Female : Edhuvarai sugam ini adhuvarai anupavi anbe

Male : Kalyaanam…mm…
Female : Sorkkaththil nichchayippathaa

Female : Mazhaikkaalam aruginil nee vanthaal
Veyyil kaayum iravilum nee sendraal
Mazhaikkaalam aruginil nee vanthaal
Veyyil kaayum iravilum nee sendraal

Male : Adi kannae un kaar koondhal
Thongum thottangal
Un kai rendum en tholil poo paarangal
Female : Oru sevvaanam poo thoovum
Maalai kaalangal
Inba thaenodai naan endru neeraadungal

Male : Nenjanai panjanai
Nee thara vanjanai yaeno
Female : Niththila muththirai
Nee tharum idangalil thaeno

Male : Kalyaanam…mm…
Female : Sorkkaththil nichchayippathaa
Male : Aahaa illai illai
Sorkkaththai nichchayippathu….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைப்பித்தன்

பெண் : மேரேஜ்
ஆண் : ஹேப்பி மேரேஜ்
பெண் : ஹேப்பி மேரேஜ்
இருவர் : ஹேப்பி மேரேஜ்

பெண் : கல்யாணம்….ம்ம்…..
ஆண் : சொர்க்கத்தில் நிச்சயிப்பதா
பெண் : ஆஹா இல்லை இல்லை
சொர்க்கத்தை நிச்சயிப்பது….

ஆண் : கல்யாணம்….ம்ம்ம்….
பெண் : சொர்க்கத்தில் நிச்சயிப்பதா
ஆண் : ஆஹா இல்லை இல்லை
சொர்க்கத்தை நிச்சயிப்பது….

பெண் : மேகங்கள் மேளதாளங்கள்
மின்னல்கள் வைர தீபங்கள்
இருவர் : மேகங்கள் மேளதாளங்கள்
மின்னல்கள் வைர தீபங்கள்
ஆண் : இளமையின் கனவுகள்
ஊர்வலம் போகுது ஹேப்பி ஹேப்பி..

பெண் : கல்யாணம்….ம்ம்…..
சொர்க்கத்தில் நிச்சயிப்பதா
ஆண் : ஆஹா இல்லை இல்லை
சொர்க்கத்தை நிச்சயிப்பது….

ஆண் : பனி நீரே கொதிக்குது இந்நேரம்
எனை நீயே அணைத்துக் கொள் நெஞ்சோரம்
பெண் : பனி நீரே கொதிக்குது இந்நேரம்
எனை நீயே அணைத்துக் கொள் நெஞ்சோரம்

ஆண் : இனி நான் ஏது நீ ஏது தேடிப் பார்த்துக்கொள்
உடல் எங்கெங்கும் கொஞ்சாதோ தேன் ஊற்றுக்கள்
பெண் : எனை நீரோடு நீர்ப் போல உன்னில் சேர்த்துக்கொள்
எனை நீங்காமல் தூங்காமல் நீ பார்த்துக்கொள்

ஆண் : இடையினில் இத்தனை இடைவெளி ஏனடி கண்ணே
பெண் : எதுவரை சுகம் இனி அதுவரை அனுபவி அன்பே

ஆண் : கல்யாணம்….ம்ம்….
பெண் : சொர்க்கத்தில் நிச்சயிப்பதா

பெண் : மழைக்காலம் அருகினில் நீ வந்தால்
வெய்யில் காயும் இரவிலும் நீ சென்றால்
மழைக்காலம் அருகினில் நீ வந்தால்
வெய்யில் காயும் இரவிலும் நீ சென்றால்

ஆண் : அடிக் கண்ணே உன் கார்க் கூந்தல்
தொங்கும் தோட்டங்கள்
உன் கை ரெண்டும் என் தோளில் பூ பாரங்கள்
பெண் : ஒரு செவ்வானம் பூத் தூவும்
மாலை காலங்கள்
இன்ப தேனோடை நான் என்று நீராடுங்கள்

ஆண் : நெஞ்சணை பஞ்சணை
நீ தர வஞ்சனை ஏனோ
பெண் : நித்தில முத்திரை நீ
தரும் இடங்களில் தேனோ

ஆண் : கல்யாணம்….
பெண் : சொர்க்கத்தில் நிச்சயிப்பதா
ஆண் : ஆஹா இல்லை இல்லை
சொர்க்கத்தை நிச்சயிப்பது….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here