Singers : Krishnaraj and Murali

Music by : Deva

Male : Kalyaanamaam kalyaanam
Kannu padum kalyaanam
Kalyaanamaam kalyaanam
Kannu padum kalyaanam
Kannu pattaa kuththamilla
Podungammaa kummaalam

Male : Naazhi aaguthu
Maappillaikku nazhungu vayunga
Chorus : Aahaa
Female : Kalyaana mappillai
Summaa Amsamaa irukkaarungo
Chorus : Oho

Male : Vaango vaango ellorukkum vanthamunga

Male : Ellorukkum vanthanam
Idhu namma veettu kalyaanam
Vanthavanga anbuthaan kalyaanaththil seethanam

Male : Ponnukkum maappillaikkum
Nalla poruththamunga
Chorus : Aahaa
Male : Manthiraththa sollungonnaa
Manam pola irukkattum
Chorus : Oho

Female : Valluvanum vasugiyaai
Vaazh naalil vaazhttum
Male : Valluvanum vasugiyaai
Vaazh naalil vaazhttum
Vasantha kaalam veesattum
Kasantha kaalam pogattum

Male : Azhagaana penn maanae….ae…
Asainthaadum mayilthaanae…ae…
Chumma nee nikkaathae sokkaththaan vaikkaathae
Kalyaana katcheri kannaalae meettaathae

Male : Pandiya mannan unnai paaththirunthaa
Parisu onnu thanthiruppaan
Pallava mannan unnai kandirunthaa
Silaiyum onnu senjiruppaan

Chorus : Arputhamae Intha kalayaanamae
Aasaipadi ini porkaalamae
Kalyaanamaam kalyaanam
Kannu padum kalyaanam
Kannu pattaa kuththamilla
Podungammaa kummaalam

Male : Munnooru muththangal sugamaana saththangal
Vinmeengal ellaamae nilavaaga maarattum
Nee vaiththa poo vaasam ulagengum veesattum

Male : Ulloora aasa vanthu oosaiyindri
Un nenappa pesuthey
Chorus : Hae….ae….ae….
Male : Uyirukkum udalukkumthaan
Odi vanthu paalamittu selluthae

Chorus : Poochchoodunga penna kooppidunga
Santhanaththa konjam poosidunga
Kalyaanamaam kalyaanam
Kannu padum kalyaanam
Kannu pattaa kuththamilla
Podungammaa kummaalam

Male : Kannaana kannamma…..aaa….
Kalyaana pennammaa……aaa…..
Mappillai manam pola
Mana pennum irukkaththaan
Kai serum kannaalan seedhaikku raamanthaan
Eeruyir oor uyiraai santhosamaai indru mudhal sera

Chorus : Atchathai podungamma
Aandu pala anboduthaan vaazha
Thanga ratham iva thanga ratham
Thaali kattu idhu nalla neram

Chorus : Santhosamaam santhosam sagalarukkum santhosam
Vanthavanga ellorum vaazhththu koora santhosam
Santhosamaam santhosam sagalarukkum santhosam
Vanthavanga ellorum vaazhththu koora santhosam…..

பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் முரளி

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : கல்யாணமாம் கல்யாணம்
கண்ணு படும் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கண்ணு படும் கல்யாணம்
கண்ணு பட்டா குத்தமில்ல
போடுங்கம்மா கும்மாளம்

ஆண் : நாழி ஆகுது மாப்பிள்ளைக்கு நழுங்கு வையுங்க
குழு : ஆஹா
பெண் : கல்யாண மாப்பிள்ளை
சும்மா அம்சமா இருக்காருங்கோ
குழு : ஓஹோ

ஆண் : வாங்க வாங்க எல்லோருக்கும் வந்தனமுங்க….

ஆண் : எல்லோருக்கும் வந்தனம்
இது நம்ம வீட்டு கல்யாணம்
வந்தவங்க அன்புதான் கல்யாணத்தில் சீதனம்

ஆண் : பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும்
நல்ல பொருத்தமுங்க
குழு : ஆஹா
ஆண் : மந்திரத்த சொல்லுங்கோன்னா
மனம் போல இருக்கட்டும்
குழு : ஓஹோ

பெண் : வள்ளுவனும் வாசுகியாய்
வாழ் நாளில் வாழட்டும்
ஆண் : வள்ளுவனும் வாசுகியாய்
வாழ் நாளில் வாழட்டும்
வசந்த காலம் வீசட்டும்
கசந்த காலம் போகட்டும்

ஆண் : அழகான பெண் மானே….ஏ……
அசைந்தாடும் மயில்தானே….ஏ…..ஏ……
சும்மா நீ நிக்காதே சொக்கத்தான் வைக்காதே
கல்யாண கச்சேரி கண்ணாலே மீட்டாதே

ஆண் : பாண்டிய மன்னன் உன்னை பாத்திருந்தா
பரிசு ஒன்னு தந்திருப்பான்
பல்லவ மன்னன் உன்னை கண்டிருந்தா
சிலையும் ஒன்னு செஞ்சிருப்பான்

குழு : அற்புதமே இந்தக் கல்யாணமே
ஆசைப்படி இனி பொற்காலமே
கல்யாணமாம் கல்யாணம்
கண்ணு படும் கல்யாணம்
கண்ணு பட்டா குத்தமில்ல
போடுங்கம்மா கும்மாளம்

ஆண் : முன்னூறு முத்தங்கள் சுகமான சத்தங்கள்
விண்மீன்கள் எல்லாமே நிலவாக மாறட்டும்
நீ வைத்த பூ வாசம் உலகெங்கும் வீசட்டும்

ஆண் : உள்ளூர ஆச வந்து ஓசையின்றி
உன் நெனப்ப பேசுதே
குழு : ஹே….ஏ…..ஏ…..
ஆண் : உயிருக்கும் உடலுக்கும்தான்
ஓடி வந்து பாலமிட்டு செல்லுதே

குழு : பூச்சூடுங்க பெண்ண கூப்பிடுங்க
சந்தனத்த கொஞ்சம் பூசிடுங்க
கல்யாணமாம் கல்யாணம்
கண்ணு படும் கல்யாணம்
கண்ணு பட்டா குத்தமில்ல
போடுங்கம்மா கும்மாளம்

ஆண் : கண்ணான கண்ணம்மா….ஆஅ……
கல்யாண பெண்ணம்மா….ஆஅ……
மாப்பிள்ளை மனம் போல
மணப் பெண்ணும் இருக்கத்தான்
கை சேரும் கண்ணாளன் சீதைக்கு ராமன்தான்
ஈருயிர் ஓர் உயிராய் சந்தோஷமாய் இன்று முதல் சேர

குழு : அட்சதை போடுங்கம்மா
ஆண்டு பல அன்போடுதான் வாழ
தங்க ரதம் இவ தங்க ரதம்
தாலிக் கட்டு இது நல்ல நேரம்

குழு : சந்தோஷமாம் சந்தோஷம் சகலருக்கும் சந்தோஷம்
வந்தவங்க எல்லோரும் வாழ்த்து கூற சந்தோஷம்
சந்தோஷமாம் சந்தோஷம் சகலருக்கும் சந்தோஷம்
வந்தவங்க எல்லோரும் வாழ்த்து கூற சந்தோஷம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here