Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Kalyaanamae oru pennoduthaan
Kalyaanamae oru pennoduthaan
Female : Idhil yaar enna sonnaalum
Oor enna sonnaalum
Un vaazhvu ennoduthaan
Idhil yaar enna sonnaalum
Oor enna sonnaalum
Un vaazhvu ennoduthaan
Female : Kalyaanamae oru pennoduthaan
Female : Thaayin veedu pennai petru
Thaarai vaarkkumvarai
Pennin veedu kaalakaalam
Thalaivan azhaikkum varai
Antha thalaivan azhaikkum varai
Female : Palli paadam thaayodu mudiyum
Palli mudiyaathandro
Palli paadam thaayodu mudiyum
Palli mudiyaathandro
Un vaazhvu ennoduthaan
Un vaazhvu ennoduthaan
Female : Kalyaanamae oru pennoduthaan
Idhil yaar enna sonnaalum
Oor enna sonnaalum
Un vaazhvu ennoduthaan
Female : Oodal konjam naduvil vanthaal koodal sugamaavathu
Oodal konjam naduvil vanthaal koodal sugamaavathu
Pennin sugaththai enniththaanae
Annai mozhi sonnathu
Annai mozhi sonnathu
Intha villakkam edharkkaga sonnaen indru yaedhavathu
Heem hmm mm indru yaedhaavathu
Female : Kalyaanamae oru pennoduthaan
Female : Manjal ponaal thilagam kalainthaal
Vaazhvai izhanthaal enbaar
Palliyaraiyil irandum kalainthaal
Paavai vaazhntaal enbaar
Netru kadhaiyai nettrodu marappom
Indru mudhaliravu indru mudhaliravu
Heem hmm mm indru mudhaliravu
Female : Kalyaanamae oru pennoduthaan
Idhil yaar enna sonnaalum
Oor enna sonnaalum
Un vaazhvu ennoduthaan
En vaazhvu unnoduthaan
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
பெண் : இதில் யார் என்ன சொன்னாலும்
ஊர் என்ன சொன்னாலும்
உன் வாழ்வு என்னோடுதான்
இதில் யார் என்ன சொன்னாலும்
ஊர் என்ன சொன்னாலும்
உன் வாழ்வு என்னோடுதான்
பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
பெண் : தாயின் வீடு பெண்ணை பெற்று
தாரை வார்க்கும்வரை
பெண்ணின் வீடு காலகாலம்
தலைவன் அழைக்கும் வரை
அந்த தலைவன் அழைக்கும் வரை…
பெண் : பள்ளிப் பாடம் தாயோடு முடியும்
பள்ளி முடியாதன்றோ
பள்ளிப் பாடம் தாயோடு முடியும்
பள்ளி முடியாதன்றோ
உன் வாழ்வு என்னோடுதான்
என் வாழ்வு உன்னோடுதான்
பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
இதில் யார் என்ன சொன்னாலும்
ஊர் என்ன சொன்னாலும்
உன் வாழ்வு என்னோடுதான்
பெண் : ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால் கூடல் சுகமாவது
ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால் கூடல் சுகமாவது
பெண்ணின் சுகத்தை எண்ணித்தானே
அன்னை மொழி சொன்னது
அன்னை மொழி சொன்னது
இந்த விளக்கம் எதற்காக சொன்னேன் இன்று ஏதாவது
ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று ஏதாவது
பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
பெண் : மஞ்சள் போனால் திலகம் கலைந்தால்
வாழ்வை இழந்தாள் என்பார்
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால்
பாவை வாழ்ந்தாள் என்பார்
பெண் : மஞ்சள் போனால் திலகம் கலைந்தால்
வாழ்வை இழந்தாள் என்பார்
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால்
பாவை வாழ்ந்தாள் என்பார்
நேற்று கதையை நேற்றோடு மறப்போம்
இன்று முதலிரவு இன்று முதலிரவு
ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று முதலிரவு
பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
இதில் யார் என்ன சொன்னாலும்
ஊர் என்ன சொன்னாலும்
உன் வாழ்வு என்னோடுதான்
என் வாழ்வு உன்னோடுதான்…