Singers : S. P. Balasubrahmanyam and Saritha

Music by : M. S. Viswanathan

Male : Kanaa kaanum kangal mella
Urangaatho paadal solla
Nilaakkaala megam ellaam
Ulaap pogum neram kannae
Ulaap pogum neram kannae

Male : Kanaa kaanum kangal mella
Urangaatho paadal solla
Nilaakkaala megam ellaam
Ulaap pogum neram kannae
Ulaap pogum neram kannae

Male : Kumari uruvam kuzhanthai ullam
Rendum ondraana maayam neeyo
Thalaivan madiyil magalin vadivil thoongum seyo

Male : Kumari uruvam kuzhanthai ullam
Rendum ondraana maayam neeyo
Thalaivan madiyil magalin vadivil thoongum seyo

Male : Nodiyil naalthorum niram maarum devi
Vidaithaan kidaikkaamal thadumaarum kelvi

Male : Vilakku yaetri vaiththaalkooda
Nizhal pola thondrum nijamae
Nizhal pola thondrum nijamae

Female : Naan un nijaththai nesikkiraen
Un nizhalaiyo poojikkiraen
Adhanaalthaan un nizhal vizhuntha
Nilaththin mannai kooda
En nettriyil neeru pol thiruneeru pol
Ittu kolgiraen

Male : Kanaa kaanum kangal mella
Urangaatho paadal solla

Male : Pudhiya kavithai punaiyum kuyilae
Nenjjil undaana kaayam enna
Ninaivu alaigal neruppil kulikkum paavam enna
Kizhakku velukkaamal irukkaathu vaanam

Male : Vidiyum naal paarththu iruppaenae naanum
Varungaalam inbam endru
Nigazhkaalam koorum kannae
Nigazhkaalam koorum kannae

Male : Kanaa kaanum kangal mella
Urangaatho paadal solla
Nilaakkaala megam ellaam
Ulaap pogum neram kannae
Ulaap pogum neram kannae
Heemmm hmm hmmm mmmm

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சரிதா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக்கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே

ஆண் : கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக்கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே

ஆண் : குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ

ஆண் : குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ

ஆண் : நொடியில் நாள் தோறும் நிறம் மாறும் தேவி
விடை தான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி

ஆண் : விளக்கு ஏற்றி வைத்தால் கூட
நிழல் போலத் தோன்றும் நிஜமே
நிழல் போலத் தோன்றும் நிஜமே

பெண் : நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்
உன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால் தான் உன் நிழல் விழுந்த
நிலத்தின் மண்ணைக் கூட
என் நெற்றியில் நீறு போல் திருநீறு போல்
இட்டுக் கொள்கிறேன்

ஆண் : கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல

ஆண் : புதிய கவிதை புனையும் குயிலே
நெஞ்சில் உண்டான காயம் என்ன
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்

ஆண் : விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று
நிகழ்காலம் கூறும் கண்ணே
நிகழ்காலம் கூறும் கண்ணே

ஆண் : கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக்கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே
ஹீம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here