Singers : P. Unni Krishnana and K. S. Chithra

Music by : Deva

Female : Ahaa….aaaa….aaa…aaa
Aaaa……aaaa….a.aa…..

Male : Kanavae kalaiyaadhae
Kaadhal kanavae kalaiyaadhae

Male : Kai yendhiyae naan ketpadhu
Orr yaasagam
Kann jaadaiyil nee pesidu
Orr vaasagam

Male : Maragadha vaarththai sollvaayaa…aa…
Mounaththinaalae kollvaaayaa
Chinna thiruvaai malarvaaya

Male : Kai yendhiyae naan ketpadhu
Orr yaasagam
Kann jaadaiyil nee pesidu
Orr vaasagam

Male : Kanavae kalaiyaadhae
Kaadhal kanavae kalaiyaadhae

Female : {Thaam thakkitathoom
Thakkitathom thakkitathom
Thaam thomkitta thakkitathoom} (2)

Male : Nee mounam kaakkumbodhum
Unn saarbil endhan perai
Unn thotta pookkal sollum illaiyaa

Female : Oru thendral thattumbodhum
Kadum puyalae muttumbodhum
Ada pookkal poigal solvadhillaiyae

Male : Unn idhazhai kettaal
Adhu poigal sollum
Unn idhayam kettaal
Adhu meigal sollum

Female : Mmm… idhayaththai ketkka neramillai
Idhu varai idhayaththil yaarumillai
Sandhu kidaiththaal nuzhaivaayaa

Male : Kai yendhiyae naan ketpadhu
Orr yaasagam
Kann jaadaiyil nee pesidu
Orr vaasagam

Female : {Thaam thakkitathoom
Thakkitathom thakkitathom
Thaam thomkitta thakkitathoom} (2)

Male : Unmai kaadhal undu
Adhai ullae vaiththukkondu
Oru manmadha sabaiyil
Saabam vaangaadhae

Female : Melliya mazhaiyin thuligal
Oru megaththukkul undu
Adhu thaanae pozhiyum
Pizhiyap paarkkaadhae

Male : Nee mazhai tharum mugila
Illai idi tharum mugila
En ver nanaippaaya illai vilagiduvaaya

Female : Aavani maadham kazhiyattumae
Kaarththigai vandhaal mazhai varumae
Innum sila naal poru manamae

Male : Kai yendhiyae naan ketpadhu
Orr yaasagam
Kann jaadaiyil nee pesidu
Orr vaasagam

Male : Kanavae kalaiyaadhae
Kaadhal kanavae kalaiyaadhae

Male : Kai yendhiyae naan ketpadhu
Orr yaasagam
Kann jaadaiyil nee pesidu
Orr vaasagam

Male : Maragadha vaarththai sollvaayaa…aa…
Mounaththinaalae kollvaaayaa
Chinna thiruvaai malarvaaya

Male : Kai yendhiyae naan ketpadhu
Orr yaasagam
Kann jaadaiyil nee pesidu
Orr vaasagam

 

பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : ……………………………….

ஆண் : கனவே கலையாதே
காதல் கனவே கலையாதே

ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்

ஆண் : மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொல்வாயா
சின்ன திருவாய் மலர்வாயா

ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்

ஆண் : கனவே கலையாதே
காதல் கனவே கலையாதே

பெண் : {தாம் தக்கிட்டதோம்
தக்கிட்டதோம் தக்கிட்டதோம்
தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்} (2)

ஆண் : நீ மௌனம் காக்கும்போதும்
உன் சார்பில் எந்தன் பேரை
உன் தோட்டப் பூக்கள்
சொல்லும் இல்லையா

பெண் : ஒரு தென்றல் தட்டும்போதும்
கடும் புயலே முட்டும்போதும்
அட பூக்கள் பொய்கள்
சொல்வதில்லையே

ஆண் : உன் இதழை கேட்டால்
அது பொய்கள் சொல்லும்
உன் இதயம் கேட்டால்
அது மெய்கள் சொல்லும்

பெண் : ம்… இதயத்தை கேட்க நேரமில்லை
இது வரை இதயத்தில் யாருமில்லை
சந்து கிடைத்தால் நுழைவாயா

ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்

பெண் : {தாம் தக்கிட்டதோம்
தக்கிட்டதோம் தக்கிட்டதோம்
தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்} (2)

ஆண் : உண்மை காதல் உண்டு
அதை உள்ளே வைத்துக்கொண்டு
ஒரு மன்மத சபையில்
சாபம் வாங்காதே

பெண் : மெல்லிய மழையின் துளிகள்
ஒரு மேகத்துக்குள் உண்டு
அது தானே பொழியும்
பிழியப் பார்க்காதே

ஆண் : நீ மழை தரும் முகிலா
இல்லை இடி தரும் முகிலா
என் வேர் நனைப்பாயா
இல்லை விலகிடுவாயா

பெண் : ஆவணி மாதம் கழியட்டுமே
கார்த்திகை வந்தால் மழை வருமே
இன்னும் சில நாள் பொறு மனமே

ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடு ஓர் வாசகம்

ஆண் : கனவே கலையாதே
காதல் கனவே கலையாதே

ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்

ஆண் : மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொல்வாயா
சின்ன திருவாய் மலர்வாயா

ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடு ஓர் வாசகம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here