Singer : P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Kanna manivannaa mugunthaa muraarae
Kanavu kandaen kannaa
Nee kai koduthaai manivannaa
Kanavu kandaen kannaa
Nee kai koduthaai manivannaa
Female : Manamenum solaiyil malar parithaen naan
Manamenum solaiyil malar parithaen naan
Maalaigal seithu manamudiththaai nee
Maalaigal seithu manamudiththaai nee
Female : Kanavu kandaen kannaa
Nee kai koduthaai manivannaa
Female : Panthal meedhoru koondhal thoranam
Vaazhaigal aadi kandaen
Paadum mangal melam thaalam
Oorvalam poe vara kandaen
Female : Mathar koottam kaigal thaangum
Manjal kungumam kandaen
Maalai soodum mangai naanun
Maaya karunai kandaen
Female : Harae krishna krishna krishna
Krishna harae harae krishna harae
Harae krishna krishna krishna
Krishna harae harae krishna harae
Female : Thanthai magalai kaalai kaiyil
Thaarai vaarthida kanadaen
Sontham suttram vaazhiya endrae
Malargal thoovida kndaen
Female : Paathi nilaavil panjanai meedhu
Naanam pongida kandaen
Paalum pazhamum kandaen adhil
Paranthaaman unai kandaen
Female : Kanavu kandaen kannaa
Nee kai koduthaai manivannaa
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : கண்ணா…….மணிவண்ணா…..முகுந்தா முராரே…
கனவு கண்டேன் கண்ணா
நீ கை கொடுத்தாய் மணிவண்ணா
கனவு கண்டேன் கண்ணா
நீ கை கொடுத்தாய் மணிவண்ணா
பெண் : மனமெனும் சோலையில் மலர் பறித்தேன் நான்
மனமெனும் சோலையில் மலர் பறித்தேன் நான்
மாலைகள் செய்து மணமுடித்தாய் நீ
மாலைகள் செய்து மணமுடித்தாய் நீ
பெண் : கனவு கண்டேன் கண்ணா
நீ கை கொடுத்தாய் மணிவண்ணா
பெண் : பந்தல் மீதொரு கூந்தல் தோரணம்
வாழைகள் ஆடிக் கண்டேன்
பாடும் மங்கல மேளம் தாளம்
ஊர்வலம் போய்வரக் கண்டேன்
பெண் : மாதர் கூட்டம் கைகள் தாங்கும்
மஞ்சள் குங்குமம் கண்டேன்
மாலை சூடும் மங்கை நானுன்
மாயக் கருணைக் கண்டேன்
பெண் : ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண
கிருஷ்ண ஹரே..ஹரே..கிருஷ்ண ஹரே
ஸ்ரீ கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண
கிருஷ்ண…ஹரே…..ஹரே…..கிருஷ்ண…ஹரே
பெண் : தந்தை மகளை காளைக் கையில்
தாரை வார்த்திடக் கண்டேன்
சொந்தம் சுற்றம் வாழிய என்றே
மலர்கள் தூவிடக் கண்டேன்
பெண் : பாதி நிலாவில் பஞ்சணை மீது
நாணம் பொங்கிடக் கண்டேன்
பாலும் பழமும் கண்டேன் அதில்
பரந்தாமன் உனைக் கண்டேன்….
பெண் : கனவு கண்டேன் கண்ணா
நீ கை கொடுத்தாய் மணிவண்ணா