Singers : L. R. Eswari and Seerkazhi Govindarajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Male : Engal tamil annai
Ethanaiyo thavamirunthu
Thingalaai sengthiraai
Thirunaattin oli vilakkaai
Valluvan kural pola vadivamo sirithaaga
Ulamo intha ulaginum perithaaga

Female : Kanjiyilae oru puththan piranthaan
Konda karunaiyinaal engal nenjil nirainthaan

Male : Annaavendrae ellorum azhaikka vanthaar
Aayiram thalaimurai thazhaikka vanthaar

Male : Annaa annaa annaa
Engal anbin deivam annaa

Male : Edhaiyum thaangum idhayam kondu thannai
Edhirppavar meethu karunai kondu
Vaithavar yaavarum vaazhattum endru
Vaazhththiya idhyam adhuvallavaa
Female and Male :
Adhu valluvan kaattiya vazhiyallavaa

Female : Maattraan thottathu malligaikkum
Nalla manamundu endrae solliyavar
Kadamai kanniyam kattupaaduthaan
Thaaraga manthiram aakkiyavar
Female and Male :
Nam thozhvugal ellaam pokkiyavar

Male : Annaa annaa annaa
Engal anbin deivam annaa

Female : Yaezhaigal siriththida arasamaiththaar
Adhil iraivanai kaanbom ena uraiththaar
Erinthidum kudisaiyil varunthiduvoorkku
Area veedugal amaithaliththaar
Female and Male :
Angu eriyum vilakkaai avar irunthaar

Female : Chennai endroru peyar maattri
Adhai senthamizh naadena peyar sootti
Male : Bharathi paadiya painthamizh naattai
Paarinil meendum kaattiyavar
Nam pazhigal anaiththaiyum maattriyavar

Male : Ellorkkum annanavan
Illaarkku selvamavan
Female : Nallorgal ullamellaam
Naalthorum aalupavan

Male : Sonnaal manam padhaikkum
Sollavo vaai padhaikkum
Thannath thanimaiyilae
Thaanuranga ponaano

Female : Vanga kadal alaiyae
Vaai moodi thoongum engal
Thanga tamizh maganai
Thaalaattu paadinaiyo
Male : Paadu nee paadu painthamizhar naadendru
Odi uzhaiththa magan urangattum amaithiyilae
Odi uzhaiththa magan urangattum amaithiyilae
Amaithiyilae

Male : Annaa annaa annaa
Engal anbin deivam annaa

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : எங்கள் தமிழ் அன்னை
எத்தனையோ தவமிருந்து
திங்களாய் செங்கதிராய்
திருநாட்டின் ஒளி விளக்காய்
வள்ளுவன் குரல் போல வடிவமோ சிறிதாக
உளமோ இந்த உலகினும் பெரிதாக…..

பெண் : காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்

ஆண் : அண்ணாவென்றே எல்லோரும் அழைக்க வந்தார்
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்

ஆண் : அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா…..

ஆண் : எதையும் தாங்கும் இதயம் கொண்டு தன்னை
எதிர்ப்பவர் மீதும் கருணைக் கொண்டு
வைத்தவர் யாவரும் வாழட்டும் என்று
வாழ்த்திய இதயம் அதுவல்லவா
பெண் மற்றும் ஆண் :
அது வள்ளுவன் காட்டிய வழியல்லவா

பெண் : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்
நல்ல மணமுண்டு என்றே சொல்லியவர்
கடமை கண்ணியம் கட்டுப்பாடுதான்
தாரக மந்திரம் ஆக்கியவர்
பெண் மற்றும் ஆண் :
நம் தாழ்வுகள் எல்லாம் போக்கியவர்…….

ஆண் : அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா…..

பெண் : மானத்தை காத்திடும் நெசவாளர்
அந்த மக்களின் கண்ணீர் தனைப் பார்த்தார்
ஆண் : நாடெங்கும் துணிகளை தோள்களில் சுமந்து
நலிந்திடும் ஏழைக்கு வாழ்வளித்தார்
பெண் மற்றும் ஆண் :
மக்கள் நலம் பெறவே ஒரு வழி வகுத்தார்…

ஆண் : அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா…..

ஆண் : ஏழைகள் சிரித்திட அரசமைத்தார்
அதில் இறைவனை காண்போம் என உரைத்தார்
எரிந்திடும் குடிசையில் வருந்திடுவோர்க்கு
ஏரியா வீடுகள் அமைத்தளித்தார்
பெண் மற்றும் ஆண் :
அங்கு எரியும் விளக்காய் அவர் இருந்தார்……

பெண் : சென்னை என்றொரு பெயர் மாற்றி
அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி
ஆண் : பாரதி பாடிய பைந்தமிழ் நாட்டை
பாரினில் மீண்டும் காட்டியவர்
நம் பழிகள் அனைத்தையும் மாற்றியவர்….

ஆண் : எல்லோர்க்கும் அண்ணனவன்
இல்லார்க்கு செல்வமவன்
பெண் : நல்லோர்கள் உள்ளமெல்லாம்
நாள்தோறும் ஆளுபவன்

ஆண் : சொன்னால் மனம் பதைக்கும்
சொல்லவோ வாய் பதைக்கும்
தன்னந் தனிமையிலே
தானுறங்க போனானோ

பெண் : வங்கக் கடல் அலையே
வாய் மூடி தூங்கும் எங்கள்
தங்கத் தமிழ் மகனை
தாலாட்டு பாடினையோ
ஆண் : பாடு நீ பாடு பைந்தமிழர் நாடென்று
ஓடி உழைத்த மகன் உறங்கட்டும் அமைதியிலே…..
ஓடி உழைத்த மகன் உறங்கட்டும் அமைதியிலே…..
அமைதியிலே…..

ஆண் : அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here