Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Male : Kangal irandum vidi vilakkaaga
Female : Appuram
Male : Kattazhagu mattum vetta veliyaaga
Female : Appuram
Male : Kaigal irandum thotta sugamaaga
Female : Ss… haa…
Male : Kalandhiruppomae yugam yugamaaga
Male : Kangal irandum
Female : Vidi vilakkaaga
Male : Kattazhagu mattum
Female : Vetta veliyaaga
Kattazhagu mattum
Male : Vetta veliyaaga
Male : Kaigal irandum
Female : Thotta sugamaaga
Both : Kalandhiruppomae yugam yugamaaga
Male : Mazhai thuli vizha vizha muthu vilaiyum
Female : Aahaa…
Male : Panit thuli vizha vizha mottu malarum
Female : Oho…
Male : Thaen thuli vizha vizha idhazh thirakkum
Unna unna ennennavo inbam pirakkum
Female : Kani chumai kondu vandha kodi valaiyum
Male : Aahaa…
Female : Kanni idai alli thandu mella neliyum
Male : Oho…
Female : Madhu kinnam thadhumbida malar sirikkum
Pudhu pudhu kadhaigalil thuyil marakkum
Male : Mutham endra puthagathil ethanai pakkam
Female : Mm… mm… enni enni paarthaal
Ethanai vetkkam…
Male : Iruttilum padikkindra ezhuthallavo
Female : Sollaamal purigindra porul allavo
Both : Kangal irandum vidi vilakkaaga
Kattazhagu mattum
Male : Vetta veliyaaga
Male : Chinnam konda kannangalil kaayamirukkum
Female : Mm… mm… mannan sonna theerppinil
Nyaayamirukkum…
Male : Ilakkanam vaguthadhum iravallavo
Female : Pinnodu varugindra uravallavo
Both : Kangal irandum vidi vilakkaaga
Kattazhagu mattum
Male : Vetta veliyaaga
Both : Kaigal irandum thotta sugamaaga
Kalandhiruppomae yugam yugamaaga
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : கண்கள் இரண்டும் விடி விளக்காக
பெண் : அப்புறம்
ஆண் : கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக
பெண் : அப்புறம்
ஆண் : கைகள் இரண்டும் தொட்ட சுகமாக
பெண் : ஸ்… ஹா…
ஆண் : கலந்திருப்போமே யுகம் யுகமாக
ஆண் : கண்கள் இரண்டும்
பெண் : விடி விளக்காக
ஆண் : கட்டழகு மட்டும்
பெண் : வெட்ட வெளியாக
கட்டழகு மட்டும்
ஆண் : வெட்ட வெளியாக
ஆண் : கைகள் இரண்டும்
பெண் : தொட்ட சுகமாக
இருவர் : கலந்திருப்போமே யுகம் யுகமாக
ஆண் : மழைத் துளி விழ விழ முத்து விளையும்
பெண் : ஆஹா…
ஆண் : பனித் துளி விழ விழ மொட்டு மலரும்
பெண் : ஓஹோ…
ஆண் : தேன் துளி விழ விழ இதழ் திறக்கும்
உண்ண உண்ண என்னென்னவோ இன்பம் பிறக்கும்
பெண் : கனிச் சுமை கொண்டு வந்த கொடி வளையும்
ஆண் : ஆஹா…
பெண் : கன்னி இடை அல்லித் தண்டு
மெல்ல நெளியும்
ஆண் : ஓஹோ…
பெண் : மதுக் கிண்ணம் ததும்பிட மலர் சிரிக்கும்
புதுப் புது கதைகளில் துயில் மறக்கும்
இருவர் : கண்கள் இரண்டும் விடி விளக்காக
கட்டழகு மட்டும்
ஆண் : வெட்ட வெளியாக
ஆண் : முத்தம் என்ற புத்தகத்தில் எத்தனைப் பக்கம்
பெண் : ம்… ம்… எண்ணி எண்ணிப் பார்த்தால்
எத்தனை வெட்கம்…
ஆண் : இருட்டிலும் படிக்கின்ற எழுத்தல்லவோ
பெண் : சொல்லாமல் புரிகின்ற பொருள் அல்லவோ
இருவர் : கண்கள் இரண்டும் விடி விளக்காக
கட்டழகு மட்டும்
ஆண் : வெட்ட வெளியாக
ஆண் : சின்னம் கொண்ட கன்னங்களில் காயமிருக்கும்……
பெண் : ம்ம்… ம்… மன்னன் சொன்ன தீர்ப்பினில்
நியாயமிருக்கும்…
ஆண் : இலக்கணம் வகுத்ததும் இரவல்லவோ
பெண் : பின்னோடு வருகின்ற உறவல்லவோ
இருவர் : கண்கள் இரண்டும் விடி விளக்காக
கட்டழகு மட்டும்
ஆண் : வெட்ட வெளியாக
இருவர் : கைகள் இரண்டும் தொட்ட சுகமாக
கலந்திருப்போமே யுகம் யுகமாக