Singers : P. Susheela and T. M. Soundararajan
Music by : P. Srinivasan
Lyrics by : Pulamaipithan
Male : Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum
Female : Ilamai irandum searnthaal idhayam malaraagum
Male : Un nizhal kooda nilvaagum neeyae ulagam anbae
Female : Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum
Male : Semmaantha maarbagam kandu
Nalla themmaangu paaduthadi vandu
Manam thaenaattril aaduthadi indru
Female : Sulathan-in thottaththu kaattru
Un sonthaththai kooriyathu nettru
Inba sorkkaththai nee enakku kaattu
Male : Mangi ilam muththeduththu
Vannamalar koththeduththu
Sangamaththil koodivida ninaithaen
Female : Antha chandhiranilae azhagu
Panjanaiyai pottu vaiththu
Santhanaththai poosi vida ninaithaen
Nee nadamaadum kalaikoodam
Naan un rasigai anbae
Male : Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum
Female : Ilamai irandum searnthaal idhayam malaraagum
Female : Kannaana kannanathu azhagu
Nalla panneeril oorivarum nilavu
En kannaadi maaligaiyin kadhavu
Male : Moodaamal moodi vaiththa maeni
Angu paadaamal paadivarum thaenee
Naan unnaalae indru oru nyaani
Female : Paal vadiyum pachai mugam
Melirandu sevvidhazhil
Neeyarunthum vannam indru koduppaen
Male : Noolidaiyai paarththirukkum
Aalilaiyin raajiyaththil
Naanum oru raajangam amaippaen
En maharani yuvarani
Maragatha silaiyae anbae….
Male : Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum
Female : Ilamai irandum searnthaal idhayam malaraagum
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : பி. ஸ்ரீனிவாசன்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆண் : கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்
பெண் : இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்
ஆண் : உன் நிழல் கூட நிலவாகும் நீயே உலகம் அன்பே
பெண் : கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்…..
ஆண் : செம்மாந்த மார்பகம் கண்டு
நல்ல தெம்மாங்கு பாடுதடி வண்டு
மனம் தேனாற்றில் ஆடுதடி இன்று
பெண் : சுல்தானின் தோட்டத்துக் காற்று
உன் சொந்தத்தைக் கூறியது நேற்று
இன்ப சொர்க்கத்தை நீ எனக்குக் காட்டு
ஆண் : மங்கை இளம் முத்தெடுத்து
வண்ணமலர் கொத்தெடுத்து
சங்கமத்தில் கூடிவிட நினைத்தேன்
பெண் : அந்த சந்திரனிலே அழகு
பஞ்சணையை போட்டு வைத்து
சந்தனத்தை பூசி விட நினைத்தேன்
நீ நடமாடும் கலைக்கூடம்
நான் உன் ரசிகை அன்பே….
ஆண் : கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்
பெண் : இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்
பெண் : கண்ணான கண்ணனது அழகு
நல்ல பன்னீரில் ஊறிவரும் நிலவு
என் கண்ணாடி மாளிகையின் கதவு
ஆண் : மூடாமல் மூடி வைத்த மேனி
அங்கு பாடாமல் பாடிவரும் தேனீ
நான் உன்னாலே இன்று ஒரு ஞானி
பெண் : பால் வடியும் பச்சை முகம்
மேலிரண்டு செவ்விதழில்
நீயருந்தும் வண்ணம் இன்று கொடுப்பேன்
ஆண் : நூலிடையைப் பார்த்திருக்கும்
ஆலிலையின் ராஜ்ஜியத்தில்
நானும் ஒரு ராஜாங்கம் அமைப்பேன்
என் மகராணி யுவராணி
மரகதச் சிலையே அன்பே……..
ஆண் : கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்
பெண் : இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்