Singer : Latha

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : …………….

Female : Kannaa nee vaazhga
Neenda kaalangal nee vaazhga
Naan unnai vaazhththinaen
Nalla amma nee vaazhga
Innum aayiram naal vaazhga
Anbilae deivam nee

Female : Kannaa nee vaazhga
Neenda kaalangal nee vaazhga
Naan unnai vaazhththinaen
Nalla amma nee vaazhga
Innum aayiram naal vaazhga
Anbilae deivam nee

Female : Raja unthan thaayai polingu
Yaarukkum kidaikkaathu
Raja unthan thaayai polingu
Yaarukkum kidaikkaathu
Naalai neeyum nallavanaaga
Varuvathil thadaiyaedhu

Female : Kovil katti vanangum munnam
Kondaval un annai
Kodiyil oruvan aavaan endru
Valarkkindraal unnai
Valarkkindraal unnai

Female : Kannaa nee vaazhga
Neenda kaalangal nee vaazhga
Naan unnai vaazhththinaen
Nalla amma nee vaazhga
Innum aayiram naal vaazhga
Anbilae deivam nee

Female : Thaayaarillai thaalaatta
Naan thaniyae vaazhgindraen
Thaayaarillai thaalaatta
Naan thaniyae vaazhgindraen
Thaaimai endraal ennavendru
Adhanaal arigindraen

Female : Nizhalin arumai veyyililthaanae
Theriyum eppothum
Ninaithae paarththu paarthaen annai
Mugaththai ippothu
Ninaithae paarththu paarthaen annai
Mugaththai ippothu

Female : Amma unthan maganaaga
Naan oru murai pirappaenaa
Aadum thottil aadida neeyum
Paadida ketpenaa

Male : Unnum amuthai alli eduththu
Unakkum tharuvenaa
Innaar pillai ivarthaan endru
Sollida valarvenaa
Sollida valarvenaa

Female : Kannaa nee vaazhga
Neenda kaalangal nee vaazhga
Naan unnai vaazhththinaen
Nalla amma nee vaazhga
Innum aayiram naal vaazhga
Anbilae deivam nee

பாடகி : லதா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ……………..

பெண் : கண்ணா நீ வாழ்க
நீண்ட காலங்கள் நீ வாழ்க
நான் உன்னை வாழ்த்தினேன்….
நல்ல அம்மா நீ வாழ்க
இன்னும் ஆயிரம் நாள் வாழ்க
அன்பிலே தெய்வம் நீ……

பெண் : கண்ணா நீ வாழ்க
நீண்ட காலங்கள் நீ வாழ்க
நான் உன்னை வாழ்த்தினேன்….
நல்ல அம்மா நீ வாழ்க
இன்னும் ஆயிரம் நாள் வாழ்க
அன்பிலே தெய்வம் நீ……

பெண் : ராஜா உந்தன் தாயைப் போலிங்கு
யாருக்கும் கிடைக்காது
ராஜா உந்தன் தாயைப் போலிங்கு
யாருக்கும் கிடைக்காது
நாளை நீயும் நல்லவனாக
வருவதில் தடையேது

பெண் : கோவில் கட்டி வணங்கும் முன்னம்
கொண்டவள் உன் அன்னை
கோடியில் ஒருவன் ஆவான் என்று
வளர்க்கின்றாள் உன்னை…
வளர்க்கின்றாள் உன்னை…

பெண் : கண்ணா நீ வாழ்க
நீண்ட காலங்கள் நீ வாழ்க
நான் உன்னை வாழ்த்தினேன்….
நல்ல அம்மா நீ வாழ்க
இன்னும் ஆயிரம் நாள் வாழ்க
அன்பிலே தெய்வம் நீ……

பெண் : தாயாரில்லை தாலாட்ட
நான் தனியே வாழ்கின்றேன்
தாயாரில்லை தாலாட்ட
நான் தனியே வாழ்கின்றேன்
தாய்மை என்றால் என்னவென்று
அதனால் அறிகின்றேன்

பெண் : நிழலின் அருமை வெய்யிலில்தானே
தெரியும் எப்போதும்
நினைத்தே பார்த்து பார்த்தேன் அன்னை
முகத்தை இப்போது……
நினைத்தே பார்த்து பார்த்தேன் அன்னை
முகத்தை இப்போது……

பெண் : அம்மா உந்தன் மகனாக
நான் ஒரு முறை பிறப்பேனா
ஆடும் தொட்டில் ஆடிட நீயும்
பாடிட கேட்பேனா

ஆண் : உண்ணும் அமுதை அள்ளி எடுத்து
உனக்கும் தருவேனா
இன்னார் பிள்ளை இவன்தான் என்று
சொல்லிட வளர்வேனா….
சொல்லிட வளர்வேனா….

பெண் : கண்ணா நீ வாழ்க
நீண்ட காலங்கள் நீ வாழ்க
நான் உன்னை வாழ்த்தினேன்….
நல்ல அம்மா நீ வாழ்க
இன்னும் ஆயிரம் நாள் வாழ்க
அன்பிலே தெய்வம் நீ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here