Singer : S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Vairamuthu

Female : Kannaa vaa kavithai solven vaa thalaivaa
Anbe vaa azhuthu nindren vaa thunai vaa
Enna sodhanai dheiva vedhanai
Kaana velai kaanavillai naadhanai

Female : Kannaa vaa kavithai solven vaa thalaivaa

Female : Shruthi serum munbe isai paada vanthaen
Vidhi serum munbe vilaiyaada vanthaen
Puraavai pola vaazhnthaval
Nilaavai pola thaeigiraen
Varaatha medai vanthaval
Anaathai pola paadinaen

Female : Ilaiya megam thirumpumaa
Enathu mannil pozhuyumaa
Viraga pookkal arumbumaa

Female : Kannaa vaa kavithai solven vaa thalaivaa
Anbe vaa azhuthu nindren vaa thunai vaa

Female : Kural thanthavanai ival paadugindraal
Varam thanthavanai ival thedugindraal
Vaaraatha koottam vanthathu
Sangeetham seitha velaiyo
Inneram unnai thedinaen
Ennodu enna leelaiyo

Female : Enthan kanneeril neer varum
Endru unthan thaer varum
Inaiya vendum iruvarum

Female : Kannaa vaa kavithai solven vaa thalaivaa
Anbe vaa azhuthu nindren vaa thunai vaa
Enna sodhanai dheiva vedhanai
Kaana velai kaanavillai naadhanai

Female : Kannaa vaa kavithai solven vaa thalaivaa

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வைரமுத்து

பெண் : கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா
அன்பே வா அழுது நின்றேன் வா துணை வா
என்ன சோதனை தெய்வ வேதனை
கான வேளை காணவில்லை நாதனை

பெண் : கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா..

பெண் : ஸ்ருதி சேரும் முன்பே இசை பாட வந்தேன்
விதி சேரும் முன்பே விளையாட வந்தேன்
புறாவை போல வாழ்ந்தவள்
நிலாவை போல தேய்கிறேன்
வராத மேடை வந்தவள்
அனாதை போல பாடினேன்

பெண் : இளைய மேகம் திரும்புமா
எனது மண்ணில் பொழியுமா
விரக பூக்கள் அரும்புமா

பெண் : கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா
அன்பே வா அழுது நின்றேன் வா துணை வா

பெண் : குரல் தந்தவனை இவள் பாடுகின்றாள்
வரம் தந்தவனை இவள் தேடுகின்றாள்
வாராத கூட்டம் வந்தது
சங்கீதம் செய்த வேலையோ
இந்நேரம் உன்னை தேடினேன்
என்னோடு என்ன லீலையோ

பெண் : எந்தன் கண்ணில் நீர் வரும்
என்று உந்தன் தேர் வரும்
இணைய வேண்டும் இருவரும்

பெண் : கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா
அன்பே வா அழுது நின்றேன் வா துணை வா
என்ன சோதனை தெய்வ வேதனை
கான வேளை காணவில்லை நாதனை

பெண் : கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here