Singer : T.M. Soundararajan

             Music by : M.S. Viswanathan

Male : Kannai nambaadhae
{ Unnai yemaatrum } (2)
Nee kaanum thotram
Unmai illaadhadhu

Male : Arivai nee nambu
Ullam thelivaagum
Adaiyaalam kaatum
Poiyae sollaadhadhu

Male : Kannai nambaadhae
Unnai yemaatrum
Nee kaanum thotram
Unmai illaadhadhu

Male : Arivai nee nambu
Ullam thelivaagum
Adaiyaalam kaatum
Poiyae sollaadhadhu

Male : { Kavalarae vesamitaal
Kalvargalum vettruruvil
Kanmunnae thonuvadhu
Saathiyamae } (2)

Male : Kaathirundhu kalvaruku
Kai vilangu pootividum
Kannuku thonaadha
Sathiyamae

Male : { Podum poi thirayai
Kilithuvidum kaalam
Puriyum appodhu
Meiyaana kolam } (2)

Male : Kannai nambaadhae
Unnai yemaatrum
Nee kaanum thotram
{ Unmai illaadhadhu } (2)

Male : Om muruga endru solli
Ucharikum saamigalae
Rudhraacha poonaigalaai
Vaazhurenga

Male : Seemaangal porvaiyilae
Saamanya makkalaiyae
Yemaatri kondaatam
Podureenga

Male : Poimai eppodhum
Onguvadhum illai
Unmai eppodhum
Thoonkuvadhum illai

Male : Kannai nambaadhae

Male : { Pon porulai kandavudan
Vandhavali marandhuvitu
Kanmoodi pogiravar
Pogatumae } (2)

Male : En manathai naan ariven
En uravai naan maraven
Edhuvana podhilum
Aagatumae

Male : Nandri maravaadha
Nalla manam podhum
Endrum adhuvae en
Moolathanam aagum

Male : Kannai nambaadhae
{ Unnai yemaatrum } (2)
Nee kaanum thotram
Unmai illaadhadhu

Male : Arivai nee nambu
Ullam thelivaagum
Adaiyaalam kaatum
Poiyae sollaadhadhu

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : கண்ணை நம்பாதே
{ உன்னை ஏமாற்றும் } (2)
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது

ஆண் : அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது

ஆண் : கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது

ஆண் : அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது

ஆண் : { காவலரே
வேஷமிட்டால் கள்வர்களும்
வேற்றுருவில் கண்முன்னே
தோணுவது சாத்தியமே } (2)

ஆண் : காத்திருந்து
கள்வர்க்கு கை விலங்கு
பூட்டி விடும் கண்ணுக்கு
தோணாத சத்தியமே

ஆண் : { போடும் பொய்
திரையை கிழித்து விடும்
காலம் புரியும் அப்போது
மெய்யான கோலம் } (2)

ஆண் : கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
உண்மை இல்லாதது

ஆண் : ஓம் முருகா
என்று சொல்லி
உச்சரிக்கும் சாமிகளே
ருத்ராச்ச பூனைகளாய்
வாழுறீங்க

ஆண் : சீமான்கள்
போர்வையிலே
சாமான்ய மக்களையே
ஏமாற்றி கொண்டாட்டம்
போடுறீங்க

ஆண் : பொய்மை
எப்போதும் ஓங்குவதும்
இல்லை உண்மை
எப்போதும் தூங்குவதும்
இல்லை

ஆண் : கண்ணை நம்பாதே

ஆண் : { பொன்
பொருளை கண்டவுடன்
வந்த வழி மறந்து விட்டு
கண்மூடி போகிறவர்
போகட்டுமே } (2)

ஆண் : என் மனதை
நான் அறிவேன் என்
உறவை நான் மறவேன்
எதுவான போதிலும்
ஆகட்டுமே

ஆண் : நன்றி மறவாத
நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என்
மூலதனம் ஆகும்

ஆண் : கண்ணை நம்பாதே
{ உன்னை ஏமாற்றும் } (2)
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது

ஆண் : அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here