Singers : Praveen, Rohan Prakash,

Khadhijah Shareef,

Nishitha Menon and Arya Prakash

Music by : Achu

Male : Oh kannamma…
Oh oh oh oh h ho ho ho
Kannamma…aaa…
Kannamma…

Male : Anbae…anbae….
Aaruyirae…aaruyirae
Un vaasam modhiyadhum
Ulagam maranthu poguthae

Female : Munbae…nee irundhaal
En saalai mull marangal
Muzhudhum pookal aagudhae

Male : Kadaisi perundhu pogum varai
Kan moodi kathai ketkindra nizhai
Vendam irukkum naalai
Izhakkamal vaazhalaam

Female : Maarathi pol oru thozhan illai
Sarugana elai
Thulirgindra nizhai tharum
Kalangidathae
Male : Kaalam kaiyil serumae…yeiheyy

Male : Kannamma…
En jeevanae…

Chorus : Hey hey give me now
Give me now give me now
I am major give me now
En anbae en anbae

Chorus : Hey hey give me now
Give me now give me now
Listen to me give me now
Endhan orruyirae

Female : Nila…theigiradhae
Sila naatkal ponadhumae
Meendum muzhumai aagudhae

Female : Poiyaai…poividumae
Intha boomi meedhinilae
Adaintha thuyaram yaavumae

Male : Ulagai mattridum maaya kalai
Nam kaiyil illai
Katrodu kilai pola siridhu kaalam
Naam konjam saaiyalaam
Migavum siridhor vazhkai ithu
Poosalgal vidu poongodhai yedu
Anbae paravai polae
Thisaigal yaavum pogalaam….

Male : Kannamma…
Kannae kanmaniyae
Entha thadai vanthaal enna
Unadhu vizhiyin kaadhal podhumae

Female : Mannil pudhaivadhalae
Makki povathillai thangam
Veliyil eduthaal velicham koodumae

Male : Kadalgal thaandiyum
Ponaal enna
Unnodu naanum nammodu vaanam

Female : Irundhalum yedhuvumae
Thooram illai
Nesam ondrae pothumae

Chorus : Hey hey give me now
Give me now give me now
I am major give me now
En anbae en anbae

Chorus : Hey hey give me now
Give me now give me now
Listen to me give me now
Endhan orruyirae

Male : Enathu tholvigal pagirinthavalae
Enthan vetrigal muzhudhum unathae
Ethaiyum koduppen anbae anbae
Nee thantha vaanamadi

பாடகி : நிஷிதா மேனன்

பாடகர்கள் : பிரவீன், ரோகன் பிரகாஷ், கஹதிஜா ஷரீப், ஆர்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : அச்சு

ஆண் : ஓ கண்ணம்மா
ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ
ஹோ ஹோ கண்ணம்மா
ஆஆ கண்ணம்மா

ஆண் : அன்பே அன்பே
ஆருயிரே ஆருயிரே
உன் வாசம் மோதியதும்
உலகம் மறந்து போகுதே

பெண் : முன்பே நீ
இருந்தால் என் சாலை
முள் மரங்கள் முழுதும்
பூக்கள் ஆகுதே

ஆண் : கடைசி பேருந்து
போகும் வரை கண் மூடி
கதை கேட்கின்ற நிலை
வேண்டாம் இருக்கும்
நாளை இழக்காமல்
வாழலாம்

பெண் : மறதி போல் ஒரு
தோழன் இல்லை சருகான
இலை துளிர்கின்ற நிலை
தரும் கலங்கிடாதே
ஆண் : காலம் கையில்
சேருமே ஏய்ஹே

ஆண் : கண்ணம்மா
என் ஜீவனே

குழு : ஹே ஹே கிவ்
மீ நவ் கிவ் மீ நவ் கிவ்
மீ நவ் ஐ எம் மேஜர் கிவ்
மீ நவ் என் அன்பே என்
அன்பே

குழு : ஹே ஹே கிவ்
மீ நவ் கிவ் மீ நவ் கிவ்
மீ நவ் லிசன் டு மீ கிவ்
மீ நவ் எந்தன் ஓருயிரே

பெண் : நிலா தேய்கிறதே
சில நாட்கள் போனதுமே
மீண்டும் முழுமை ஆகுதே

பெண் : பொய்யாய்
போய்விடுமே இந்த
பூமி மீதினிலே
அடைந்த துயரம்
யாவுமே

ஆண் : உலகை மாற்றிடும்
மாய கலை நம் கையில்
இல்லை காற்றோடு கிளை
போல சிறிது காலம் நாம்
கொஞ்சம் சாயலாம் மிகவும்
சிறிதோர் வாழ்க்கை இது
பூசல்கள் விடு பூங்கோதை
எடு அன்பே பறவை போலே
திசைகள் யாவும் போகலாம்

ஆண் : கண்ணம்மா
கண்ணே கண்மணியே
எந்த தடை வந்தால்
என்ன உனது விழியின்
காதல் போதுமே

பெண் : மண்ணில்
புதைவதாலே மக்கி
போவதில்லை தங்கம்
வெளியில் எடுத்தால்
வெளிச்சம் கூடுமே

ஆண் : கடல்கள் தாண்டியும்
போனால் என்ன உன்னோடு
நானும் நம்மோடு வானம்

பெண் : இருந்தாலும்
எதுவுமே தூரம்
இல்லை நேசம்
ஒன்றே போதுமே

குழு : ஹே ஹே கிவ்
மீ நவ் கிவ் மீ நவ் கிவ்
மீ நவ் ஐ எம் மேஜர் கிவ்
மீ நவ் என் அன்பே என்
அன்பே

குழு : ஹே ஹே கிவ்
மீ நவ் கிவ் மீ நவ் கிவ்
மீ நவ் லிசன் டு மீ கிவ்
மீ நவ் எந்தன் ஓருயிரே

ஆண் : எனது தோல்விகள்
பகிர்ந்தவளே எந்தன்
வெற்றிகள் முழுதும் உனதே
எதையும் கொடுப்பேன் அன்பே
அன்பே நீ தந்த வானமடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here