Singer : M. S. Subbulakshmi

Music by : S. V. Venkatraman

Female : Kannan leelaigal seivaanae
Kannan maayaigal purivaanae
Leelaigal seivaan baalagopaalan
Neela mugil manivannan kannan
Leelaigal seivaanae

Female : Kaanaga maduvil kaaliyan thalaiyil
Kali nadam puriyum paadhan aa…aa
Kaanaga maduvil kaaliyan thalaiyil
Kali nadam puriyum paadhan
Vaanavar vaazha maanila meedhu
Aanirai maeitha en naadhan
Kannan leelaigal seivaanae

Chorus : Aayar manaiyil
Vennai thiruduvaan
Agamum kavarndhiduvaanae
Maaya punnagai seidhu mayakkum
Meeraavin prabu thaanae
Kannan leelaigal seivaanae

Female : Praema nadhiyin theera madhanil
Meeraa prabuvum varuvaan aaa…aa
Praema nadhiyin theera madhanil
Meeraa prabuvum varuvaan
Thiru mugamadhanil kurunagai malara
Agamum puramum niraivaan
Kannan leelaigal seivaanae

Male : Vaanam alandhaan
Kaalai ninaindhaal
Maayavinai agalaadho

Chorus : Kani idhazh oodhum
Kuzhalisai kettaal
Kal manamum karaiyaadho
Kannan leelaigal seivaanae

Male : Maalinai kaana maamunivorgal
Paarkadal thaediyae vandhaar
Aalilai melae thuyilkollum amudhai
Kaangilam endru viyandhaar
Amudhai kaangilam endru viyandhaar

Male & Chorus :
Sangaran vandhaan indhiran vandhaan
Chandhira sooriyar vandhaar
Angu mingumaai aiyanai thaedi
Aayar manaithanil kandaar thaedi
Aayar manaithanil kandaar

Female : Meeraa hrudhayam kovil kondaan
Meelaa adimai kondaan paedhai
Meeraa hrudhayam thannil
Adiyaal meeraa…aaa….aaa….aaa…aaa…aaa…aa…

All : Meeraa hrudhayam kovil kondaan
Meelaa adimai kondaan…aaa…
Meeraa hrudhayam kovil kondaan
Meelaa adimai kondaan
Maari maari varum piravigal thanilum
Maaraa praemai thandhaan

All : Kannan leelaigal seivaanae
Kannan maayaigal purivaanae
Leelaigal seivaan baalagopaalan
Neela mugil manivannan
Kannan leelaigal seivaanae
Kannan maayaigal purivaanae

பாடகி : எம். எஸ். சுப்புலட்சுமி

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பெண் : கண்ணன் லீலைகள் செய்வானே
கண்ணன் லீலைகள் செய்வானே
லீலைகள் செய்வான் பாலகோபாலன்
நீல முகில் மணிவண்ணன் கண்ணன்
லீலைகள் செய்வானே

பெண் : கானக மடுவில் காளியன் தலையில்
களி நடம் புரியும் பாதன் ஆ…ஆ
கானக மடுவில் காளியன் தலையில்
களி நடம் புரியும் பாதன்
வானவர் வாழ மாநில மீது
ஆநிரை மேய்த்த என் நாதன்
கண்ணன் லீலைகள் செய்வானே

குழு : ஆயர் மனையில்
வெண்ணெய் திருடுவான்
அகமும் கவர்ந்திடுவானே
மாயப் புன்னகை செய்து மயக்கும்
மீராவின் பிரபு தானே
கண்ணன் லீலைகள் செய்வானே

பெண் : பிரேம நதியின் தீர மதனில்
மீராப் பிரபுவும் வருவான் ஆ…
பிரேம நதியின் தீர மதனில்
மீராப் பிரபுவும் வருவான்
திரு முக மதனில் குருநகை மலர
அகமும் புறமும் நிறைவான்
கண்ணன் லீலைகள் செய்வானே

ஆண் : வானம் அளந்தான்
காளை நினைந்தால்
மாயவினை அகலாதோ

குழு : கனி இதழ் ஊதும்
குழலிசை கேட்டால்
கல் மனமும் கரையாதோ
கண்ணன் லீலைகள் செய்வானே

ஆண் : மாலினைக் காண மாமுனி வோர்கள்
பாற்கடல் தேடியே வந்தார்
ஆலிலை மேலே துயில்கொள்ளும் அமுதைக்
காண்கிலம் என்று வியந்தார்
அமுதைக் காண்கிலம் என்று வியந்தார்

ஆண் மற்றும் குழு :
சங்கரன் வந்தான் இந்திரன் வந்தான்
சந்திர சூரியர் வந்தார்
அங்கு மிங்குமாய் ஐயனைத்தேடி
ஆயர் மனைதனில் கண்டார் தேடி
ஆயர் மனைதனில் கண்டார்

பெண் : மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்
மீளா அடிமை கொண்டான் பேதை
மீரா ஹ்ருதயம் தன்னில்
அடியாள் மீரா…ஆஆ… ஆ…ஆ…ஆ…ஆ…

அனைவரும் : மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்
மீளா அடிமை கொண்டான்…ஆ…
மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்
மீளா அடிமை கொண்டான்
மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும்
மாறாப் பிரேமை தந்தான்

அனைவரும் : கண்ணன் லீலைகள் செய்வானே
கண்ணன் மாயைகள் புரிவானே
லீலைகள் செய்வான் பாலகோபாலன்
நீல முகில் மணிவண்ணன்
கண்ணன் லீலைகள் செய்வானே
கண்ணன் மாயைகள் புரிவானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here