Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Kannan pirantha velaiyilae
Antha devagi irunthaal kaavalilae
Aval annan polae unnaamal
Annan polae unnaamal
Kaaval nindraan vaasalilae
Thaayo siraiyinilae….yae….
Thanthaiyo veliyinilae….yae

Female : Kannan pirantha velaiyilae
Antha devagi irunthaal kaavalilae

Female : Neeyum antha kannanai pola
Geedhai solvaayo
Neeyum antha kannanai pola
Geedhai solvaayo
Un thaayum thanathu thunaiyai
Serum paathai solvaayaa

Female : Aandavan illaa aalayaththil
Naan aadidum vanna deepamadaa
Aandavan illaa aalayaththil
Naan aadidum vanna deepamadaa
Yaarai sollo aavathenna
Un annai seitha paavamadaa
Annai seitha paavamadaa

Female : Kannan pirantha velaiyilae
Antha devagi irunthaal kaavalilae

Female : Ooraar ketka vidukathai pottaal
Unthan annaiyadaa….aa…
Ooraar ketka vidukathai pottaal
Unthan annaiyadaa….
Aval vazhve indru vidukadhaiyaanaal
Vidaiyenna solvathadaa
Vidaiyenna solvathadaa

Female : Irukarai inaippathu nadhiyaagum
Engal iruvarai piriththathu vithiyaagum
Nadhi vazhiponaal karaiyundu
Naam vithi vazhi ponaal yaarundu
Vithi vazhi ponaal yaarundu

Female : Kannan pirantha velaiyilae
Antha devagi irunthaal kaavalilae
Aval annan polae unnaamal
Kaaval nindraan vaasalilae
Thaayo siraiyinilae….yae….
Thanthaiyo veliyinilae….yae

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : கண்ணன் பிறந்த வேளையிலே
அந்த தேவகி இருந்தாள் காவலிலே
அவள் அண்ணன் போலே உண்ணாமல்
அண்ணன் போலே உண்ணாமல்
காவல் நின்றான் வாசலிலே
தாயோ சிறையினிலே….ஏ……
தந்தையோ வெளியினிலே….ஏ…..

பெண் : கண்ணன் பிறந்த வேளையிலே
அந்த தேவகி இருந்தாள் காவலிலே

பெண் : நீயும் அந்த கண்ணனைப்போல
கீதை சொல்வாயோ
நீயும் அந்த கண்ணனைப்போல
கீதை சொல்வாயோ
உன் தாயும் தனது துணையை
சேரும் பாதை சொல்வாயோ

பெண் : ஆண்டவன் இல்லா ஆலயத்தில்
நான் ஆடிடும் வண்ண தீபமடா
ஆண்டவன் இல்லா ஆலயத்தில்
நான் ஆடிடும் வண்ண தீபமடா
யாரை சொல்லி ஆவதென்ன
உன் அன்னை செய்த பாவமடா
அன்னை செய்த பாவமடா……..

பெண் : கண்ணன் பிறந்த வேளையிலே
அந்த தேவகி இருந்தாள் காவலிலே

பெண் : ஊரார் கேட்க விடுகதை போட்டாள்
உந்தன் அன்னையடா…ஆ…..
ஊரார் கேட்க விடுகதை போட்டாள்
உந்தன் அன்னையடா
அவள் வாழ்வே இன்று விடுகதையானால்
விடையென்ன சொல்வதடா
விடையென்ன சொல்வதடா

பெண் : இருகரை இணைப்பது நதியாகும்
எங்கள் இருவரை பிரித்தது விதியாகும்
நதி வழிப்போனால் கரையுண்டு
நாம் விதி வழிப்போனால் யாருண்டு
விதி வழிப்போனால் யாருண்டு……

பெண் : கண்ணன் பிறந்த வேளையிலே
அந்த தேவகி இருந்தாள் காவலிலே
அவள் அண்ணன் போலே உண்ணாமல்
காவல் நின்றான் வாசலிலே
தாயோ சிறையினிலே….ஏ….
தந்தையோ வெளியினிலே…..ஏ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here