Singers : Vani Jairam and K. J. Yesudas

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Kannanai ninaiththaal sonnathu palikkum
Kaalangal thorum ninaiththathu nadakkum
Kaalangal thorum ninaiththathu nadakkum

Female : Kannaa gobala
Radha krishnaa sri deva
Kannaa gobala
Radha krishnaa sri deva

Male : Ponmani vannan sonnathu geedhai
Poomagan maarbinil thavazhnthaval radhai
Poomagan maarbinil thavazhnthaval radhai

Male : Nallavar selvathu avanathu paathai
Naadiya manithan ulagaththil medhai

Both : Kannaa gobala
Radha krishnaa sri deva
Kannaa gobala
Radha krishnaa sri deva

Male : Kannanai ninaiththaal sonnathu pallikkum
Kaalangal thorum ninaiththathu nadakkum
Kaalangal thorum ninaiththathu nadakkum

Female : Aattrinil pengal selaiyai eduththaan
Adhaiyae draupathi kettathum koduththaan
Kaattrilum isaiyilum kannanin kuralae
Paattinil varuvathu pullaanguzhalae

Female : Kannaa gobala
Radha krishnaa sri deva
Male : Kannaa gobala
Radha krishnaa sri deva

Male : Gopiyar naduvae kannanin naadham
Guruvaayooril kuzhanthaiyin geedham
Guruvaayooril kuzhanthaiyin geedham

Male : Devargal sabhaiyil sri krishna vedham
Thirumalai thanilae thava subrabatham
Both : Thava subrabatham thava subrabatham

Both : Kannanai ninaiththaal sonnathu pallikkum
Kaalangal thorum ninaiththathu nadakkum
Kaalangal thorum ninaiththathu nadakkum

Both : Kannaa gobala
Radha krishnaa sri deva
Kannaa gobala
Radha krishnaa sri deva

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்

பெண் : கண்ணா கோபாலா
ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா
ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா

ஆண் : பொன்மணி வண்ணன் சொன்னது கீதை
பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை
பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை

ஆண் : நல்லவர் செல்வது அவனது பாதை
நாடிய மனிதன் உலகத்தில் மேதை

இருவர் : கண்ணா கோபாலா
ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா
ராதாகிருஷ்ணா ஸ்ரீதேவா

ஆண் : கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்

பெண் : ஆற்றினில் பெண்கள் சேலையை எடுத்தான்
அதையே திரெளபதி கேட்டதும் கொடுத்தான்
காற்றிலும் இசையிலும் கண்ணனின் குரலே
பாட்டினில் வருவது புல்லாங் குழலே

பெண் : கண்ணா கோபாலா
ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா
ஆண் : கண்ணா கோபாலா
ராதாகிருஷ்ணா ஸ்ரீதேவா

ஆண் : கோபியர் நடுவே கண்ணனின் நாதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்

ஆண் : தேவர்கள் சபையில் ஸ்ரீகிருஷ்ண வேதம்
திருமலை தனிலே தவ சுப்ரபாதம்
இருவர் : தவ சுப்ரபாதம் தவ சுப்ரபாதம்

இருவர் : கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்

இருவர் : கண்ணா கோபாலா
ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா
ராதாகிருஷ்ணா ஸ்ரீதேவா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here