Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Kannanukku poruththam
Rathai naan devi naan
Mannan unthan thevai
Enna kannaa

Female : Kanni enthan ullaththil
Karpanai thanthavan
En devan neeyallavo
En devan neeyallavo

Male : Kannan ennai rasikkum
Rathai nee devi nee
Mannan thevai unthan
Nenjam kannae

Male : Kadhal konda ullaththil
Karpanai thanthaval
En devi neeyallavo
En devi neeyallavo

Female : Mogam ennum megam vanthu
Mothum anthi neram
Male : Thegam ennum vaanam thannai
Saernthaal veppam theerum

Female : Aa….mogam ennum megam vanthu
Mothum anthi neram
Male : Thegam ennum vaanam thannai
Saernthaal veppam theerum

Female : Acham endra puththagaththil
Eththaniyo pakkam
Male : Itchai endra thaththuvaththil
Endrumillai vekkam
Female : Aanaalum pudhithallavo
Male : Idhu aaramba kadhaiyallavo….

Male : Kannan ennai rasikkum
Rathai nee devi nee
Mannan thevai unthan
Nenjam kannae

Female : Kanni enthan ullaththil
Karpanai thanthavan
En devan neeyallavo
Male : En devi neeyallavo

Female : Aadai kondu paadum penmai
Oodal kondathunmai
Male : Aasai pongum maarbil vanthu
Saainthaal ingu nanmai

Female : Alli alli unnum pothu
Innum enna micham
Male : Ellai meeri pogumpothu
Penmai vanthu mechum
Ponmaalai sugam allavo
Female : Idhu pollaatha kurumpallvo

Female : Kannanukku poruththam
Rathai naan devi naan
Mannan unthan thevai
Enna kannaa

Male : Kadhal konda ullaththil
Karpanai thanthaval
En devi neeyallavo
Female : En devan neeyallavo

Both : ……………………

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கண்ணனுக்கு பொருத்தம்
ராதை நான் தேவி நான்
மன்னன் உந்தன் தேவை
என்ன கண்ணா

பெண் : கன்னி எந்தன் உள்ளத்தில்
கற்பனை தந்தவன்
என் தேவன் நீயல்லவோ
என் தேவன் நீயல்லவோ

ஆண் : கண்ணன் என்னை ரசிக்கும்
ராதை நீ தேவி நீ
மன்னன் தேவை உந்தன்
நெஞ்சம் கண்ணே

ஆண் : காதல் கொண்ட உள்ளத்தில்
கற்பனை தந்தவள்
என் தேவி நீயல்லவோ
என் தேவி நீயல்லவோ….

பெண் : மோகம் என்னும் மேகம் வந்து
மோதும் அந்தி நேரம்
ஆண் : தேகம் என்னும் வானம் தன்னை
சேர்ந்தால் வெப்பம் தீரும்

பெண் : ஆ….மோகம் என்னும் மேகம் வந்து
மோதும் அந்தி நேரம்
ஆண் : தேகம் என்னும் வானம் தன்னை
சேர்ந்தால் வெப்பம் தீரும்

பெண் : அச்சம் என்ற புத்தகத்தில்
எத்தனையோ பக்கம்
ஆண் : இச்சை என்ற தத்துவத்தில்
என்றுமில்லை வெக்கம்
பெண் : ஆனாலும் புதிதல்லவோ
ஆண் : இது ஆரம்ப கதையல்லவோ……..

ஆண் : கண்ணன் என்னை ரசிக்கும்
ராதை நீ தேவி நீ
மன்னன் தேவை உந்தன்
நெஞ்சம் கண்ணே

பெண் : கன்னி எந்தன் உள்ளத்தில்
கற்பனை தந்தவன்
என் தேவன் நீயல்லவோ
ஆண் : என் தேவி நீயல்லவோ….

பெண் : ஆடை கொண்டு பாடும் பெண்மை
ஊடல் கொண்டதுண்மை
ஆண் : ஆசை பொங்கும் மார்பில் வந்து
சாய்ந்தால் இங்கு நன்மை

பெண் : ஆடை கொண்டு பாடும் பெண்மை
ஊடல் கொண்டதுண்மை
ஆண் : ஆசை பொங்கும் மார்பில் வந்து
சாய்ந்தால் இங்கு நன்மை

பெண் : அள்ளி அள்ளி உண்ணும் போதும்
இன்னும் என்ன மிச்சம்
ஆண் : எல்லை மீறி போகும் போது
பெண்மை வந்து மெச்சும்
பொன்மாலை சுகம் அல்லவோ
பெண் : இது பொல்லாத குறும்பல்லவோ…….

பெண் : கண்ணனுக்கு பொருத்தம்
ராதை நான் தேவி நான்
மன்னன் உந்தன் தேவை
என்ன கண்ணா

ஆண் : காதல் கொண்ட உள்ளத்தில்
கற்பனை தந்தவள்
என் தேவி நீயல்லவோ
பெண் : என் தேவன் நீயல்லவோ

இருவர் : ……………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here