Singer : S. Varalakshmi
Music by : Shankar Ganesh
Lyrics by : Poovai Sengkuttuvan
Female : Pazhuthulla vairaththai pariththavalae
Enakku vantha pazhiyai aniyaai thariththavalae
Thiruvula seettu ezhuthidum
Kol munaiyai muriththavalae
En kulam vaazh perarulai vaari iraiththavalae…yae….
Female : Kannae kanmaniyae karumaari
Kannae kanmaniyae karumaari
En kangalilae pathintha sugumaari
Kannae kanmaniyae karumaari
En kangalilae pathintha sugumaari
Female : Ponnae ponnaniyae urumaari
Malar punnagai sinthugindra en kumari
Ponnae ponnaniyae urumaari
Malar punnagai sinthugindra en kumari
Female : Thaayaai ninaippavarkku thaayammaa
Aa…aa…aa…aa….aa…aa….
Thaayaai ninaippavarkku thaayammaa
Unnai seyaai ninaippavarkku seiyammaa
Kaayaai ninaippavarkku kaayammaa
Kaayaai ninaippavarkku kaayammaa
Unnai kaniyaai ninaippavarkku kaniyammaa
Kaniyammaa kaniyammaa
Female : Ninainthu ninainthu nenjam negizhuthammaa
Nee nigazhththiya seyal kandu magizhuthammaa
Ninainthu ninainthu nenjam negizhuthammaa
Nee nigazhththiya seyal kandu magizhuthammaa
Unarnthu unarnthu ullam uruguthammaa
Unarnthu unarnthu ullam uruguthammaa
En ullaththi sugavellam peruguthammaa
Ullaththi sugavellam peruguthammaa….ammaa….
Female : Kaniyum arul pozhiyum kanniyammaa
Oru kanavan irunthum nee kanniyammaa
Kaniyum arul pozhiyum kanniyammaa
Oru kanavan irunthum nee kanniyammaa
Female : Thanigai kumaranodu aingaranai eendra
Thaayana pothum nee kumariyammaa
Arunthaayaana pothum nee kumariyammaa kumariyammaa
Female : Veppillai kaappanintha veeriyammaa
Thiruverkaattil amarntha
Mariyammaa karumaariyammaa
Veppillai kaappanintha veeriyammaa
Thiruverkaattil amarntha
Mariyammaa karumaariyammaa
Female : Nee velli malaiyaandi paariyammaa
Nee velli malaiyaandi paariyammaa
Anbar vendum varamarulvaai vaariyammaa
Anbar vendum varamarulvaai vaariyammaa
Karumaariyammaa….karumaariyammaa…..
பாடகி : எஸ். வரலட்சுமி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : எ. மருதகாசி
பெண் : பழுதுள்ள வைரத்தைப் பறித்தவளே
எனக்கு வந்த பழியை அணியாய் தரித்தவளே
திருவுளச் சீட்டு எழுதிடும்
கோல் முனையை முறித்தவளே
என் குலம் வாழ பேரருளை வாரி இறைத்தவளே….ஏ….
பெண் : கண்ணே கண்மணியே கருமாரி
கண்ணே கண்மணியே கருமாரி
என் கண்களிலே பதிந்த சுகுமாரி
கண்ணே கண்மணியே கருமாரி
என் கண்களிலே பதிந்த சுகுமாரி
பெண் : பொன்னே பொன்னணியே உருமாரி
மலர் புன்னகை சிந்துகின்ற என் குமரி….
பொன்னே பொன்னணியே உருமாரி
மலர் புன்னகை சிந்துகின்ற என் குமரி….
பெண் : தாயாய் நினைப்பவர்க்கு தாயம்மா
ஆ…ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…..
தாயாய் நினைப்பவர்க்கு தாயம்மா
உன்னை சேயாய் நினைப்பவர்க்கு சேயம்மா
காயாய் நினைப்பவர்க்கு காயம்மா
காயாய் நினைப்பவர்க்கு காயம்மா
உன்னை கனியாய் நினைப்பவர்க்கு கனியம்மா
கனியம்மா கனியம்மா
பெண் : நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழுதம்மா
நீ நிகழ்த்திய செயல் கண்டு மகிழுதம்மா
நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழுதம்மா
நீ நிகழ்த்திய செயல் கண்டு மகிழுதம்மா
உணர்ந்து உணர்ந்து உள்ளம் உருகுதம்மா
உணர்ந்து உணர்ந்து உள்ளம் உருகுதம்மா
என் உள்ளத்தில் சுகவெள்ளம் பெருகுதம்மா..
உள்ளத்தில் சுகவெள்ளம் பெருகுதம்மா……அம்மா….
பெண் : கனியும் அருள் பொழியும் கன்னியம்மா
ஒரு கணவன் இருந்தும் நீ கன்னியம்மா
கனியும் அருள் பொழியும் கன்னியம்மா
ஒரு கணவன் இருந்தும் நீ கன்னியம்மா
பெண் : தணிகை குமரனோடு ஐங்கரனை ஈன்ற
தாயான போதும் நீ குமரியம்மா
அருந்தாயான போதும் நீ குமரியம்மா குமரியம்மா
பெண் : வேப்பிலை காப்பணிந்த வீரியம்மா
திருவேற்காட்டில் அமர்ந்த
மாரியம்மா கருமாரியம்மா
வேப்பிலை காப்பணிந்த வீரியம்மா
திருவேற்காட்டில் அமர்ந்த
மாரியம்மா கருமாரியம்மா
பெண் : நீ வெள்ளி மலையாண்டி பாரியம்மா
நீ வெள்ளி மலையாண்டி பாரியம்மா
அன்பர் வேண்டும் வரமருள்வாய் வாரியம்மா
அன்பர் வேண்டும் வரமருள்வாய் வாரியம்மா
கருமாரியம்மா…….கருமாரியம்மா……..