Singers : T. A. Madhuram and N. S. Krishnan

Music by : G. Ramanathan

Male : Kannae kannae…
Kannae unnaal naan adaiyum
Kavalai konjamaa
En kavalai konjamaa
Adhai kandu summaa irukka
Unakku kallu nenjamaa
Kandu summaa irukka
Unakku kallu nenjamaa

Female : Yaei…

Male : Yae oo yaei
Aaha yae yaei
Aa yaei
Aa yaei yaei yaei yae O

Female : Yaenyaa ennadhu
Kannae kinnae sollureengha

Male : Ada unna illammaa
En kanna patthi paaduren
Rendu naalaa thookkamae illa
Sadhaa arikkudhu venneeraa kottudhu
Adhu thaan vera onnum illa

Female : Oho appa paadu

Male : Thangamae thangamae…
Thangamae un dhayavai naan peruveno
Endru thaan peruveno
En angam kulira vaari anaithu
Agam maghizhveno
En angham kulira vaari anaithu
Agam maghizhveno

Female : Dhaa…

Male : Thaa… nthaa…
Aiyo nthaa… ada nthaa
Aiyo inthaa inthaa tha…
Madha thaa va dhaa

Female : Indhaanghaiyaa
Ippo thangamennu
Sonnadhu enna thaanae

Male : Aiyaiyo aiyaiyo aiyaiyo
Idhu ennada idhu idha paarummaa
Idha indha paattu paadren paaru
Adhula pithala kaasu
Velli kaasu varaikkum vandhirukku
Thangam kidaikkala
Appadi thangam vandhuruchinnaa
Thangamae adhaan

Female : Mmmm…paadungha paadungha

Male : Thaenae thaenae…ae
Thaenae unnai thaedi thaedi
Naan alaindhenae
Naan alaindhenae
Nee theriyum vazhiyil
Edhiril irundhum
Thoda bayandhenae
Nee theriyum vazhiyil
Edhiril irundhum
Thoda bayandhenae

Female : Mogaraiya paaru

Male : Aiyaiyo mogaraiya paaraa
Mogaraiya paaru aahaa mogaraiya paaru
Oho mogaraiya paaru
Mogha moga mogaraiya paaru
Sari o sari

Female : Indhaanghaiyaa
Innamae onnum maatha mudiyaadhu
Sathiyamaa sollungha
Ippa thaenaennu
Enna thaanae sonneengha

Male : Adhu unnaillammaa indha
Enakku odambu sariyilla
Vaithiyaru oru basmam kuduthirukkaaru
Adha kolachi saapdaradhukku thaen vaenum

Female : Adhu sari edhiril irundhum
Thoda bayandhennu
Sonneengalae adhukku enna arthamaam

Male : Edhirla irukku thoda mudiyala adhaan

Female : Ennadhu

Male : Inga illa
Thottathula oru marathula
Ucheela irukku thaen koodu
Adhu thoda ponaa adikkumo
Illalla kothumo
Appadinnu bayamaa irukku

Female : Aahaa aahaa aahaa aahaa
Ennaa moolai

பாடகர்கள் : என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : கண்ணே கண்ணே…
கண்ணே உன்னால் நான் அடையும்
கவலை கொஞ்சமா
என் கவலை கொஞ்சமா

ஆண் : அதை கண்டு சும்மா இருக்க உனக்கு
கல்லு நெஞ்சமா
கண்டு சும்மா இருக்க உனக்கு
கல்லு நெஞ்சமா

பெண் : ஏய்…

ஆண் : ஏ உ ஏய்………ஆஹ ஏ
ஏய் ஆ ஏய் ஆ ஏய் ஏய் ஏய் ஏ ஓ

பெண் : ஏன்ய்யா என்னது கண்ணே
கிண்ணே சொல்றீங்க

ஆண் : அட உன்ன இல்லம்மா
என் கண்ண பத்தி பாடுறேன்
ரெண்டு நாளா தூக்கமே இல்ல
சதா அரிக்குது வெந்நீரா கொட்டுது
அதுதான் வேற ஒண்ணும் இல்ல

பெண் : ஓஹோ அப்ப பாடு

ஆண் : தங்கமே தங்கமே…
தங்கமே உன் தயவை
நான் பெறுவேனோ
என்று தான் பெறுவேனோ

ஆண் : என் அங்கம் குளிர
வாரி அணைத்து
அகம் மகிழ்வேனோ
என் அங்கம் குளிர
வாரி அணைத்து
அகம் மகிழ்வேனோ

பெண் : தா
ஆண் : தா… ன்தா…. ஐயோ ன்தா அட ன்தா
ஐயோ இன்தா இன்தா த… மத தா வ தா

பெண் : இந்தாங்கையா
இப்போ தங்கமேன்னு சொன்னது
என்ன தானே

ஆண் : ஐயையோ ஐயையோ ஐயையோ
இது என்னடா இது இத பாரும்மா
இத இந்த பாட்டு பாடுறேன் பாரு
அதுல பித்தள காசு
வெள்ளி காசு வரைக்கும் வந்திருக்கு
தங்கம் கிடைக்கல
அப்படி தங்கம் வந்திருச்சின்னா
தங்கமே அதான்

பெண் : ம்… ம்… ம்…
பாடுங்க பாடுங்க

ஆண் : தேனே தேனே……..
தேனே உன்னே தேடித் தேடி
நான் அலைந்தேனே
நான் அலைந்தேனே
நீ தெரியும் வழியில் எதிரில் இருந்தும்
தொடப் பயந்தேனே
நீ தெரியும் வழியில் எதிரில் இருந்தும்
தொடப் பயந்தேனே

பெண் : மொகரையப் பாரு
ஆண் : ஐயையோ மொகரையப் பாரா
மொகரையப் பாரு
ஆஹா மொகரையப் பாரு
ஓஹோ மொகரையப் பாரு
மொகம மொகம மொகரையப் பாரு
சரி ஓ சரி

பெண் : இந்தாங்கைய்யா
இன்னமே ஒண்ணும் மாத்த முடியாது
சத்தியமா சொல்லுங்க
இப்ப தேனேன்னு என்ன தானே சொன்னீங்க

ஆண் : அது உன்னையில்லமா இந்த
எனக்கு ஒடம்பு சரியில்ல
வைத்தியரு ஒரு பஸ்பம் குடுத்திருக்காரு
அத கொளச்சி சாப்படரதுக்கு
தேன் வேணும்

பெண் : அது சரி எதிரில் இருந்தும்
தொடப் பயந்தேன்னு
சொன்னீங்களே அதுக்கு என்ன அர்த்தமா

ஆண் : எதிர்ல இருக்கு தொட முடியல அதான்

பெண் : என்னது

ஆண் : இங்க இல்ல
தோட்டத்துல ஒரு மரத்துல
உச்சீல இருக்கு தேன் கூடு
அது தொட போனா அடிக்குமோ
இல்ல இல்ல கொத்துமோ
அப்படினு பயமா இருக்கு

பெண் : ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா என்னா மூளை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here