Singer : Abby V

Music by : Balasubramanian G

Lyrics by : Lokesh Kumar

Male : Kanneer kadhaigal solvadhai
Ingu ketpadhu yaaro
Valiyodu vaalum idhayam
Ingu meetpadhu yaaro

Male : Kaar irul ennai mattum
Ingu soozhndhu aalgirathae
Kanavugal kanda manadhin
Thanimai theeyai idugirathae

Male : En vaazhvilae vasantham
Adhu thirumbuma
Ye kadavulae idhai vella mudiyuma

Male : Dhisaigal ingu maarum
Nizhalum thunai thedum
Mudivindri paarvai poguma

Male : Idhu naragma
Vidiyamale iravondru soozha
Urangamlae naal ingu neela
Piriya valiye varuvaai

Male : En vaazhvilae vasantham
Adhu thirumbuma
Ye kadavulae idhai vella mudiyuma

பாடகர் : அபி வி

இசை அமைப்பாளர் : பாலசுப்ரமணியன் ஜி

பாடல் ஆசிரியர் : லோகேஷ் குமார்

ஆண் : கண்ணீரும் கதைகள் சொல்லும்
இங்கு கேட்பது யாரோ
வலியோடு வாழும் இதயம்
இங்கு மீட்பது யாரோ

ஆண் : கார் இருள் என்னை மட்டும்
இங்கு சூழ்ந்து ஆள்கிறதே
கனவுகள் கண்ட மனதின்
தனிமை தீயில் எரிகிறதே

ஆண் : என் வாழ்விலே வசந்தம்
அது திரும்புமா?
ஏ கடவுளே விதியை வெல்ல முடியுமா?

ஆண் : திசைகள் இங்கு மாறும்
நிழலும் துணை தேடும்
முடிவின்றி பாதை போகுமே

ஆண் : இது நரகமா
விடியாமல் இரவென்னை சூழ
உறங்காமல் நாள் இங்கு நீள
பிரியா வலியே வருவாய்

ஆண் : என் வாழ்விலே வசந்தம்
அது திரும்புமா?
ஏ கடவுளே விதியை வெல்ல முடியுமா?


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here