Singer : Deepan Chakravarthi

Music by : L. Vaithiya Nathan

Male : Kanneeraiyum seneeraiyum
Thanneeraip pol paachchinaenae
Venneerayaa oottrinaen
En meedhu yaenthaan kobam ammaa
Thaai pondra en bhoomiyae
Sathi seithatho saamiyae

Male : Kanneeraiyum seneeraiyum
Thanneeraip pol paachchinaenae
Venneerayaa oottrinaen

Male : Oor vazha veendithaan vaazhum jaadhi
Uyaraathathenna samuthaaya needhi
Uzhaikkindra kai ooivatho…oooo
Uzhaikkindra kai ooivatho…

Male : Aadhaaram illai aagaaram illai
Aniyaayamaai kaaivatho…ooo….
Alai mothinaal
Chinna thoni enna aagum

Male : Kanneeraiyum seneeraiyum
Thanneeraip pol paachchinaenae
Venneerayaa oottrinaen

Male : Uram vaangi pottaala tharamaaga illai
Kadan vaangi pottaala theeraatha thollai
Verum vaayaiththaan melvatho…oooo….
Verum vaayaiththaan melvatho…

Male : Vilai maaravillai nilai maaravillai
Parithaapamaai aanatho
Vervaigalae ungal thaagam endru theerum

Male : Kanneeraiyum seneeraiyum
Thanneeraip pol paachchinaenae
Venneerayaa oottrinaen
En meedhu yaenthaan kobam ammaa
Thaai pondra en bhoomiyae
Sathi seithatho saamiyae…..

பாடகர் : தீபன் சக்ரவர்த்தி

இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்

ஆண் : கண்ணீரையும் செந்நீரையும்
தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே
வெந்நீரையா ஊற்றினேன்
என் மீது ஏன்தான் கோபம் அம்மா
தாய் போன்ற என் பூமியே
சதி செய்ததோ சாமியே

ஆண் : கண்ணீரையும் செந்நீரையும்
தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே
வெந்நீரையா ஊற்றினேன்

ஆண் : ஊர் வாழ வேண்டி தான் வாழும் ஜாதி
உயராததென்ன சமுதாய நீதி
உழைக்கின்ற கை ஓய்வதோ…….ஓஓஒ…
உழைக்கின்ற கை ஓய்வதோ

ஆண் : ஆதாரம் இல்லை ஆகாரம் இல்லை
அநியாயமாய் காய்வதோ……ஓஓ…
அலை மோதினால்
சின்ன தோணி என்ன ஆகும்

ஆண் : கண்ணீரையும் செந்நீரையும்
தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே
வெந்நீரையா ஊற்றினேன்…

ஆண் : உரம் வாங்கி போட்டால் தரமாக இல்லை
கடன் வாங்கி போட்டால் தீராத தொல்லை
வெறும் வாயைத்தான் மெல்வதோ…ஓஓஒ…
வெறும் வாயைத்தான் மெல்வதோ

ஆண் : விலை மாறவில்லை நிலை மாறவில்லை
பரிதாபமாய் ஆனதோ
வேர்வைகளே உங்கள் தாகம் என்று தீரும்

ஆண் : கண்ணீரையும் செந்நீரையும்
தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே
வெந்நீரையா ஊற்றினேன்
என் மீது ஏன்தான் கோபம் அம்மா
தாய் போன்ற என் பூமியே
சதி செய்ததோ சாமியே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here