Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Female : Kanneeril moozhgum odam naanae
Karai serkka vendum endraen neeyae
Female : Kanneeril moozhgum odam naanae
Karai serkka vendum endraen neeyae
Ennai nee veruththaal ennaagum endru
Ninaiththuthaan paaru nenjaththai kelu
Mullil aadum paravai naanthaanae paravai naanae
Female : Kanneeril moozhgum odam naanae
Karai serkka vendum endraen neeyae
Male : Aaa….aaa…aa….aa….aaa…..aa….
Ammaavaasai iravinilae nilavathu udhippathillai
Azhagattra en mugaththai androruththi yaerkkavillai
Female : Azhagai vaiththu kadhalikka avalai pola palar undu
Anbai vaiththu kadhalikka ennai pola silar undu
Male : Palaivanaththil solai eddharkku
Female : Kaalai manathil sogam edharkku
Male : Thirinthitta paal kudaththil vennai athai thedaathae
Female : Oru thalai raagaththilae kaalanthannai kazhikkaathae
Male : Azhagiya mayilae ennai nerungaathae nerungaathae
Male : Udhirnthitta natchaththiram naanae
Un vaanam azhappathu veenae
Male : Kaambai vittu poo udhirnthaal
Meendum angae poopathillai
Kaadhaliththu tholviyendraal
Meendum angae kadhal illai
Female : Kaalai unnai kaambu endraal
Pen avalai poo enben
Kaambil aval pookkavillai
Kadhal aval yaerkkavillai
Male : Ninaiththathu naan ninaiththathuthaan
Female : Maranthu vittaal maattram varum
Male : Ninaiththathai marppatharkku
Female : Nenjaththukku theriyaathae
Female : Kangalai moodikkondu
Iruttendru sollaathae
Mullil aadum paravai naanthaanae paravai naanae
Male : Udhirnthitta natchaththiram naanae
Un vaanam azhappathu veenae
Tharai meedhu odam odaathu maanae
Nadhi meedhu therum pogaathu thaene
Maanae thenae ennai nerungaathae nerungaathae
Male : Udhirnthitta natchaththiram naanae
Un vaanam azhaippathu veenae
Tharai meedhu odam odaathu maanae
Nadhi meedhu therum pogaathu thaenae
Maanae thaenae ennai nerungaathae nerungaathae
Male : Udhirnthitta natchaththiram naanae
Un vaanam azhaippathu veenae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்
பெண் : கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்றேன் நீயே
பெண் : கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்றேன் நீயே
என்னை நீ வெறுத்தால் என்னாகும் என்று
நினைத்துதான் பாரு நெஞ்சத்தை கேளு
முள்ளில் ஆடும் பறவை நான்தானே பறவை நானே
பெண் : கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்றேன் நீயே
ஆண் : ஆஅ….ஆஅ….ஆ…….ஆ…..ஆஅ….ஆ…..
அம்மாவாசை இரவினிலே நிலவது உதிப்பதில்லை
அழகற்ற என் முகத்தை அன்றொருத்தி ஏற்கவில்லை
பெண் : அழகை வைத்து காதலிக்க அவளை போல பலர் உண்டு
அன்பை வைத்து காதலிக்க என்னை போல சிலர் உண்டு
ஆண் : பாலைவனத்தில் சோலை எதற்கு
பெண் : காளை மனதில் சோகம் எதற்கு
ஆண் : திரிந்திட்ட பால் குடத்தில் வெண்ணை அதை தேடாதே
பெண் : ஒரு தலை ராகத்திலே காலந்தன்னை கழிக்காதே
ஆண் : அழகிய மயிலே என்னை நெருங்காதே நெருங்காதே…
ஆண் : உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே
ஆண் : காம்பை விட்டு பூ உதிர்ந்தால்
மீண்டும் அங்கே பூப்பதில்லை
காதலித்து தோல்வியென்றால்
மீண்டும் அங்கே காதல் இல்லை
பெண் : காளை உன்னை காம்பு என்றால்
பெண் அவளை பூ என்பேன்
காம்பில் அவள் பூக்கவில்லை
காதல் அவள் ஏற்கவில்லை
ஆண் : நினைத்தது நான் நினைத்ததுதான்
பெண் : மறந்து விட்டால் மாற்றம் வரும்
ஆண் : நினைத்ததை மறப்பதற்கு
பெண் : நெஞ்சத்துக்கு தெரியாதே
பெண் : கண்களை மூடிக்கொண்டு
இருட்டென்று சொல்லாதே
முள்ளில் ஆடும் பறவை நான்தானே பறவை நானே
ஆண் : உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே
தரை மீது ஓடம் ஓடாது மானே
நதி மீது தேரும் போகாது தேனே
மானே தேனே என்னை நெருங்காதே நெருங்காதே…
ஆண் : உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே