Singer : S. P. Balasubramanyam

Music by : Deva

Lyrics by : Vairamuthu

Male : Kanni thamizho kamban kaviyo
Minnal saramo pudhu mega radhamo
Azhagae konjum menagai
Vizhigal thantha thaaragai

Male : Mannil vantha rambai aval
Mangai antha gangai magal
Devathai oorvasiyo…..oo……oo…
Poovo penn pon vannamo

Male : Kanni thamizho kamban kaviyo
Minnal saramo pudhu mega radhamo
Azhagae konjum menagai
Vizhigal thantha thaaragai

Male : Paal pola mugam sael pola vizhi
Nool pola idai bhoompaadham varai
Padaippinil aval oru adhisayamae

Male : Manmathanum kann mayangum
Ponnizhaiththa minnal saram
Kann imaikkul en uyirai
Katti vaiththa thanga ratham

Male : Karpanaiyil ulla sugam
Arputhangal seiyyum nidham
Adhu oru ragasiyamae
Oo….oo….en edhirkaalamae

Male : Kanni thamizho kamban kaviyo
Minnal saramo pudhu mega radhamo
Azhagae konjum menagai
Vizhigal thantha thaaragai

Male : Vaan megam adhu thaen thoovi vara
Poonth devathaikku naan maalaiyida
Mathimuga rathi aval thalai kunivaal

Male : Velli malar panjanaiyil
Mella mella kaiyanaiththu
Mullaiyithazh muththangalil
Ullirukkum thaen eduththu

Male : Alli allai pangu vaiththu
Angam engum ponga vaiththu
Ilamaiyai rasiththuduvaen aa…aa…
En ananthamae

Male : Kanni thamizho kamban kaviyo
Minnal saramo pudhu mega radhamo
Azhagae konjum menagai
Vizhigal thantha thaaragai

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : கன்னித் தமிழோ கம்பன் கவியோ
மின்னல் சரமோ புது மேக ரதமோ
அழகே கொஞ்சும் மேனகை
விழிகள் தந்த தாரகை

ஆண் : மண்ணில் வந்த ரம்பை அவள்
மங்கை அந்த கங்கை மகள்
தேவதை ஊர்வசியோ…ஓ…ஓ….
பூவோ பெண் பொன் வண்ணமோ

ஆண் : கன்னித் தமிழோ கம்பன் கவியோ
மின்னல் சரமோ புது மேக ரதமோ
அழகே கொஞ்சும் மேனகை
விழிகள் தந்த தாரகை

ஆண் : பால் போல முகம் சேல் போல விழி
நூல் போல இடை பூம்பாதம் வரை
படைப்பினில் அவள் ஒரு அதிசயமே

ஆண் : மன்மதனும் கண் மயங்கும்
பொன்னிழைத்த மின்னல் சரம்
கண் இமைக்குள் என் உயிரை
கட்டி வைத்த தங்க ரதம்

ஆண் : கற்பனையில் உள்ள சுகம்
அற்புதங்கள் செய்யும் நிதம்
அது ஒரு ரகசியமே
ஓ……ஓ என் எதிர்காலமே

ஆண் : கன்னித் தமிழோ கம்பன் கவியோ
மின்னல் சரமோ புது மேக ரதமோ
அழகே கொஞ்சும் மேனகை
விழிகள் தந்த தாரகை

ஆண் : வான் மேகம் அது தேன் தூவி வர
பூந்தேவதைக்கு நான் மாலையிட
மதிமுக ரதி அவள் தலை குனிவாள்

ஆண் : வெள்ளி மலர் பஞ்சணையில்
மெல்ல மெல்ல கையணைத்து
முல்லையிதழ் முத்தங்களில்
உள்ளிருக்கும் தேன் எடுத்து

ஆண் : அள்ளி அள்ளி பங்கு வைத்து
அங்கம் எங்கும் பொங்க வைத்து
இளமையை ரசித்துடுவேன் ஆ…..ஆ….
என் ஆனந்தமே

ஆண் : கன்னித் தமிழோ கம்பன் கவியோ
மின்னல் சரமோ புது மேக ரதமோ
அழகே கொஞ்சும் மேனகை
விழிகள் தந்த தாரகை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here