Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Na. Kamarasan

Female : …………….

Male : Kannil ondru kandaen
Kaattril ondru kettaen
Moodupani kaattil aadi varum roja
Oomai nenjam yaengumpothu nee paadu
Ooril unmai thoongumpothu nee pesu

Male : Kannil ondru kandaen
Kaattril ondru kettaen
Moodupani kaattil aadi varum roja

Female : Paalum kallaai marum nee thodamalae
Paavam unnai serum nee seiyaamalae
Male : Vaazhkkai ennum aasai thaen palaavilae
Sogam sinthum yaezhai naan idho idho

Female : Nilaa kaalam ingae amaavaasai aagum
Vasanthangal mullaai valargindra kolam
Kaaladevanae idhu unthan needhiyo

Female : Kannil ondru kandaen
Kaattril ondru kettaen
Moodupani kaattil aadi varum roja

Female : Kodai naalil paadum thaen kuyilgalae
Vaadai kaattril pesum paingiligalae
Male : Pillai ullam enthan nenjil aaduthae
Pesum vaarththai endrum needhi theduthae

Female : Oraey paadhai pogum vidhi podum veedhi
Vazhiyengum sogam varaverppu koorum
Vaanaveedhiyae theeyum aanathae

Male : Kannil ondru kandaen
Kaattril ondru kettaen
Female : Moodupani kaattil aadi varum roja
Male : Oomai nenjam yaengumpothu nee paadu
Female : Ooril unmai thoongumpothu nee pesu

All : …………………..

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : நா. காமராசன்

பெண் : …………………………

ஆண் : கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா
ஊமை நெஞ்சம் ஏங்கும்போது நீ பாடு
ஊரில் உண்மை தூங்கும்போது நீ பேசு

ஆண் : கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா

பெண் : பாலும் கள்ளாய் மாறும் நீ தொடாமலே
பாவம் உன்னை சேரும் நீ செய்யாமலே
ஆண் : வாழ்க்கை என்னும் ஆசை தேன் பலாவிலே
சோகம் சிந்தும் ஏழை நான் இதோ இதோ

பெண் : நிலாக் காலம் இங்கே அமாவாசை ஆகும்
வசந்தங்கள் முள்ளாய் வளர்கின்ற கோலம்
காலதேவனே இது உந்தன் நீதியோ

பெண் : கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா

பெண் : கோடை நாளில் பாடும் தேன் குயில்களே
வாடைக் காற்றில் பேசும் பைங்கிளிகளே
ஆண் : பிள்ளை உள்ளம் எந்தன் நெஞ்சில் ஆடுதே
பேசும் வார்த்தை என்றும் நீதி தேடுதே

பெண் : ஒரே பாதை போகும் விதி போடும் வீதி
வழியெங்கும் சோகம் வரவேற்பு கூறும்
வானவீதியே தீயும் ஆனதே…

ஆண் : கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
பெண் : மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா
ஆண் : ஊமை நெஞ்சம் ஏங்கும்போது நீ பாடு
பெண் : ஊரில் உண்மை தூங்கும்போது நீ பேசு

அனைவரும் : ………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here