Singer : S. Janaki

Music by : M. S. Viswanathan

Female : Kannilae enna undu
Kangal thaan ariyum
Kannilae enna undu
Kangal thaan ariyum

Female : Kallilae eeram undu
Kangalaa ariyum
En manam ennavendru
Ennai andri yaarukku theriyum

Female : Kannilae enna undu
Kangal thaan ariyum
Kallilae eeram undu
Kangalaa ariyum

Female : {Neruppendru sonnaal
Neerilum anaiyum
Neer endru sonnaal
Neruppilum vegum} (2)

Female : Naan konda neruppu
Anaikkindra neruppu
Naan konda neruppu
Anaikkindra neruppu
Yaar anaippaaro iraivanin poruppu
En manam ennavendru
Ennai andri yaarukku theriyum

Female : Kannilae enna undu
Kangal thaan ariyum
Kallilae eeram undu
Kangalaa ariyum

Female : Selaikkul aadum
Mangayin maeni
Maenikkul aadum
Manam enum gnyaani

Female : Gnyaaniyin manamum
Aasayil thaeni
Gnyaaniyin manamum
Aasayil thaeni
Naan oru raani pengalil gnyaani
En manam ennavendru
Ennai andri yaarukku theriyum

Female : Kodaiyil oru naal
Mazhai vara koodum
Koil silaikkum
Uyir vara koodum

Female : {Kaalangalaalae
Kaariyam pirakkum} (2)
Kaariyam pirandhaal
Kaaranam vilangum
En manam ennavendru
Ennai andri yaarukku theriyum

Female : Kannilae enna undu
Kangal thaan ariyum
Kannilae enna undu
Kangal thaan ariyum

Female : {Kallilae eeram undu
Kangalaa ariyum} (2)
En manam ennavendru
Ennai andri yaarukku theriyum

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்

பெண் : கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்

பெண் : கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்

பெண் : {நெருப்பென்று சொன்னால்
நீரிலும் அணையும்
நீர் என்று சொன்னால்
நெருப்பிலும் வேகும்} (2)

பெண் : நான் கொண்ட நெருப்பு
அணைக்கின்ற நெருப்பு
நான் கொண்ட நெருப்பு
அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ
இறைவனின் பொறுப்பு
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்

பெண் : கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்

பெண் : சேலைக்குள் ஆடும்
மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும்
மனம் எனும் ஞானி

பெண் : ஞானியின் மனமும்
ஆசையில் தேனி
ஞானியின் மனமும்
ஆசையில் தேனி
நான் ஒரு ராணி
பெண்களில் ஞானி
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்

பெண் : கோடையில் ஒரு நாள்
மழை வர கூடும்
கோயில் சிலைக்கும்
உயிர் வர கூடும்

பெண் : {காலங்களாலே
காரியம் பிறக்கும்} (2)
காரியம் பிறந்தால்
காரணம் விளங்கும்
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்

பெண் : கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்

பெண் : கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here