Singer : Adithya RK

Music Director : Santhosh Narayanan

Lyricist : Uma Devi

Male : Kannile anaiyatha
Thee alai
Ennamellam alainthu
Kaarirul sooluthe

Male : Theeratha perum poraaga
Thedal sumakindra kalam

Male : Ondrirandaa pei manam
Vovvondrume or niram
Vizhiyile thengidum
Kanavugal pazhikumo
Unmaikkul thee suda
Uravukkul peridai
Ullam ennum thogai thaan
Vendridumo? venthidumo?
Yaaragumo?
Bathil naan aagumo?
Por soozhum vaazhvo
Ithuvoo…ethuvooo..oo

Male : Thanakkena vaazhnthidum
Kanakkugal pottidum
Suyanala kodugal
Thodarumo? tholaiyumo?
Oru thuli neerilum
Nilam inge pookuthe
Manithathai thorkathan
Manam inge thudikuthe
Veenagumo? uyir veenagumo?
Thirai podum en vaazhkai ithuvo
Kanavo oh oh oh oh oh oh
Oh oh oh oh oh oh oh oh
Ha ha ha

பாடகர் : ஆதித்யா ஆர் கே

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயண்

பாடல் ஆசிரியர் : உமா தேவி

ஆண் : கண்ணிலே அனையாத
தீ அலை!
என்னமெல்லாம் அலைந்து
காரிருள் சூழுதே!

ஆண் : தீராத பெரும் போராக
தேடல் சுமக்கின்ற காலம்

ஆண் : ஒன்றிரண்டா பேய் மனம்?
ஒவ்வொன்றுமே ஓர் நிரம்!
விழியிலே தேங்கிடும்
கனவுகள் பழிக்குமோ?
உண்மைக்குள் தீ சுட
உறவுக்குள் பேரிடை
உள்ளம் என்னும் தோகை தான்
வென்றிடுமோ?..
வெந்திடுமோ?.. யாராகுமோ?
பதில் நான் ஆகுமோ?
போர் சூழும் வாழ்வோ
இதுவோ எதுவோ …ஓ

ஆண் : தனக்கென வாழ்ந்திடும்
கணக்குகள் போட்டிடும்
சுயநல கோடுகள்
தொடருமோ?, தொலையுமோ?
ஒரு துளி நீரிலும்
நிலம் இங்கே பூக்குதே!
மனிதத்தை தோற்கத்தான்
மனம் இங்கே துடிக்குதே
வீணாகுமோ?
உயிர் வீணாகுமோ?
திரை போடும் என் வாழ்க்கை.. இதுவோ?
கணவோ.. இதுவோ?
ஓ-ஓ-ஓ
ஓ-ஓ-ஓ
ஒ-ஒ-ஒ-ஒ
ஒ-ஒ-ஒ-ஒ
ஹா ஹா ஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here