Singer : K. S. Chitra

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Female : Kannin maniyae kannin maniyae poraattamaa
Un kangalil enna kangalil enna neerottamaa
Penn munnettram ellaam verum pechchoduthaanaa
Pazham paattoduthaanaa adhu yaettoduthaanaa
Naalthorum paadu oomaigal thaanaa

Female : Saaththirangal penn inaththai moodi maraiththathammaa
Antha aaththiraththil bharathikkum meesai thudiththathammaa
Saaththirangal penn inaththai moodi maraiththathammaa
Antha aaththiraththil bharathikkum meesai thudiththathammaa

Female : Veedaalum penmai ingae naadaalum kaalam vanthu
Oomaigal polave endrum oyaamal kanneer sinthum

Female : Yaenendru ketkaththaan ippothu aal illai
Sama needhi serginda sattangal yaen illai
Ulagamellaam vidintha pinnum
Ungalin iravugal vidiyavillai

Female : Kannin maniyae kannin maniyae poraattamaa
Un kangalil enna kangalil enna neerottamaa
Penn munnettram ellaam verum pechchoduthaanaa
Pazham paattoduthaanaa adhu yaettoduthaanaa
Naalthorum paadu oomaigal thaanaa

Female : Kannin maniyae kannin maniyae poraattamaa
Un kangalil enna kangalil enna neerottamaa

Female : Paai virikkum paavai enna kadhal padhumaigalaa
Dhinam yaeval seiyya aadavarkku kaval adimaigalaa
Ponnalli vaiththaalthaanae poomaalai tholol yaerum
Illaatha yaezhaiyarkellaam pollaatha thanimai kolam

Female : Erigindra neraththil anaikkindra kaiyillai
Solgindra vaarththaigal ovvondrum poi illai
Kanavugalil midhanthapadi
Kalanguthu mayanguthu paruvakkodi

Female : Kannin maniyae kannin maniyae poraattamaa
Un kangalil enna kangalil enna neerottamaa
Penn munnettram ellaam verum pechchoduthaanaa
Pazham paattoduthaanaa adhu yaettoduthaanaa
Naalthorum paadu oomaigal thaanaa

Female : Kannin maniyae kannin maniyae poraattamaa
Un kangalil enna kangalil enna neerottamaa

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா……

பெண் : சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா

பெண் : வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்

பெண் : ஏனென்று கேட்கத்தான் இப்போது ஆள் இல்லை
சம நீதி சேர்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடியவில்லை…..

பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா……

பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பெண் : பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவள் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா
பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏழையர்க்கெல்லாம் பொல்லாத தனிமை கோலம்

பெண் : எரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கையில்லை
சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை
கனவுகளில் மிதந்தப்படி…………..
கலங்குது மயங்குது பருவக்கொடி……….

பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா……

பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here