Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu
Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu
Kaalamellaam paarkka venum
Aandavanthaan kaakka venum

Male : Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu

Male : Intha azhagukkenna
Arivukkenna sollammaa
Pudhu nilavaippola
Malarai pola kannammaa

Male : Vanna sarigaippattum
Nagaiyum nattum paarammaa
Enthan magalukkeedaai
Agilaththilthaan yaarammaa
Geedhai uraiththa naathan arulaal
Geedhai uraiththa naathan arulaal
Kodhai ivalin kolam vaazhga

Male : Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu

Male : Engal arumai pennin
Perumai pesum valaikkaappu
Oru kuzhanthai selvam
Varugaikkaana varaverppu

Male : Intha kizhavikkenna
Manasukkullae kummaalam
Nalla perapillai
Pirakkapogum santhosam
Paatti mugaththai paarththu sirikkum
Paatti mugaththai paarththu sirikkum
Paattan eduththaal maarbil udhaikkum

Male : Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu

Male : PIllaith tamizhai pesum
Arivai tharuvaal meenaatchi
Vantha pasiyai theerkka
Paalai pozhivaal kaamaatchi

Male : Endrum arulai tharuvaal
Porulai tharuvaal magamaayi
Nalla arumai pillai
Neethaan ammaa magaraasi
Koondhal malarum thaalisaradum
Koondhal malarum thaalisaradum
Neenda kaalam nilaiththu vaazhga….

Male : Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu
Kaalamellaam paarkka venum
Aandavanthaan kaakka venum

Male : Kannirendil mai ezhuthi
Kannaththilae pottu vachu

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு
கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு
காலமெல்லாம் பார்க்க வேணும்
ஆண்டவன் தான் காக்க வேணும்…

ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு

ஆண் : இந்த அழகுக்கென்ன
அறிவுக்கென்ன செல்லம்மா
புது நிலவைப்போல
மலரைப்போல கண்ணம்மா

ஆண் : வண்ண சரிகைப்பட்டும்
நகையும் நட்டும் பாரம்மா
எந்தன் மகளுக்கீடாய்
அகிலத்தில்தான் யாரம்மா
கீதை உரைத்த நாதன் அருளால்
கீதை உரைத்த நாதன் அருளால்
கோதை இவளின் கோலம் வாழ்க…..

ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு

ஆண் : எங்கள் அருமைப் பெண்ணின்
பெருமை பேசும் வளைக்காப்பு
ஒரு குழந்தை செல்வம்
வருகைக்கான வரவேற்பு

ஆண் : இந்த கிழவிக்கென்ன
மனசுக்குள்ளே கும்மாளம்
நல்ல பேரப்பிள்ளை
பிறக்கப்போகும் சந்தோஷம்
பாட்டி முகத்தைப் பார்த்து சிரிக்கும்
பாட்டி முகத்தைப் பார்த்து சிரிக்கும்
பாட்டன் எடுத்தால் மார்பில் உதைக்கும்

ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு

ஆண் : பிள்ளைத் தமிழைப் பேசும்
அறிவைத் தருவாள் மீனாட்சி
வந்த பசியைத் தீர்க்க
பாலைப் பொழிவாள் காமாட்சி

ஆண் : என்றும் அருளைத் தருவாள்
பொருளைத் தருவாள் மகமாயி
நல்ல அருமைப் பிள்ளை
நீதான் அம்மா மகராசி
கூந்தல் மலரும் தாலிச்சரடும்
கூந்தல் மலரும் தாலிச்சரடும்
நீண்ட காலம் நிலைத்து வாழ்க……

ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு
காலமெல்லாம் பார்க்க வேணும்
ஆண்டவன் தான் காக்க வேணும்…

ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி
கன்னத்திலே பொட்டு வச்சு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here