Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : K. H. Reddy

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Male : Kanniyur saalaiyilae..ae…ae…ae…
Ponnu kalai parikka pogaiyilae
Andha chinna machaan sevatha kannu
Ava pinnalae ..pinnalae edhukku vandhaan
Edhuku vandhaan

Male : Sollamathaan purinjikalaamae
Oru jaadaiyilae
Idhai sollamathaan purinjikalaamae
Oru jaadaiyilae
Ullam rendum onnaachi
Pudhu ullasanthaan kandaachu

Female : Sollamathaan purinjikittenae
Oru jaadaiyilae
Ullam rendum onnaachi
Pudhu ullasanthaan undaachu

Female : Summa kidantha mullai kodi
Thulli edhukku vaadudhu adhu
Male : Adi suthi padara kombai thedi
Thudichi thudichi vaadudhu

Female : Thoongaama sittu rendu
Thodarndhu enna pesudhu
Thoongaama sittu rendu
Thodarndhu enna pesudhu

Male : Adhu jodiyaana magizhchiyilae
Sondha kadhaiyai pesudhu
Suthanthiramaana koodu katti
Oru manama vaazhudhu

Female : Andha nilaiyum ..indha nilaiyum
Male : Sondha nilaiyai kilarudhae

Both : Sollamathaan purinjikalaamae
Oru jaadaiyilae
Ullam rendum onnaachi
Pudhu ullasanthaan undaachu

Female : Polladha aadu ondru
Ullae enna pakkudhu
Polladha aadu ondru
Ullae enna pakkudhu
Male : Pudhupennum maappillaiyum
Poruthamaanadhu pakkudhu

Female : Poonguyilum yaarukkaaga
Yengi yengi koovudhu
Poonguyilum yaarukkaaga
Yengi yengi koovudhu

Male : Aan kuyilai kaanamal thaan
Avasarama koovudhu
Anbu meeri mayakkathilae
Angum ingum paayudhu

Female : Andha nilaiyum.. indha nilaiyum
Male : Sondha nilaiyai kilarudhae

Both : {Sollamathaan purinjikittonmae
Namba vaazhkaiyilae
Ullam rendum onnaachi
Pudhu ullasanthaan kandaachu} (2)
Ullam rendum onnaachi
Pudhu ullasanthaan kandaachu

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

ஆண் : கன்னியூர் சாலையிலே ஏ ..ஏ..ஏ..
பொண்ணு களை பறிக்கப் போகையிலே
அந்த சின்ன மச்சான் சிவத்த கண்ணு
அவ பின்னாலே எதுக்கு வந்தான்?
பின்னாலே எதுக்கு வந்தான்?
எதுக்கு வந்தான்…

ஆண் : சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே
ஒரு ஜாடையிலே
இதை சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே
ஒரு ஜாடையிலே
உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி
புது உல்லாசந்தான் கண்டாச்சு….

பெண் : சொல்லாமத்தான் புரிஞ்சுக்கிட்டேனே
ஒரு ஜாடையிலே
உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி
புது உல்லாசந்தான் உண்டாச்சு….

பெண் : சும்மா கிடந்த முல்லைக் கொடி
துள்ளி எதுக்கு வாடுது அது
ஆண் : அடி சுத்திப் படரக் கொம்பைத் தேடித்
துடிச்சி துடிச்சி வாடுது

பெண் : தூங்காம சிட்டு ரெண்டும்
தொடர்ந்து என்ன பேசுது
தூங்காம சிட்டு ரெண்டும்
தொடர்ந்து என்ன பேசுது

ஆண் : அது ஜோடியான மகிழ்ச்சியிலே
சொந்தக் கதையைப் பேசுது
சொதந்திரமான கூடுகட்டி
ஒரு மனமா வாழுது
பெண் : அந்த நிலையும்.. இந்த நிலையும்
ஆண் : சொந்த நிலையைக் கிளறுதே

இருவர் : சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே
ஒரு ஜாடையிலே
உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி
புது உல்லாசந்தான் உண்டாச்சு….

பெண் : பொல்லாத ஆடு ஒன்று
உள்ளே என்ன பாக்குது?
பொல்லாத ஆடு ஒன்று
உள்ளே என்ன பாக்குது?

ஆண் : புதுப்பெண்ணும் மாப்பிள்ளையும்
பொருத்தமான்னு பாக்குது?

பெண் : பூங்குயிலும் யாருக்காக
ஏங்கிக் ஏங்கிக் கூவுது?
பூங்குயிலும் யாருக்காக
ஏங்கிக் ஏங்கிக் கூவுது?

ஆண் : ஆண் குயிலைக் காணாமல்தான்
அவசரமாக் கூவுது
அன்பு மீறி மயக்கத்திலே
அங்குமிங்கும் பாயுது

பெண் : அந்த நிலையும்…இந்த நிலையும்……
ஆண் : சொந்த நிலையைக் கிளறுதே

இருவர் : {சொல்லாமத்தான் புரிஞ்சுக்கிட்டோமே
ஒரு ஜாடையிலே
உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி
புது உல்லாசந்தான் கண்டாச்சு….} (2)
உள்ளம் ரெண்டும் ஒண்ணாச்சி
புது உல்லாசந்தான் கண்டாச்சு..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here