Singer : T. M. Soundarajan

Music by : G. Ramanathan

Lyrics by : Kannadasan

Humming : ………..

Male : Kannukkul ethanai vellamadi
Un kannathil ethanai pallamadi
Pennukkul ethanai ullamadi
Konjam pesi vittal enna mosamadi
Konjam pesi vittal enna mosamadi
Kannukkul ethanai vellamadi…

Male : Mukkani saaru pilinthu vaithu
Adhai moodi vittaai oru adaiyittu
Sakkarai pandhalai pottu veithu
Sakkarai pandhalai pottu veithu
Vaasal saathi vittaai oru vaeliyittu
Vaasal saathi vittaai oru vaeliyittu
Kannukkul ethanai vellamadi…

Male : Aasai muluvathum thaekki veithen
Adhil aayiram karpanai aakki veithen
Aasai muluvathum thaekki veithen
Adhil aayiram karpanai aakki veithen
Paasathil naan enna baakki veithen
Paasathil naan enna baakki veithen
Endha pabathirkko ennai neekki veithaai
Endha pabathirkko ennai neekki veithaai

Male : Kannukkul ethanai vellamadi
Un kannathil ethanai pallamadi
Pennukkul ethanai ullamadi
Konjam pesi vittal enna mosamadi

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

முனங்கல் : ……………..

ஆண் : கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி?
உன் கன்னத்தில் எத்தனை பள்ளமடி?
பெண்ணுக்குள் எத்தனை உள்ளமடி?
கொஞ்சம் பேசி விட்டால் என்ன மோசமடி?
கொஞ்சம் பேசி விட்டால் என்ன மோசமடி
கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி

ஆண் : முக்கனிச் சாறு பிழிந்து வைத்து
அதை மூடி விட்டாய் ஒரு ஆடையிட்டு
சர்க்கரைப் பந்தலைப் போட்டு வைத்து
சர்க்கரைப் பந்தலைப் போட்டு வைத்து
வாசல் சாத்தி விட்டாய் ஒரு வேலியிட்டு
வாசல் சாத்தி விட்டாய் ஒரு வேலியிட்டு
கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி

ஆண் : ஆசை முழுவதும் தேக்கி வைத்தேன்
அதில் ஆயிரம் கற்பனை ஆக்கி வைத்தேன்
ஆசை முழுவதும் தேக்கி வைத்தேன்
அதில் ஆயிரம் கற்பனை ஆக்கி வைத்தேன்
பாசத்தில் நான் என்ன பாக்கி வைத்தேன்
பாசத்தில் நான் என்ன பாக்கி வைத்தேன்
எந்த பாபத்திற்கோ என்னை நீக்கி வைத்தாய்?
எந்த பாபத்திற்கோ என்னை நீக்கி வைத்தாய்?

ஆண் : கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி?
உன் கன்னத்தில் எத்தனை பள்ளமடி?
பெண்ணுக்குள் எத்தனை உள்ளமடி?
கொஞ்சம் பேசி விட்டால் என்ன மோசமடி?


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here