Singers : Unnikrishnan and Swarnalatha

Music by : Bharathwaj

Male : Kannukullae kaadhala
Kandadhum nenjil thendrala
Ennai yedho seigiraai
Ennil yedho koigiraai
Mana vayal engum indru
Mogha mazhai peigiraai
Ennai konjam sellamaaga
Nenjukkullae vaigiraai

Female : Naanghu kangal ulladhae
Un kaadhal ondru dhaan
Male : Kandukonden naanum adhai
Unnaal indru dhaan

Male : Kannukullae kaadhala
Kandadhum nenjil thendrala…aaa….

Male : Oorarindha seidhi
Kaadhal uyirai vaangum vyaadhi
Adhai varumun thadukkum
Thaduppu oosi ulagil illaiyae

Male : Unnai patri paada
Thamizhil enghu vaarthai theda
Adhan padhinettu meiyum
Panniru uyirum podhaadhallava

Male : Nee aasai mozhiyin
Nagha kann dhaan
Nee nagarndhaal
Nagarum nagaram dhaan

Female : Nee aangal jaadhiyil
Saivam dhaan
Un asaivaal naanae
Asaivam dhaan

Male : Thalaikerum bodhai
Thadumaarum pennae

Male : Kannukullae kaadhala
Kandadhum nenjil thendrala…aaa….

Chorus : …………………………….

Male : Kaaval nilayam sendru
Thookam kalavu pochu endru
En vizhigal irandum
Yaar yaar meedhoo kutram saatumae

Male : Unnai patri mella
Naan dhaan ulavu paarthu solla
Adi unnai pidithu kaaval thurai dhaan
Koondil yetrumae

Male : En imaiyai medhuvaai
Varudaadhae
En thuyilai dhinamum
Thirudaadhae

Female : Nee vizhiyaal manadhai
Uzhudhaayae
Oru vidhaiyaai neeyae
Vizhundhaayae

Male : Uyir kaadhal poovae
Nee dhaanae vaazhvae

Male : Kannukullae kaadhala
Kandadhum nenjil thendrala…aaa….
Ennai yedho seigiraai
Ennil yedho koigiraai
Mana vayal engum indru
Mogha mazhai peigiraai
Ennai konjam sellamaaga
Nenjukkullae vaigiraai

Female : Naanghu kangal ulladhae
Un kaadhal ondru dhaan
Male : Kandukonden naanum adhai
Unnaal indru dhaan

Male : Kannukullae kaadhala
Kandadhum nenjil thendrala..

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : கண்ணுக்குள்ளே காதலா
கண்டதும் நெஞ்சில் தென்றலா
என்னை ஏதோ செய்கிறாய்
என்னில் ஏதோ கொய்கிறாய்
மன வயல் எங்கும் இன்று
மோக மழை பெய்கிறாய்
என்னை கொஞ்சம் செல்லமாக
நெஞ்சுக்குள்ளே வைகிறாய்

பெண் : நான்கு கண்கள்
உள்ளதே உன் காதல்
ஒன்று தான்
ஆண் : கண்டுகொண்டேன்
நானும் அதை உன்னால்
இன்று தான்

ஆண் : கண்ணுக்குள்ளே
காதலா கண்டதும் நெஞ்சில்
தென்றலா ஆஆ

ஆண் : ஊரறிந்த செய்தி
காதல் உயிரை வாங்கும்
வியாதி அதை வருமுன்
தடுக்கும் தடுப்பு ஊசி
உலகில் இல்லையே

ஆண் : உன்னை பற்றி பாட
தமிழில் எங்கு வார்த்தை
தேட அதன் பதினெட்டு
மெய்யும் பன்னிரு உயிரும்
போதாதல்லவா

ஆண் : நீ ஆசை மொழியின்
நக கண் தான் நீ நகர்ந்தால்
நகரும் நகரம் தான்

பெண் : நீ ஆண்கள்
ஜாதியில் சைவம் தான்
உன் அசைவால் நானே
அசைவம் தான்

ஆண் : தலைக்கேறும்
போதை தடுமாறும்
பெண்ணே

ஆண் : கண்ணுக்குள்ளே
காதலா கண்டதும் நெஞ்சில்
தென்றலா ஆஆ

குழு : ……………………….

ஆண் : காவல் நிலையம்
சென்று தூக்கம் களவு போச்சு
என்று என் விழிகள் இரண்டும்
யார் யார் மீதோ குற்றம் சாட்டுமே

ஆண் : உன்னை பற்றி
மெல்ல நான் தான் உளவு
பார்த்து சொல்ல அடி உன்னை
பிடித்து காவல் துறை தான்
கூண்டில் ஏற்றுமே

ஆண் : என் இமையை
மெதுவாய் வருடாதே
என் துயிலை தினமும்
திருடாதே

பெண் : நீ விழியால்
மனதை உழுதாயே
ஒரு விதையாய் நீயே
விழுந்தாயே

ஆண் : உயிர் காதல்
பூவே நீ தானே வாழ்வே

ஆண் : கண்ணுக்குள்ளே காதலா
கண்டதும் நெஞ்சில் தென்றலா
என்னை ஏதோ செய்கிறாய்
என்னில் ஏதோ கொய்கிறாய்
மன வயல் எங்கும் இன்று
மோக மழை பெய்கிறாய்
என்னை கொஞ்சம் செல்லமாக
நெஞ்சுக்குள்ளே வைகிறாய்

பெண் : நான்கு கண்கள்
உள்ளதே உன் காதல்
ஒன்று தான்
ஆண் : கண்டுகொண்டேன்
நானும் அதை உன்னால்
இன்று தான்

ஆண் : கண்ணுக்குள்ளே
காதலா கண்டதும் நெஞ்சில்
தென்றலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here